Homeசெய்திகள்ஆந்திரா : முன்னாள் அமைச்சா்  மீது - பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி...

ஆந்திரா : முன்னாள் அமைச்சா்  மீது – பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி புகாா்.

-

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அமைச்சராக  இருந்தவர் வேலை வாங்கி தருவதாக கூறி ₹ 90 லட்சம் பணம் பெற்று பாலியல் பலாத்காரம் செய்து தற்போது கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக  பெண் காவல் நிலையத்தில் புகார்.

ஆந்திரா : முன்னாள் அமைச்சா்  மீது - பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி புகாா்.

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் விஜயவாடா பக்கிங்காம் பேட்டையை சேர்ந்த பத்மாவதி  குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மெருகு நாகார்ஜுனாவுடன்  எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது.   இந்த பழக்கத்தில் அவர்   தனது துறை தொடர்பான ஒப்பந்த பணிகளை தருவதாவும், அரசு வேலை வாங்கி தருவதாக என்னிடம்   ₹  90 லட்சம்  பெற்றுக் கொண்டார்.  ஆனால் எனக்கு எந்த ஒப்பந்தப் பணியும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பணிக்காக அவரிடம் செல்லும்போது  என்னை   நான்கு முறை கட்டாயப்படுத்தப்படுத்தி பாலியியல் பலாத்காரம் செய்ததார் என  குற்றம்சாட்டி புகார் அளித்துள்ளார்.

ஆந்திரா : முன்னாள் அமைச்சா்  மீது - பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி புகாா்.

இது குறித்து பத்மாவதி அளித்த பேட்டியில் கூறுகையில் என்னுடைய பெயர் பத்மாவதி எனக்கும்  முன்னாள் அமைச்சர் மெருகு நாகார்ஜுனாவிடம் பழக்கம் ஏற்பட்டது அந்த பழக்கத்தின் பேரில் அவர் எனக்கு வேலை வாங்கி தருவதாகவும் அவரது துறையில் வரும்  ஒப்பந்த பணிகளை பெற்று தருவதாக கூறினார். அதற்காக என்னிடம்  சிறிது சிறிதாக 90  லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டார். இந்த வேலை விவகாரம் குறித்து அவரிடம் பேச முயன்றபோது  அவரது உதவியாளர் முரளிமோகன் ரெட்டி  நான்  நேரில் வர வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார்.  அவ்வாறு அழைத்து சென்று என்னை அமைச்சர் இருந்த காரில் வைத்துப் பூட்டி விட்டு முரளி மோகன் சென்று விட்டார். அதன்பிறகு என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அவ்வாறு நான்கு முறை  பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். தற்போது பணத்திற்கு என்னால் வட்டி கட்ட  முடியவில்லை .எனது பணத்தை தரும்படி கேட்டதற்கு அவர்கள் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மலைவாழ்மக்கள் நலத்துறை ஆசிரியர் கங்கா பவானி என்பவரையும் இதேபோன்று பணம் கேட்டதால் அவரை சாகடித்து விட்டோம்.

சென்னையில் மேலும் 7 புதிய பேருந்து நிலையங்கள் திறக்க திட்டம் -அமைச்சர் சேகர்பாபு

அதேபோன்று உன்னையும் கொன்று விடுவோம் என்று உதவியாளர் முரளி மோகன் மிரட்டுகிறார். முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவண் கல்யாண் என்னை காப்பாற்றி எனது பணத்தை மீட்டு தர வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் அண்ணா நீங்கள் நல்லவர் என்று என்னை போன்றவர்கள் பலர் உங்களை நம்பி உங்களுக்கு துணையாக இருந்தோம். ஆனால் உங்கள் ஆட்சியில்  இவர்களை போன்றோா் பெண்களை ஏமாற்றி அவர்களை பயண்படுத்தி கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுபோன்றவர்களை விலக்கி வைத்து நியாயம் கிடைக்க செய்யுங்கள் என்று கூறினாா்.

MUST READ