Homeசெய்திகள்அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி.... சூட்டிங் குறித்த அப்டேட்!

அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி…. சூட்டிங் குறித்த அப்டேட்!

-

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக இருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் ‘AK 62’ வை விடாமுயற்சி என்ற தலைப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
மேலும் படத்தில் அஜித் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் போஸ்டரில் ‘EFFORTS NEVER FAIL’ என்று குறிப்பிட்டிருப்பதால் விடாமுயற்சி திரைப்படம் வெறித்தனமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை.
ஏற்கனவே இந்த படம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அது தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தற்போதைய தகவலில் தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ