Homeசெய்திகள்பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழப்பு

பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழப்பு

-

சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவலாளி மீது பைக் மோதி உயிரிழந்த சோக சம்பவம் சென்னை அண்ணாநகரில் நடந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் மேற்கு மேல் நடுவாங்கரையைச் சேர்ந்தவர் 61 வயது முதியவர் குமார் பிரான்சிஸ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

பைக்  மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழப்பு

இவர் சைக்கிளில் இன்று காலை அண்ணாநகர் 2 வது அவென்யூ, 12 வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று குமார் பிரான்சிஸ் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பைக் ஓட்டி சென்ற அண்ணாநகரைச் சேர்ந்த சகாயம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன குமார் பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

MUST READ