ஆவடி காமராஜ் நகர், கே.வி.கே. சாமி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (52) இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.
இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலதி புருஷோத்தமனிடம் கோபித்துக் கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த புருஷோத்தமன், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆவடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.