Homeசெய்திகள்விஜயின் மனமாற்றத்திற்கு காத்திருக்கும் அதிமுக: அய்யகோ பரிதாபத்தில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா கட்சி

விஜயின் மனமாற்றத்திற்கு காத்திருக்கும் அதிமுக: அய்யகோ பரிதாபத்தில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா கட்சி

-

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் சிந்தனையில் மனமாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.sasikala, eps, ops

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான தாக்குதல் என்பது கையாலாகாத செயலாகும். மலையை பார்த்து மோதும் சிறு துரும்புகள். காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது. உழைக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் உயர்வான இடத்துக்கு வரக்கூடிய சான்றுதான் அதிமுக.

விஜய்
Rajinikanth, Kamal Haasan, Vijay And Others at the Nadigar Sangam Protest To Set Up The Cauvery Management Board

இதற்கு உதாரணம் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி. ஒவ்வொரு துறைகளிலும் அரசு செயல்படவில்லை. இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குகின்றனர். மக்கள் திசை திரும்பாமல் செல்ல, தவறான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தாலும், கட்சியின் கவுரவத்தை நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்துக்கு எடுத்து களங்கம் ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்படிப்பட்டவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக ஒருங்கிணையும் என்று அவர் சொல்வதாக குறித்த கேள்வி தேவையற்றது. இது முடிந்துபோன விஷயம். நடிகர் விஜய் கட்சியை தொடங்கி உள்ளார். அவர் தலைமையில், தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்று தெரிவித்துள்ளார். இத்தனை கொள்கைகளை பிரகடனப்படுத்தி உள்ளார். காலங்கள் மாறும்.

ஒரு நேரத்தில் ஒருவருக்கு ஒரு சிந்தனை ஏற்படும். நடைமுறையில் செல்லும்போது, அந்த சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும். அடுத்த சிந்தனை ஏற்படும். அப்படி வரும்போது அவருக்கு மனமாற்றம் ஏற்படும். அந்த மனமாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

விஜய்யிடம் இருந்து அதிமுகவுக்கு கிரீன் சிக்னல் வந்துள்ளதா என்ற கேள்வி, “இப்போது அவசியம் இல்லை. இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது” என்றார்.

MUST READ