Homeசெய்திகள்கட்டுரைதடியா..? துப்பாக்கியா..? சலம்பும் சீமான்... சவால்விடும் கரு. பழனியப்பன்!

தடியா..? துப்பாக்கியா..? சலம்பும் சீமான்… சவால்விடும் கரு. பழனியப்பன்!

-

- Advertisement -

சனாதனத்தின் ஹோல்சேல் டீலரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவே அமைதியாக உள்ளபோது, அவர்களது பிரான்ச்சான சீமான் ஏன் பெரியார் குறித்து சலம்புகிறார் என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

karu palaniyappan
karu palaniyappan

பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் தொடர்பாக இயக்குநரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான கரு. பழனியப்பன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பெரியார் தொடர்பாக சீமான் பேசுவது இது முதன்முறை அல்ல. அவர் எப்போதும் இதுபோன்ற அவதூறுகளையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேசுவதன் மூலம் தன்மீது ஊடக வெளிச்சத்தை விழவைப்பது அவரது வழக்கமாக உள்ளது. அபத்தமான கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் சந்திப்புகளில் சீமான் மட்டும்தான் பேசுவார். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை பார்த்து நீங்கள் ஏன் அரசிடம் கேட்கவில்லை என கேள்வி எழுப்புவார். அப்படி, இப்போதும் பெரியார் தொடர்பாக அவதூறாக பேசுகிறார். பெரியார் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக கூறுகிறார். அதற்கு கோவை ராமகிருஷ்ணன் ஆதாரம் கேட்பது மிகவும் சரியானது. ஆதாரம் கேட்டால், பெரியாரின் படைப்புகளை நாட்டுமை ஆக்குங்கள் என்கிறார். பின்னர் நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக சீமான் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

இப்போது பெரியாரா? பிரபாகரனா என்று வந்து நிற்கிறார். முதலில் தலைவர்களை ஒப்பிடுவது போன்ற முட்டாள்த்தனம் எதுவுமில்லை. புத்தர் சிறந்தவரா? வள்ளலார் சிறந்தவரா? என்று ஒப்பிடுவீர்களா?. பெரியார் மீது புனித பிம்பத்தை ஏன் கட்டமைக்கிறார்கள் என்று சீமான் கேட்கிறார். அப்படி என்றால் நீங்கள் ஏன் பிரபாகரன் மீது புனித தன்மையை கட்டமைக்கிறீர்கள். பெரியாரை நான் தமிழர்களின் தலைவராக குறைகளுடன் ஏற்கிறேன். பெரியார் நீங்க புரிந்துகொள்ள அவர் பேசியதில் 2 வரிகளை விட்டு விட்டு படித்தால் அச்சமூட்டுவதாக இருக்கும். அதை எந்த காலகட்டத்தில், எந்த சூழலில் அப்படி சொன்னார் என்று பார்த்தால்தான் அதன் அர்த்தம் புரியும். பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை முழுமையாக படித்தால்தான் அதன் அர்த்தம் தெரியும். இடையில் சில வரிகளை விட்டுவிட்டு படித்தால உங்களுக்கு புரியாது. சமுதாயத்தில் சமூக நீதிகக்காவும், பெண்கள் விடுதலைக்காகவும் தொடர்ந்து பேசி கொண்டிருந்தவர். இவை இரண்டும் வேண்டாம் என நினைப்பவர்கள்தான் பெரியாரை விமர்சித்து பேசுவார்கள்.

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

பெரியார் ஏன் கர்ப்பப்பை வெட்டி எடுங்கள் என்று ஏன் சொன்னார்?. பெரியார் வாழ்ந்த காலத்தில் பெண்கள் 10 முதல் 12 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர். அப்படி பெண்கள் பிள்ளைகள் அதிகளவில் பெற்றால் அவர்களது கர்ப்பப்பை இறங்கி விடும். அப்படி இறங்கினால் பெண்களுக்கு சிறுநீரை அடக்கி வைக்க முடியாது. அதனால் இந்த கர்ப்பப் பை ஒரு தொந்தரவு, அதை அகற்றிவிட வேண்டும் என பெரியார் சொன்னார். அதுவும் 18 வயது பெண்களை அகற்ற சொல்லவில்லை. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் தனித்துவிடப்பட்டது. லிகுவான் யூ அந்நாட்டின் அதிபரானதும் செய்த முதல் வேலை வீடுகளில் உள்ள அடுப்பை மூடுங்கள் என்பதுதான். சிங்கப்பூரை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற ஆண்கள் மட்டும் உழைத்தால் போதாது என்று அவர் நினைத்தார். எனவே அவர் பெண்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் கம்யூனிட்டி கிச்சன்களை ஏற்படுத்தினார். சிலர் சமைக்க அங்கு சென்று மற்றவர்கள் சாப்பிடுங்கள் என்றார். இதை 50 வருடங்களுக்கு முன்பே பெரியார் சொல்லியிருந்தார். பெண்களை வீட்டில் சமைக்காதீர்கள். அடுப்படியிலே இருந்து சாகாதீர்கள் என்றார். இதை லிகுவாங் யூ சொன்னால் இனிக்கிறது. ஆனால் பெரியார் சொன்னால் கேட்கமாட்டீர்களா?

இந்த ஆண்டு சமூகநீதி, சுய மரியாதையின் நூற்றாண்டு ஆகும். அதேபோல், ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பிற்கும் நூற்றாண்டு ஆகும். இங்கு அவர்களது சிக்கல் என்னவென்றால் இன்னமும் ஒரு மாநிலம் சுயமரியாதை பற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான். எல்லா பயலும் சாமி கும்பிடுகிறான். ஆனால் நமக்கு வாக்களிக்க மாட்டேன்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை என்ன என்றால் இங்கு பெரியார்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதனை அசைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம். ஆனால் பெரியாரை அவர்களால் அசைக்க முடியாது. இங்குள்ள அனைவருக்கும் தெரியும். பெரியாரை நீங்கள் திட்டுவது இல்லை. பெரியார் தமிழர்களை திட்டாத திட்டு இல்லை. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை பெரியார் போன்று திட்டியவர் யாரும் கிடையாது. இஸ்லாமிய கூட்டத்திற்கு சென்று இஸ்லாம் குறித்த மாற்றுக்கருத்தை சொன்னவர். பீடி சிகெரட் வியாபாரிகள் கூட்டத்திற்கு சென்று அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பார். எங்கு பேசினாலும் கூட்டம் கேட்க வந்தவர்களை பெரியார் திட்டாமல் இருந்துள்ளாரா? அப்படிப்பட்டவரை ஏன் தமிழர்கள் ஒப்புக் கொண்டனர். ஏனென்றால் தமிழர்களுக்கு தெரியும். பெரியார் திட்டுவது நமது நன்மைக்காக என்று. அதனால்தான் அவரை தந்தை பெரியார் என்று அழைத்தனர்.

திடீரென ரஜினியை சந்தித்த சீமான்..... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சீமானின் மனமாற்றத்திற்கு காரணம்  ரஜினிகாந்த் உடனான சந்திப்புதான். ஆன்மிக அரசியல் பேசுபவர்கள் எல்லாம் ஒன்று கூடினால் இதுதான் நடக்கும். நீங்கள் தொடர்ந்து பெரியாரை விமர்சியுங்கள். அப்போதுதான் எல்லாரும் பெரியாரை படிக்க தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்கு புரியும்.  234 தொகுதிகளிலும் பெரியாரை எதிர்த்து நீங்களும், உங்கள் தீம் பார்ட்னரும் பேசுங்கள். தடியா, துப்பாக்கியா என்றா கேட்கிறார்? தமிழ் தேசியம் தனித் தமிழ்நாடு கேட்பீர்களா? கோவை  ராமகிருஷ்ணன் ஆதாரம் கேட்டு சீமான் வீட்டிற்கு வந்தார் பாருங்கள், அன்று அவர் யார் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் ராமகிருஷ்ணன் யார் என்று சீமானுக்கு தெரியும். அவர் கோவையில் ராணுவ வாகனத்தையே மறித்தவர். ஹோல்சேல் டீலரே அமைதியாக உள்ளார், பிரான்ச்சுகள் ஏன் சலம்புகிறார்கள் என்கிறார் சீமான். நானும் கேட்கிறேன். ஆர்எஸ்எஸ் பாஜக பேசாமல் இருக்கும்போது நீங்கள் ஏன் சலம்புகிறீர்கள். சீமானை தீம் பார்ட்னர் என தமிழிசை சொல்கிறார். சீமானிடம் ஆதாரம் கேட்டதற்கு நான் தருகிறேன் என அண்ணாமலை சொல்கிறார். சீமான் விரைவில் எங்களுடன் சேருவார் என அர்ஜுன் சம்பத் சொல்கிறார். சங்கி என்றால் சக நண்பன் என்று சீமான் சொன்னார். எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து ஒரே குரலில் பேசுகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ