Homeசெய்திகள்கட்டுரைகாடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்... சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!

காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!

-

- Advertisement -

வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அறிவித்தபடி, முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் முகுந்தனை பொறுப்பில் நியமித்ததில் ராமதாஸ் உறுதியாக உள்ளார். அதேவேளையில் சென்னை பனையூரில் பாமக மாவட்ட செயலாளர்களுடன், அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை பாமக கட்சியை நடத்த போகிறவர் அன்புமணிதான். அதனால் கட்சி நிர்வாகிகள் அவருடன் தான் இருப்பார்கள். ஏற்கனவே பாமக கூட்டணி டிமாண்ட் குறைந்த கட்சியாகி விட்டது. வடதமிழகத்தில் 2வது இடத்தை ஏசி சண்முகமும், சவுமியா அன்புமணியும் தான் உறுதி செய்துள்ளனர். மற்ற 15 இடங்களில் 3வது இடத்திற்கு போய்விட்டனர். சிதம்பரத்தில் டெபாசிட்டை இழந்ததுள்னர். அந்த நிலையில் கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், கட்சியில் எந்த பிளவும் இல்லாமல் அன்புமணி பின்னால் நிற்பது தான் சரியானது. ஆனால் வாக்காளர்களும் தொண்டர்களும் மருத்துவர் ராமதாஸ் பக்கம் இருப்பார்கள். இதனால் இருதரப்பும் விட்டுக்கொடுத்து தான் போக வேண்டும். சேர்ந்து நின்றபோதே 2009 முதல் பாமக தொடர் தோல்வியில் உள்ளது. பிரிந்து சென்றால் நிலைமை என்னாகும்?.

rஅ

ராமதாஸ், அன்புமணி இடையே உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் பாமக இரணடாக பிரிந்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். 2024ல் ராமதாஸ் உடன் வன்னியர்கள் நிற்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்துவிட கூடாது என்று தெரிவித்திருந்தேன். ஆனால் எதார்த்த சூழலில் பாமக பலவீனப்பட்டுவிட்டது. அப்படிபட்ட கட்சியில் பிளவு ஏற்படுவது என்பது அரசியல் அரங்கத்தில் முக்கியத்துவம் போய்விடும். அதனால் இருவரும் விட்டுக்கொடுத்து தான் போக வேண்டும். ஆனால் கட்சியின் கட்டுப்பாடு யார் பக்கம், யார் குடும்பம் என்று பார்த்தால் ராமதாஸ் தன் குடும்பம் என்று நினைக்கிறார். அன்புமணி ராமதாஸ் தன் குடும்பம் என்று நினைக்கிறார். ராமதாஸ் குடும்பத்தை சேர்ந்த அவரது முத்த மகளின் பேரன் முகுந்தனும், ராமதாஸ் தன் குடும்பத்தை சேர்ந்த மகன் மற்றும் மகளின் மகன் என்று பார்க்கிறார். அன்புமணியோ, தன் மனைவி, தன் குடும்பம் என்று கொண்டு செல்ல பார்க்கிறார். அதன் விளைவு தான் சவுமியா அன்புமணி இன்று போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால் அன்புமணி தனது மனைவி களத்தில் நிற்க வேண்டும் என நினைக்கிறார். அக்கா மகன் களத்தில் இறங்கும்போது சவுமியாவும் வர வேண்டும் என அன்புமணி அழுத்தம் கொடுத்து சவுமியாவை கொண்டுவந்துள்ளார். ராமதாஸ் குடும்பத்தின் ஒரு அங்கம் தான் அன்புமணி என்றாலும் ராமதாஸ் குடும்பம் Vs அன்புமணி குடும்பம் என்றுதான் ஒடுகிறது. ஆனால் ஒற்றுமையாக நின்றால்தான் ஏதாவது சாதிக்க முடியும். பிளவுபட்டடால் ஒன்றும் இல்லை. அது அனைவருக்கும் தெரியும்.

சவுமியா அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் நன்மைதான். அரசியலில் பெண்கள் முகமும், பெண் வாக்காளர்களும் முக்கியமாக உள்ளனர். பெண்களின் வாக்கு என்பது ஜெயலலிதா காலம் முதல் இன்று மு.க.ஸ்டாலின் வரை பெரிய வாக்கு வங்கியாக திகழ்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் பெண் தலைவர் தேவை என்கிற வகையில் பாமகவில் உள்ள இடத்தை சவுமியா அன்புமணி நிறைவு செய்கிறார். வன்னியர் பெண்கள் மத்தியிலும், மற்ற கட்சிக்கு செல்பவர்களை தடுக்க முடியும்.  ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் முகுந்தனை நிர்வாகியாக அறிவிக்கிறார். அதே வேளையில் சவுமியா போராட்டம் நடத்துகிறார். இருவரும் இரு தனித்தனி போர்சாக போட்டியிட்டால் கட்சிக்கு நல்லது அல்ல. அது அவர்களுக்கும் தெரியும். அன்புமணி மனைவி சவுமியா நடத்தும் போராட்டம் நல்லதுதான்.

ஆனால் வாக்குவங்கி அரசியலில் ராமதாஸ் 10.5 சதவித உள்இடஒதுக்கீட்டிற்கு குரு இருந்தால் என்ன செய்திருப்பாரோ அந்த போராட்டத்தை முகுந்தனை வைத்து முன்னெடுக்கலாம் என இருக்கிறார். ராமதாஸ்-க்கு பாமகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டது நன்றாக தெரிகிறது. அதை வன்னியர் சென்டிமென்டை வைத்து அந்த மக்களுக்கு நான் தான் என சொல்லவும். எடப்பாடி பழனிசாமி 10.5 சதவீதம் கேட்க மாட்டார். நாம்தான் அதில் நிற்போம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவும் முயற்சிக்கிறார். 2009 தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்தபோதும், பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தை திண்ணை பிரச்சாரம்  வாயிலாக முன்வைத்து 2வது இடத்திற்கு கொண்டுவந்தார். இப்போதும் ராமதாஸ் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளார் என்பதால்தான் நடிகர் விஜய் வந்துள்ளார். 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக எடப்பாடி பழனிசாமி வரமாட்டார். ஏனெனில் இந்த சட்டத்தை ஆதரித்தால் முக்குலத்தோர் உள்ளிட்ட மற்ற பிரிவினர் எதிர்ப்பு எழும் என பார்க்கிறார். அதனை கார்னர் செய்து, அவரிடம் இழந்த வன்னியர் வாக்குகளை பெறுவோம் என மருத்துவர் ராமதாஸ் நினைக்கிறார்.

அன்புமணி ராமதாஸ் கூட்டணி வாய்ப்பு அமைந்துவிடும் அவர்கள் தயவில் எளிதாக பயணித்துவிடலாம் என நினைக்கிறார். கூட்டணி வாய்ப்பு என்று வரும்போது நாம் அதற்கு தயார் நிலையில் இல்லை என்றால், அது பிரச்சினையாகும் என்பது ராமதாசின் நோக்கம். இது கூட்டணி தொடர்பானது. இதில் குடும்ப அரசியலும் உள்ளது. என் கட்சி எனது மகன், மகளுக்கு இடம் கொடுப்பேன் என்று ராமதாஸ் நினைக்கிறார். தனது பேரன் முகுந்தன் ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர். மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இருந்த இடத்தை நிரப்ப அன்புமணியால் மட்டும் முடியாது. அதற்கு நமக்கு ஒரு ஆள் வேண்டும். அந்த ஆள் இல்லாததால் நாம் வடதமிழகத்தில் பின்னடைவை சந்தித்து விட்டோம். பாமக பலவீனம் அடைந்து விட்டது என்பது ராமதாசுக்கு நன்றாக தெரியும். அதனை பலப்படுத்த வன்னியர் உள்இடஒதுக்கீடு தேவை,  அதற்கு முகுந்தன் அவசியப்படுகிறார்.

முகுந்தன், அந்த அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவரா என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் விழுப்புரம் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் முகுந்தன் தான். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தை அன்புமணி சரியாக நடத்தவில்லை. மேலும், அவர் கட்சியினர் இடையே நட்புணர்வுடன் பழகுவது இல்லை என்றும், முகுந்தனுக்கு அந்த திறமை உள்ளதாகவும் ராமதாஸ் கருதுகிறார். பாமகவில் நம்பர் ஒன் ராமதாஸ் என்றால், நம்பர் 2ஆக காடுவெட்டி குருதான் இருந்தார். ராமதாஸ் மகன் என்பதால் காடுவெட்டி குருவின் சம்மதத்துடன் பாமகவில் அன்புமணி நம்பர் 2ஆக வந்தார். ஆனால் காடுவெட்டி குரு வகித்த ஒருங்கிணைப்பாளர் இடம் காலியாக உள்ளதால், அந்த இடத்தை முகுந்தன் நிரப்புவார் என்று ராமதாஸ் எதிர்பார்க்கிறார். மேலும், தனது கட்சியில் தனது பேரனுக்கும் பங்கு இருக்க வேண்டும், தனது மகனுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் நினைக்கிறார். ஆனால் அன்புமணி, எதிர் காலத்தில் முகுந்தன் காடுவெட்டி குருவை போன்ற ஒரு தலைவராக உருவெடுத்தால், தனக்கு போட்டியாகி விடுவார் என்பதால் வேண்டாம் என்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ