Homeசெய்திகள்கட்டுரைவரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

வரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

-

- Advertisement -

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று பத்தரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான ஒன்றிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட தொகையை புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் வழங்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிராதன் கூறியுள்ளதற்கு பதில் அளித்து, பத்திரிகையாளர் ஜீவா வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: இவ்வளவு அப்பட்டமாக தமிழர்களுக்கு படிக்க நிதி தர முடியாது என்று மத்திய அரசு சொல்வதை எப்படி புரிந்துகொள்வது?. இந்தி, சமஸ்கிருத, இந்துத்துவ மைய நீரோட்டத்தில் இருந்து விலகி, திராவிட இயக்க அமைப்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்ற தத்துவங்களால் தனித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என டெல்லி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் உதாரணம் தேவை இல்லை. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக சொல்லிவிட்டார். எங்கள் புதிய கல்விக் கொள்கையை, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என்கிறார். அப்போது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? என்கிற கேள்வி வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களும் சேர்ந்தது தான் இந்தியா. நாம் வரி தராமல், ஜிஎஸ்டி தராமல் இந்தியா என்ற அமைப்பே கிடையாது. ஆனால் நமது உழைப்பை வாங்கி கொள்கிறார்கள். நம்ம கல்வியை வாங்கி கொள்கிறார்கள். நமது ஆங்கில அறிவை பயன்படுத்துகிறார்கள். தமிழர்களின் உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழர்களின் உழைப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் இந்தியாவுக்கு தருகிறோம். ஆனால் இவர்களுக்கு தமிழர்கள் படிக்கக்கூடாது. ஏனென்றால் இவன் தனித்துவமாக படிக்கிறான், முன்னேறுகிறான். இதிகாசங்களையும், புராணங்களையும், மத புத்தங்களையும் தேடவில்லை. அறிவியலைத்தான் பிடிக்கிறான். ஐ.டி துறை என்றால் தமிழன் தான முதல் ஆள். தொழில்துறை என்றால் ஆதிலும் தமிழன் தான் முதல் ஆளாக இருக்கிறான். அதனால் அவர்கள் தமிழர்களுக்கு உதவி செய்வதோ, தமிழர்களுடன் நிதியை பகிர்ந்து கொண்டு இந்தியா என்ற அமைப்பிற்குள் வைத்திருக்கவோ விரும்பவில்லை. எப்படி இவர்கள் மட்டும் முன்னேறுகிறார்கள் என்று பார்த்தால் பெரியார் என்ற ஒருவர் இங்கே இருக்கிறார். பெண்களை, ஒடுக்கப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் படிக்கவைத்து விட்டார். 1972 லேயே இங்கே ஒரு தலித் நீதிபதியாகி இருக்கலாம். வடமாநிலங்களில் இதுவரை தலித்  நீதிபதியாக மாறியதில்லை. இப்படி அனைத்து வகைகளிலும் இங்கே வளர்ச்சி உள்ளது.

இங்கேயும் கோவில் இருக்கிறது. சாமி குடும்கிறார்கள். ஆனால் அதை வைத்து இங்கே முஸ்லீம் வெருப்பு, கிறிஸ்துவ வெருப்பு செய்ய முடியவில்லை. இங்கே இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மூன்று மத்தினரும் அண்ணன், தம்பியாக பழகுகிறார்கள். இந்த வெறுப்புதான் உங்களுக்கு எல்லாம் நிதி தர முடியாது என்கிறார். இவர் யார் புதிய கல்வி கொள்கையை நமக்கு தருவதற்கு. புதிய கல்விக்கொள்கை வருவதற்கு முன்பு இருந்தே, இந்தியாவின் தேசிய  சராசரியை விட தமிழகத்தில் கல்வித்தரம் அதிகமாகும். பெண்கள் அதிகம் படிக்கின்ற மாநிலம். பெண்கள் அதிகம் உயர் கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு, உங்களது தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகம். அப்படி என்றால் எங்கள் வழிமுறையை தானே நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒரு பள்ளியில் படிக்காத ஒரு மாணவர் உள்ளார். அவர் கடைசி ரேங்க் எடுக்கிறார் என்றால், அவர் படிக்கும் முறையை தான் முதல் ரேங்க் எடுத்த மாணவரும் படிக்க வேண்டுமா?. அதுபோல கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் கல்வியை முறையை பின்பற்றி குஜராத், பீகார் போன்ற வடமாநிலங்களில் முன்னேற்றத்தை கொண்டு வந்திருந்தால் சரி. ஆனால் இருப்பதிலேயே மோசமாக இருக்கும் ஒரு கல்வி முறையை பின்பற்ற சொன்னால் எப்படி?

#Resign_Stalin

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் படிக்கலாம். ஆனால் புதிய கல்வி கொள்கை என்பத அதை ஒதுக்கி ஆசாரி வேலை செய்வோர், மீன் பிடிப்போர், செருப்பு தைப்போர் என 5, 6ஆம் வகுப்பு படிக்கும் போதே கல்வி திட்டத்தில் இருந்து அந்த மாணவர்களை ஒதுக்கி, நீங்கள் இதையும் செய்யுங்கள் என்று சொல்வார்கள். இந்த வேலையை எல்லாம் அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் செய்வார்களா? மரவேலை, உடல் உழைப்பு போன்றவற்றை ஏற்கனவே அந்த வேலைகளை செய்யும் பெற்றோருக்கு பிறந்தவர்கள் தான் ஓரளவுக்கு செய்வார்கள். அவர்களை அப்படியே அடிப்படை கல்வித் திட்டத்தில் இருந்து ஒதுக்கக்கூடிய வேலைதான் இந்த திட்டம். 5ஆம் வகுப்பில் இருந்து பாஸ், பெயில் என கொண்டுவருகிறார்கள். பெயிலாகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது. பள்ளியில் அதிகநேரம் இருக்க முடியாமல், வீட்டில் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பது. பெற்றோர் படிக்காமல் இருக்கும் குழந்தைகள் தான் பெயிலாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்களை ஒரு 10ஆம் வகுப்பு வரை  கொண்டு வந்தால் அவர்களே புரிந்துகொண்டு படிப்பார்கள். அதனால் அந்த அளவுக்கு அவர்களை படிக்க விடாமல், 5, 6ஆம் வகுப்புடனே பெயில் செய்து, அவர்களை முடக்க வேண்டும் என நினைக்கிறார்கள். 2 முறை பெயில் என்றால் பின்னர் வீட்டில் உள்ளவர்களே அவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.

"மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்" என அறிவிப்பு!
File Photo

இதனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் எம்ஜிஆர், கலைஞர் மற்றும் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் ஆல் பாஸ் என்று கொண்டு வந்தனர். ஆனால் புதிய கொள்கையில் 10 வயதிலேயே பெயிலாக்கி படிப்பை முடக்கு. அவனது குலத் தொழிலை செய்ய வை என்கிறது. தமிழ்நாட்டிற்கு கல்வி சீர்திருத்தங்கள் எல்லாம் தேவையில்லை. தமிழ்நாடு ஏற்கனவே சீர் திருத்தமான கல்வி முறையில்தான் இருக்கிறது. புதிய கல்வி கொள்கை என்பது இங்கிருக்கும் 10,11,12 என்ற தேர்வு முறையை மாற்றி, பணம் இருப்போர் மட்டும் கோச்சிங் கிளாசில் பணம் கட்டி நீட் தேர்வுக்கு படிப்பார்கள். புதிய கல்வி கொள்கையில் 5 ஆம் வகுப்போடு கிராமப்புற மாணவர்களை கல்வியை நிறுத்துவது. இதற்கு ஒத்துழைக் காவிட்டால் உனக்கு நிதி தர மாட்டேன் என்கிறார்கள். இதற்கு பேர் ஜனநாயகமா?. எவ்வளவு பெரிய சர்வாதிகாரம் பாருங்கள். தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் டெல்லிக்கும், பாஜகவுக்கும் எவ்வளவு வன்மம் இருந்தால், நிதி தர முடியாது என்று சொல்லுவார்கள். எங்களை இந்தி படிக்க சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. மொழிப்போரில் 1938ல் என்ன நடந்தது. 19968ல் என்ன நடந்தது. 2 இந்தி எதிர்ப்பு போரிலும் நீங்கள் அடிபட்டுவிட்டீர்கள். அதுபோன்ற சூழல் மீண்டும் வேணடாம் என தமிழர்கள் நினைக்கிறார்க்ள். படித்து அடுத்த தலைமுறைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் மீண்டும் தெருவில் தமிழ்நாட்டு இளைஞர்களை இறக்கி விடுவீர்களோ என்ற அச்சம் உள்ளது.

எது எதற்கோ சாட்டையை எடுத்து அடித்துக்கொண்ட அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி கிடைக்கவில்லை என்பதற்காக சாட்டையை எடுத்த அடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது தமிழ்நாட்டு மக்கள் சாட்டையை  எடுத்து விடுவார்கள். நிர்மலா சீதாராமன் நிதி கேட்டால் ஏடிஎம்-மா? உங்கள் அப்பன் வீட்டு பணமா? என்கிறார். ஏதோ அவர்கள் சொந்த பணத்தை தருவது போல இப்படி பேசுகிறார். அது எங்கள் வரிப்பணம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அறிவு, உழைப்பு, வியர்வையை வரி என்று பெற்றுக்கொள்கிறார்கள். அனைத்திலும் சரியாகவும், நேர்மையாகவும், அதிகமாகவும் இநதியாவுக்காக உழைக்கின்ற ஒரு கூட்டம் என்றால் அது தமிழர்கள் தான். படித்த தமிழர்கள் அமெரிக்கா, லண்டன் போன்று சிலர் வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் நிறைய வளைகுடா நாடுகளுக்கு சென்று, நிறைய அந்நிய செலாவணி பணம் தருவது தமிழன் தான். இப்படி தமிழர்களால் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு தமிழர்கள் படிக்க பணமே தர மாட்டேன். கேட்டால் இந்தி படி என்பது சண்டித்தனம், அடாவடித்தனம் மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

இதை திமுக மட்டும் இன்றி பாஜக எதிர்ப்பு கட்சிகளாக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி, சித்தராமையா மற்றும் பினராயி விஜயன் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அடுத்தக்கட்டமாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை மையமாக வைத்து டெல்லியில் மாநில உரிமைகளுக்கான மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்துங்கள்.  தமிழ்நாட்டின் மீது, மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இந்த அரசியலை பரப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இந்த விவகாரம் தமிழர்கள் Vs டெல்லி என்று வந்து நிற்கிறது. இன்னொரு மொழிப் போராட்டம் என்பது வெறும் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் அல்ல. ஒட்டு மொத்த மாணவர்கள், பொதுமக்கள் நடத்தும் போராட்டம்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ