2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரி தாசமகான் பகுதியை சேர்ந்தவர் முகமத் சலாவுதீன் (30). இவர் இந்திய தேசிய லீக் கட்சியில் வட சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். சலாவுதீனை 2018 ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த சலாவுதீனை என்ஐஏ அதிகாரிகள் மற்றும் சென்னை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சலாவுதீன் சென்னை ஓட்டேரி தாசமகான் பகுதியில் ராப்பானி டிரஸ்ட்க்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து கொண்டு ரப்பானி டிரஸ்ட் இயக்குநர் முகமது அலாதீன் (74) என்பவரிடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அதன் இயக்குநர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார்.
பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவர்களின் தண்டனைக்காலம் குறைப்பு!
அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீண்டும் ஜாமினில் வெளியே வந்த அவர் ஓட்டேரி பிரிஸ்லி நகர் 5வது தெருவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் 36 என்பவர் வைத்துள்ள சிக்கன் பக்கோடா கடையை காலி செய்ய வேண்டும் என கோகுல கிருஷ்ணனை மிரட்டி உள்ளார் மேலும் இனி கடை வைத்தால் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளார் இதனை யடுத்து கோகுலகிருஷ்ணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று காலை ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்த முகமது சலாவுதீன் ( 30 )என்ற நபரை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட முகமது சலாவுதீன் மீது வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்