Homeசெய்திகள்கட்டுரைசென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

-

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் ‘ILAYARAJA MUSIC LEARNING AND RESEARCH CENTRE’ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது!

எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை; மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறது அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது – இசையமைப்பாளர் இளையராஜா!சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

சென்னை ஐஐடி சார்பில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9 வது மாநாடு இன்று (மே 20) முதல் மே 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் துவக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி இயக்குனர் காமகோடி, திரிபுரா ஆளுநர் இந்திர சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள், 70 கலைகளைச் சார்ந்த கலைஞர்கள் வல்லுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பங்கேற்போர் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும். இந்நிகழ்ச்சியை பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ – மாணவிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் மாநாட்டை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
40-க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இவ்விழாவில் ஐ.ஐ.டி மெட்ராஸில் இளையராஜா பெயரில் ilayaraja Music Learning and Research center தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

நிகழ்ச்சி மேடையில் ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில்,

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ நாம் இந்தியர் என்று சொல்ல நிறைய பெருமை இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம், பாரம்பரியம், நடனம் என வித விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சிவ வாத்தியம் என்பது மிக முக்கியமானது. தமிழக பாரம்பரிய கலைகளில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் அறிமுக கூட்டத்தின் போது தமிழக கலைகள் சேர்க்க படாதது குறித்து கேள்வி எழுந்தது, நிச்சயம் சேர்க்கப்படும் என இயக்குநர் உறுதி அளித்ததை தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

இந்திய கலாச்சார இசையை நாட்டின் எளிமையான மனிதனுக்கும் கொண்டு சென்றவர் இசைஞானி இளையராஜா.
2047 ரொம்ப முக்கியமானது. காரணம் சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஐ ஐ டி சென்னை ஆராய்ச்சி மையம் சார்பில் இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கா அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா,

இன்னைக்கு என் வாழ்க்கையில் முக்கியமான நாள். ஒரு சிறிய பையன் ( நான் தான்) இசையை கற்று கொள்ள சென்னை வந்தான். அவனுக்கும் அவங்க அண்ணன் பாஸ்கருக்கும் அவங்க அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பி வைச்சாங்க. இசையை பற்றி தெரியாது. கற்று கொள்வதற்காக வந்தான். வந்து, இதுநாள் வரைக்கும் கற்று கொண்டேனா என்றால், கற்று கொள்ளவில்லை. இந்த மாதிரி கற்று கொள்வதற்காக தேடி வந்த நான், ஒரு சென்டர் துவங்கி எல்லாருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்று துவங்கியதாகவும், நான் பிறந்த ஊரில் கற்று கொள்ள நினைத்தால், கற்று கொடுக்க ஆளில்லை. தேடினேன்.. தேடினேன்.

ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே தாகத்தை உண்டு பண்ணு. கண்டிப்பாக
தண்ணியை அவனே கண்டுபிடித்து விடுவான். படிப்பதாக இருந்தாலும் எந்த வேலையையும் செய்வதாக இருந்தாலும் அதில் ஒரு தாகம் இருக்க வேண்டும்.‌ அந்த தாகத்தோடு, இலட்சியத்தோடு முயற்சி செய்தால் எந்த இடத்தையும் சாதிக்கலாம் என்றும், எல்லோரும் சொல்கிறார்கள் நான் சாதனை ( Achieve) செய்து விட்டேன் என்று. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!அன்று கிராமத்தில் இருந்து எப்படி கிளம்பி வந்தேனோ அதே மாதிரி தான் இன்றும் இருப்பதாக உணர்கிறேன். இன்றைக்கு இந்த ஆராய்ச்சி மையத்தின் துவக்க விழா (inauguration ) தானே. inauguration என சும்மா வார்த்தையால் சொன்னால் போதுமா. Inaugurate பண்ண வேண்டாமா என்று கூறி, அவர் சொல்லி கொடுக்க, அரங்கில் இருந்தவர்களும் சேர்த்து பாடினர்.

இப்போது உங்களை எந்த அட்மிஷன் இல்லாமல் எந்த குவாலிபிகேஷன் இல்லாமல் உங்களை ஆர்வத்தோடு துவங்கி விட்டேன். இந்த மையத்தில் 200 இளையராஜா வருவார்கள் என்றும், இசை எனக்கு மூச்சாக போய் விட்டது. இசை எனக்கு இயல்பாகவே நடக்கிறது.

கிராமத்தில் இருந்து எதுவும் தெரியாமல் கற்று கொள்வதற்காக வந்து ரொம்ப ஆலோசனை செய்து ஐஐடியுடன் இதை பண்ணுவதாகவும், மேலும் பாரதியின் வரிகளை சுட்டி காட்டியவர், இன்று முக்கியமான நாள். நாங்கள் திட்டமிட்டபடி நடக்கிறது என்று இந்த மையம் நன்றாக வரும்.

MUST READ