Homeசெய்திகள்கட்டுரைதிமுக கூட்டணியில் சேரும் 2 புதிய கட்சிகள்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!

திமுக கூட்டணியில் சேரும் 2 புதிய கட்சிகள்… ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!

-

- Advertisement -
kadalkanni

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளதாகவும், தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் திமுக கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- திமுக அரசுக்குள்ள மக்கள் ஆதரவு காரணமாக 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேலாக வெல்லும் என கருதுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் புரோ இன்கம்பன்சி காரணமாக ஆளும் கட்சிகளே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. எதிர்க்கட்சிகள் மகளிர் உரிமைத்தொகை உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தபோதும், அரசின் நலத்திட்டங்கள் காரணமாக மீண்டும் ஆளுங்கட்சிகளே வென்றன. இதேபோல், நாமும் பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதனால் மக்கள் ஆதரவு உள்ளதாக திமுக நம்புகிறது. திமுக அரசுக்கு எதிரான ஆன்டி இன்கம்பன்சி குறித்து ஈரோடு, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின்போதும் பேசப்பட்டது. மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தலின்போதும் பேசப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எனவே அரசை எதிர்கொள்வததற்கு இங்கே புரோ இன்கம்பன்சி உள்ளது என்பதை புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகள் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

M.K.Stalin

மேலும். திமுக கூட்டணியில் கூடுதலாக கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 1998 கலைஞர் அதை  செய்யவில்லை. அப்போது, திருநாவுக்கரசர், ஜெகத்ரட்சகன் போன்றோருக்கு கலைஞர் சீட் வழங்கி, கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் கலைஞர் தற்போதுள்ள கூட்டணியே போதும் என முடிவெடுத்தார். ஆனால் வாஜ்பாய் பிரதமர் என்பதால் மக்களவை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். திமுகவுக்கும், அதிமுகவுக்கு உள்ள வாக்கு வித்தியாசம் 20 சதவீதத்துக்கு மேலாக உள்ளது. 1999, 2009 மக்களவை தேர்தல்களில் இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 5 சதவீதம் தான். அதனால் 10 சதவீதம் வாக்குகள் கொண்ட விஜயகாந்தை கூட்டணி சேர்த்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று 24 சதவீத வாக்கு வித்தியாசம் உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலை அதிமுக இரட்டை தலைமையின் கீழ் சந்தித்தது. தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி விட்டார். அந்த கட்சி 9 சதவீத இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. 2 சட்டமன்ற தொகுதிகளில் 4 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர். தளவாய் சுந்தரம் ஜெயித்த தொகுதியில் 7 சதவீத வாக்குகளும், காந்தி ஜெயித்த தொகுதியில் 3 சதவீத வாக்குகளும் தான் அதிமுகவினர் பெற்றுள்ளனர். அப்படி இருக்கையில் அதிமுகவினர் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என சொல்வது அபத்தமாக உள்ளது.

Amit Shah eps ops
Amit Shah eps ops

2019 நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவீத வாக்குகளை பெற்றதாகவும், அதேவேளையில் 2024 மக்களவைத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 20.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே வேளையில் திமுக 7 சதவீத வாக்குகளை இழந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தப்புக்கணக்கு என மு.க.ஸ்டாலின் மறுக்கிறார். நாடாளுமன்ற தேர்தல்களை மேக்ரோவாக ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த கணக்கீடு சரிதான். ஆனால் அதிமுக 2019 மக்களவை தேர்தலின்போது ராமநாதபுரத்தில் 35 சதவீத வாக்குகள் பெற்றீர்கள். இப்போது 9 சதவீதம் தானே எடுத்துள்ளீர்கள். தேனியில் 2019 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக இப்போது 13 சதவீத வாக்குகளை தான் பெற்றுள்ளது. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால் வன்னியர்கள் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோருக்காக வந்தனரே தவிர, இது நாடாளுமன்ற தேர்தலில் சேர்ப்பது தவறு.

ஒபிஎஸ் – ஈபிஎஸ் இரட்டைத் தலைமையாக இருக்கும்போது சட்டமன்றத் தேர்தலில் 33 சதவீதம் வாக்குகளை பெற்றார்கள். தற்போது மக்களவைத் தேர்தலில் 20 சதவீதம் எடுத்திருக்கிறீர்கள் என்றால் 13 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளனர். 3.8 சதவீதம் எடுத்த சீமான், தற்போது 8.2 சதவீதம் வாக்குகளை எடுத்துவிட்டார். அதிமுக ஒரு சதவீதம் தான் கூடியுள்ளது. சீமான் என்ன பிரதமர் வேட்பாளரா? 4 சதவீதம் கூடுவதற்கு. ஸ்டாலின் இழந்த 7 சதவீத வாக்குகளில் 4 சதவீதத்தை சீமான்தான் பெற்றுள்ளார். இதனால் திமுக Vs அதிமுக என்ற உங்களது அடிப்படை வாதமே அடிபட்டு போய்விட்டது அல்லவா?.

திமுக குறித்த அதே தேதியில் அதிமுக - பாஜக! தேர்தல் பரபர!
ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி

10.5 சதவீத இடஒதுக்கீட்டினால்தான் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இது பாராளுமன்ற தேர்தல் அல்ல, சட்டமன்ற தேர்தல் போலத்தான் நடைபெற்றது. 2019 மக்களவை தேர்தலில் ராகுல் பிரதமர் என திமுக பிரச்சாரம் செய்தது, ஆனால் 2024ல் ஸ்டாலின் தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டார் என வந்தனர். ஸ்டாலின் தலைமைக்கு தான் வாக்கு கேட்டனர். 47 சதவீதம் வாக்குகள் என்பது ஸ்டாலினுக்கு சட்டமன்ற தேர்தலில் ஒரு தலைவருக்கு கிடைத்தது போன்றுதான். 2014ல் ஜெயலலிதா தான் பிரதமர் என்பதை போன்று, 2024ல் ஸ்டாலின் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பார் என்ற கணக்கில் வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிமுக கூறும் அதே வேளையில் ஈரோடு இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட பொதுத் தேர்தலில் அதிமுக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் 18 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 22 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஏசி சண்முகம் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்து விட்டது. எனவே அதிமுக தனது வாக்கு சதவீதம் என்பது 33 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளது.

2014, 2024 மக்களவை தேர்தலில் பாஜக 18 சதவீதம் வாக்குகள்தான் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதைதான் அதிமுகவும் கீழே போய்விட்டது என ஸ்டாலின் குறிப்பிடுகிறார். 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா 45 சதவீதம் எடுத்த நிலையில், தற்போது 20 சதவீதம் போய்விட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் சீமான் மேலும் அதிமுகவை பலவீனப்படுத்துவார். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருந்து மாறியதால் தலித் சமூக மக்கள் சீமானுக்கு வாக்களிப்பார்கள். ஜெயலலிதா இருக்கும்போது ஒரு சதவீதம் எடுத்த சீமான் தற்போது, எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி எடுத்திருப்பது 8 சதவீதம். திமுகவின் வாக்கு சதவீதம் 53லிருந்து 47 சதவீதம் ஆக சரிந்துள்ளபோதும் அது வெற்றி வாக்கு சதவீதம். ஆனால் எடப்பாடி பழனிசாமி சீமான், அண்ணாமலை போன்றோரின் தாக்குதலில் 20 சதவீதம் வாக்குகளை காப்பாற்றுவதே சிரமம். அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததே பாஜகவுக்கு குறைவான தொகுதிகளை அதிமுக வழங்க முன்வந்தது தான்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை தெளிவாக மோடியிடம் அளித்த ரிப்போர்ட்டில் எடப்பாடி உடன் நாம் கூட்டணி அமைத்தால் நாடார்கள் வாக்களிக்க மாட்டார்கள். சீமான், மு.க.ஸ்டாலின் பின்னால் சென்றுவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது, ஒற்றைத்தலைமை என பல்வேறு காரணங்களால் முக்குலத்தோர் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர். வடக்கிலும் வன்னியர் அல்லாதவர்கள் எதிர்ப்பு உள்ளது. இதேபோல், கொங்கு வேளாளர் அல்லாதவர்கள் எதிர்ப்பும் உள்ளது. இதனுடன் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சேர்ந்தால் சீட் ஜெயிக்காது என தெரிவித்திருந்தார். அதனால் தான் அண்ணாமலை 12 இடங்கள் கேட்டார். ஆனால் 6 சீட்டுகள் தான் வழங்க முடியும் என அதிமுக கூறியதால் கூட்டணி முறிந்தது. இப்போது பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றால், 18 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கும் பாஜக 90 இடங்கள் கேட்கும். அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிப்பாரா?

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஒரு அணி அமைந்தது என்றால், அதில் தேமுதிக வந்தால் சீட் கன்வெர்ட் ஆகும். அதிமுக தலைமையிலான அணியில் பாமக வந்தால் சீட் கன்வர்ட் ஆகும். அதேவேளையில் அதிமுகவுடன் விசிக, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்தால் அந்த 2 கட்சிகளும் காலியாகி விடும். ஆனால் அவர்கள் இருவரும் திமுக கூட்டணியை விட்டு செல்ல மாட்டார்கள். தேமுதிகவுக்கு திமுகவுடன் சேர்ந்தால் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பாஜகவுடன் சேர்ந்தால் விருதுநகர், தேனி போன்ற இடங்களில் அக்கட்சி வெற்றி பெறலாம். எடப்பாடியும், ராமதாசும் சேர்ந்தால் சேலம், தருமபுரி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் சீட் கன்வெர்ட் ஆக வாய்ப்பு உள்ளது. இதனை தாண்டி அதிமுகவுக்கு சீட் கன்வெர்ட் ஆக வாய்ப்பு இல்லை.

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!

2024 மக்களவை தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணிக்கு செல்லாது என முன்பே சொல்லியிருந்தேன். காரணம் ராமதாஸ் பாமகவுக்கு இருக்கும் வன்னியர் செல்வாக்கை, எடப்பாடி பழனிசாமியை அறுவடை செய்யவிட மாட்டார் என்பது தான். மீண்டும் அதேபோல் வன்னியர் வாக்குகளை காப்பாற்ற நினைத்தால் அவர் பாஜக கூட்டணியிலேயே தொடரவும் வாய்ப்பு உள்ளது. தேமுதிகவுக்கு ஒரு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கினால் அவர்களும் பாஜக கூட்டணிக்கு வரலாம். இதற்கான வாய்ப்புகளும் உள்ளன. திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு உள்ளன. ஆனால் தேவேந்திர குல வேளாளர் விவகாரத்தில் சீமான், பாஜக ஆகியோர் உள்ளே ஊடுருவ முயற்சிக்கின்றனர். மு.க.ஸ்டாலின் இமானுவேல் சேகரன் நினைவு தினம், வெண்ணி காலாடி, சுந்தரலிங்கனார் போன்றோரின் நினைவு தினங்களுக்கு செல்கிறார். தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ் வழங்கும் விவகாரத்திலும் முனைப்பு காட்டுகிறார். அதனால் திமுக கூட்டணிக்கு கிருஷ்ணசாமி வந்தால் ஒரு இடம் வழங்க முன்வரலாம். ஸ்டாலினின் செயல் திட்டங்களுக்கு சம்மதித்தால் தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

"பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது"- அண்ணாமலை அறிவிப்பு!

எம்.ஜி.ஆர் நினைவு நாளில், அவரை பாராட்டி அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவை பலவீனப்படுத்தி வளர வேண்டும் என்பதுதான் பாஜக, அண்ணாமலையின் திட்டம். அதில் பாஜக பல ஆயுதங்களை எடுப்பார்கள். முஸ்லீம் சிறைக்கைதிகள் விடுதலை என்ற விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுத்து, கோவை அதிமுகவில் உள்ள இந்துக்களை தன்வசப்படுத்துவதற்காக தான் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். முஸ்லீம் சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அதிமுக தீர்மானம் போட்டவுடன் அண்ணாமலை இதனை கையில் எடுத்தார். மேல் சாதி, இந்துத்துவா எண்ணம் கொண்டவர்கள், ஜெயலலிதாவை ஆதரித்த பிராமணர்கள், பிற மொழியாளர்களுக்கு எம்ஜிஆர் மீது மரியாதை உள்ளது. அதை முன்னிருத்தும்போது, அதிமுகவை பலவீனப்படுத்தலாம் என்ற முயற்சியில் அண்ணாமலை ஈடுபடுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ