சென்னை : போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டுகளிக் தொங்கியபடி சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பெண் ஒருவர் அடித்து இறக்கிவிட்டு பஸ் கண்டக்டர், டிரைவரை அவதூறாக பேசினார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பது தெரிய வந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து உதவி ஆணையர் தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று ரஞ்சனா நாச்சியாரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடிகையை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தற்போது நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் பொறுப்பிலும், வக்கீலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.