Homeசெய்திகள்கட்டுரைஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!

ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக நாம் நினைப்பது தவறான புரிதலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஒரு அங்கம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை இயங்கவிடாமல் முடக்குவதற்கான கருவியாக ஆளுநரை பயன்படுத்தியது. அதில் மிகச்சிறந்த கருவியாக இருந்தவர் ஏற்கனவே இருந்த ஆளுநர். அவரைவிட நான் பெரிய ஆள் என்று நிருபித்தவர் தான் ஆர்.என்.ரவி. இவர் செய்தது என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாகும். பேரறிவாளன் வழக்கில் நீதிமன்றத்தில் எந்த தடையும் இல்லாதபோது, அவர்களை விடுவிக்க சட்டமன்றம் முடிவெடுக்கும்போது, அதை நிறுத்திவைக்க நீங்கள் யார்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆளுநர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். ஆளுநர் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார் என்றால் ஒன்றிய அரசின் சார்பில் மாநில அரசின் செயல்பாடுகளை முடக்கியது தான். அதை தான் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. ஒரு முறை மாநில அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். திருப்பி அனுப்பிய மசோதாக்களை அவர்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினார்கள் என்றால்? உங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் நீங்கள் ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளீர்கள். அது அரசியலமைப்பு சட்டத்தின் படி தவறாகும் என்று தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் ஆளுநரின் நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர். இது ஆளுநருக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனமாகும்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

நீங்கள் அரசமைப்பு சட்டத்தையும், உங்களுடைய கடமைகளையும் தெரியாமல் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது. நடத்தை விதிகளை மீறியதாகவோ, பணி விதிமுறைகளை மீறியதற்காகவோ ஒருவரை நிறுவனத்தில் இருந்து நீக்கலாம். ஆனால் அரசில் இது நடைபெறாது. இதனை வைத்துக்கொண்டு ஆளுநர் இல்லாத விளையாட்டுக்களை ஆடிக் கொண்டிருந்தார். மக்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கு. இந்த அரசு எடுக்கக்கூடிய முடிவுகள் மறுபடியும் இந்த மக்களை தான் பாதிக்கும். ஆளுநருக்கு இருக்காது. அவர் ஆட்சியில் தான் மக்களுக்கு நல்லது நடைபெற்று என்று யாராவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் அவருக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நாளைக்கு ஆர்.என்.ரவியை வேறு மாநிலத்திற்கு மாற்றுகிறார்கள் அல்லது ஓய்வு பெறுகிறார் என்றால் ஒரு ஆளுநராக நீங்கள் எவ்வளவு நன்றாக செயல்பட்டீர்கள் என்று யாராவது கேட்பார்களா? ஒரு கலெக்டரை பார்த்து மக்கள் கேட்பார்கள். ஆனால் ஆளுநரை பார்த்து யாரும் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மக்களுக்கு தெரியும். ஆளுநரின் அதிகாரங்கள் என்பது மாநில அரசின் அதிகாரத்துடன் ஒன்றிணைந்ததாகும். அப்படி இருக்கும்போது ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்யக்கூடாதோ அவற்றை எல்லாம் உட்கார்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 82

மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆளுநர் என்கிற கவுரமும், அதிகாரமும் மிகுந்த பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிற பொறுப்பை  ஒவ்வொரு முறையும் நீங்கள் மீறுவதும், ஒவ்வொரு மாநில அரசுகளும் வழக்கு தொடர்வதும், ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதும்  அதற்கு பிறகுதான் நடந்துகொள்வேன் என்பது என்ன அர்த்த? 10 மசோதாக்களை அப்படியே போட்டு வைத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது. ஆளுநர் ஒரு மசோதா மீது முடிவு எடுக்க எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம். அது அவரது தனிப்பட்ட அதிகாரம் என்று பாஜக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். இன்றைக்கு ஒரு மசோதாவை அனுப்பினால் 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

assembly

சட்டமசோதா ஒப்புதலுக்கு வந்தால் அன்றைய தினமே ஒப்புதல் கொடுங்கள். அப்படி இல்லாவிட்டால் என்ன பிரச்சினை என்று வெளிப்படையாக சொல்லுங்கள். எங்கு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்புகளை எழுதி அனுபபுங்கள். அதை ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் முடிவு. அதற்கு பிறகு நீங்கள் ஒப்புதல் கொடுத்துவிடுங்கள். அதற்கு பிறகு பொதுநலம் கருதியோ அல்லது வேறு யாரோ அல்லது மத்திய அரசோ அவர்கள் நீதிமன்றத்திற்கு போகட்டும். அரசமைப்பு சட்டத்தின் படி செல்லத்தக்கது. அவ்வளவுதான். ஆனால் ஆளுநர் ரவி செய்தவை அனைத்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதுதான், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ