Homeசெய்திகள்கட்டுரைஈரோட்டில் சீமானுக்கு அடி... பூத் ஏஜெண்ட் கூட இல்லாத நாம் தமிழர் கட்சி!

ஈரோட்டில் சீமானுக்கு அடி… பூத் ஏஜெண்ட் கூட இல்லாத நாம் தமிழர் கட்சி!

-

- Advertisement -

பெரியாரை எதிர்த்தால் அவருக்கு எதிரான வாக்குகள் எல்லாம் தமது கட்சிக்கு வரும் என சீமான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளும், டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் ஒரு விஷயத்தைதான் உணர்த்துகின்றன. பலமான அணியை தோற்கடிக்க வேண்டும் என்றால் மரபு சாராத வாக்கு அரசியல் உத்திகள் வேண்டும். அப்படி என்றால் கட்சிகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்புதான். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இதைவிட சிறப்பாக செயலாற்றி இருக்க முடியும். எப்படி எனில் பாஜகவுக்கு எதிராக ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் மூலமாக இதை செய்திருக்க முடியும். டெல்லியில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 6 முதல் 7 சதவீத வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை வாங்க வாங்க. அது ஆம் ஆத்மி கட்சிக்குதான் ஆபத்ததாகும். ஏனென்றால் ஆம் ஆத்மிக்கு எதிரான வாக்குகளும் பிளவுபடும், காங்கிரசுக்கு எதிரான வாக்குகளும் பிளவுபடும். அப்படி என்றால் பாஜகவின் வாக்குகள் பிளவு படவே பிளவுபடாது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக 40 இடங்களுக்கு மேல் பாஜக வந்துவிடும். டெல்லியில் ஆட்சி அமைக்கப்போது அவர்கள்தான். டெல்லியில் வெற்றி பெற்றதால் தான் ஆம் ஆத்மி கட்சிக்கான அங்கீகாரம் நாடு முழுவதும் கிடைத்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் அரவிந்த் கெஜ்ரிவாலே பல இடங்களில் பன்னடைவை சந்தித்ததை பார்த்தோம். ஒட்டு மொத்தமாக இந்த தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகிறது என்றால், பலமான எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் பழைய எதிரிகிள் ஒருங்கிணைய வேண்டும் என்பதுதான்.

இதேபோல்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பலமான கட்சி. அதை வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவது எனறால், அது வெளிப்படையாக இருக்க வேண்டும். நாம் தமிழர் வேட்பாளர், எல்லா கட்சிகளுக்குமான பொது வேட்பாளர் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். இல்லை திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணி வேட்பாளர் என்றால் எல்லா கட்சிகளும் சேர்ந்து நிறுத்த வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை. நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை ஒரு நிழல் யுத்தம் போன்று தான் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். மேலும் சமீப காலமாக சீமான் எடுக்கின்ற நிலைப்பாடுகள். ஈரோட்டில் பெரியாரை விமர்சித்து பேசிவிட்டு பெரிய அளவில் வாக்குகளை வாங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்போது, சீமான் அவரது பாதையை பெரிய அளவில் மாற்ற வேண்டும். அவர் கருத்தியல் ரீதியாக மோதும்போது பெரியாருக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள், வலதுசாரிகள், பாஜக. அந்த நிலைப்பாட்டை நாமும் எடுத்தால், அது பெரியாருக்கு எதிரான வாக்குகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் என நினைத்தார். ஆனால் அது அப்படி சேர்க்காது.

என்ன காரணம் என்றால் பெரியார் வாக்கு அரசியலில் இருந்தது கிடையாது. 1940களில் அவர் இருந்த உயரத்துக்கு, அவர் நினைத்திருந்தால் முதலமைச்சர் வேட்பாளர் ஆகி இருப்பார். 1949ல்தான் திமுக தொடங்கப்பட்டது. அவர் திமுகவின் பல தவறுகளை, கருத்தியல் முரண்பாடுகளை விமர்சித்தார். பெரியாரின் சுபாவம் என்பது எனது கருத்துக்களை ஏற்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் போங்கள் என்றுவிடுவார். அவர் ஓட்டு போட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார். ஆனால் சீமானுக்கு வாக்குகள் வேண்டும். அப்படி என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்களை முற்றிலுமாக பகைக்கிறார். மாற்று சித்தாந்தம், மாற்று பொருளாதார யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால் இந்த இடத்தில் சீமான் எடுத்த நிலைப்பாடு தவறானது.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானுக்கு 8 சதவிகிதம் வாக்குகள் ஏற்கனவே உள்ளன. தா.மா.கவுக்கு ஒரு 8 சதவீதம் வாக்குகள் உள்ளன. அதனை பாஜகவின் வாக்குகளாக வைத்தால் மொத்தம் 16 சதவீதம் வாக்குகள் சீமானுக்கு உள்ளது. அப்படி எனில் இடைத்தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 30 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருக்க வேண்டும். சீமான் பழைய 12 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக 5 ஆயிரம் வாக்குகள் கூடதலாக வாங்கியிருந்தாலும், அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. எதிர்க்கட்சிகள் சார்பாக முழுக்க முழுக்க சீமான்தான் பிரச்சாரம் மேற்கொண்டார்.  திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவில்லை. அமைச்சர் முத்துசாமி மட்டும்தான் பிரச்சாரம் செய்தார். இந்த தொகுதியில் உள்ள அதிமுக, பாஜக, விஜய் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் திமுகவுக்கு எதிராக விழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி விழவில்லை.

திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் முத்துசாமி கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம்...

இந்த தேர்தலில் பணம் நடமாட்டம் இருந்தது. கடைசி 2 நாட்களில் நிறைய பணம் கைமாறியதாக தொகுதி மக்கள் தெரிவித்தனர். நகர்புற தொகுதி என்பதால் பக்கத்து தொகுதியில் உள்ளவர்களும் வந்திருக்கலாம். அவர்களும் வாக்களித்து இருக்கலாம். இதை யார் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி. ஆனால் அந்த கட்சிக்கு பூத் ஏஜெண்டுகளே கிடையாது. அங்கு திமுக பூத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறானது. வாக்களிக்காதவர்களுக்காக குறைந்தபட்சம் 5 சதவீதம் கள்ள ஓட்டு விழுந்திருக்கும். அப்படியும் நாம் தமிழர் கட்சியினர் வீடியோ எல்லாம் போட்டிருந்தார்கள். அதிலும் உண்மை இருக்கலாம். இப்போது ஒருவர் கள்ள ஓட்டுபோட வருகிறார் என்றால், அவரை செக் செய்ய வேண்டிய பூத் ஏஜெண்ட்டுகள் தான். அடிப்படை கட்டுமானம் இல்லாமல் வாக்கு அரசியலில் வெற்றி பெறவே முடியாது.

பூத் ஏஜெண்ட்டுகள் காலை மாதிரி வாக்குப்பதிவு தொடங்கும்போதே வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டும். காலை முதல் இரவு 8 மணி வரை வாக்குச் சாவடியிலேயே இருக்க வேண்டும். கடைசியில் பார்மில் கையெழுத்து போடும் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். இது எத்தனையோ ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருந்தால் தான் வசப்படும். தமிழ்நாட்டில் அந்த கலை  திமுக, அதிமுகவுக்கு தான் வசப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு இன்னும் பூத் ஏஜெண்ட் கலையே கிடையாது. இன்னும் நாம் தமிழர் கட்சிக்கே பூத் ஏஜெண்ட்டுகள் கிடையாது.  ஈரோடு தேர்தலில் பத்திரிகையாளர் நண்பர் ஒருவரின் வாக்கை மாற்றி போட்டுவிட்டனர். அவர் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, ஆட்சியர், பூத் ஏஜெண்டுகள் யாரும் ஆட்சேபனைன தெரிவிக்காமல், தேர்தல் நடத்தும் அதிகாரி எப்படி தடுக்க முடியும் என்று கேட்டார். இது தேர்தலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் ஆகும். இதை சீமான் புரிந்துகொள்ளவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ