பெண்கள் மீதான பாலியல் வன்முறையை, பாலியல் சீண்டலை நார்மலைஸ் செய்யும் விதமாக ஆணாதிக்க மனோபாவத்துடன் சீமான் பேசுவதாக பத்திரிகையாளர் சுபேர் குற்றம்சாட்டியுள்ளார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகார் விசாரணை குறித்தும், அவரது வீட்டில் சம்மன் ஒட்டசென்றபோது நிகழ்ந்த களேபரம் குறித்தும் பத்திரிகையாளர் சுபேர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்துள்ள பாலியல் புகாரில் காவல்துறை தன்னுடைய கடமையைதான் செய்து வருகிறது. பாலியல் வழக்குகளில் சாமானியனாக இருந்தால் முதலில் தூக்கிக் கொண்டு போய் நாலு தட்டுதட்டி விட்டுதான் விசாரணையே நடத்துவார்கள். சீமான் மீது பாலியல் புகாரின் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறுகிறது. ஈழத் தமிழர்களுக்காக பேசியோ, உண்ணாவிரதம் இருந்தோ, மக்கள் பிரச்சினைக்காக போராடியதற்காகவோ விசாரணை நடைபெறவில்லை. சீமான் தன்னுடன் நடித்த சக நடிகையை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட நடிகை சொல்கிறார். இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் குறித்த காலக் கெடுவிற்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிடுகிறது. அதற்கு பிறகு தமிழக காவல்துறை பெங்களுரு சென்று நடிகையிடம் வாக்குமூலம் பெறுகிறார்கள்.
அந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சீமானிடம் வாக்குமூலம் பெற வேண்டும். அப்படி பெறுவதற்காக முறைப்படி சம்மன் அனுப்பி அவரை வரவழைத்து வாக்கு மூலம் பெறுவதுதான் நடைமுறை. அதன்படிதான் நேற்று சீமானின் வீட்டில் சென்று காவல்துறையினர் சம்மனை ஒட்டியுள்ளனர். அப்படி செய்து உடன் சீமான் வீட்டின் பணியாளர் அதனை சுக்குநூறாக கிழித்தெறிகிறார். அதையும் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். உடனடியாக விருகம்பாக்கம் காவல்துறையினர், நீலாங்கரை காவல்துறையினரை தொடர்புகொண்டு தாங்கள் வழங்கிய சம்மனை கிழித்தெறிந்தது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்மனை கிழித்தவரை கைதுசெய்வதற்காக காவல்துறையினர் சீமான் வீட்டிற்கு வந்துள்ளனர். உண்மையில் சம்மனை கிழித்த நபரை இருசக்கர வாகனத்தில்தான் அழைத்துச்சென்றனர்.
காவல்துறையினர் வழக்கமாக சம்மனை போஸ்டரில்தான் அனுப்புவார்கள். இல்லாவிட்டால் நேரில் வழங்குவார்கள். ஆனால் சீமான் ஊரில் இல்லாததால் வீட்டின் கேட்டில் ஒட்டிச்சென்றனர். இதனை சீமான் கிழித்தால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் படித்துவிட்டு கிழித்தார் என்று சொல்லலாம். சீமானின் மனைவி கயல்விழி அந்த சம்மனை படிப்பதற்காக நான் கிழித்து எடுத்துவரச் சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் படிப்பதற்காக எடுக்கவில்லை. சுக்கு நூறாக கிழித்தெறிந்தார். அந்த நபர் போலீசார் விசாரணைக்காக அழைத்து உடன் வந்துவிட்டார். அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றனர். உள்ளே இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் ஏன் அங்கே சென்று நிற்கிறார் என தெரியவில்லை. அவர் ஒரு பிஸ்டல் வைத்துள்ளார். அவர் பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ளலாம். கமர்ஷியலாக வந்தால், டிஜிபி அலுவலகத்தில் சென்று உரிமம் வாங்க வேண்டும். ஆனால் அமல்ராஜ் தனது பாகாப்பிற்காக வாங்கிய துப்பாக்கியை, பாதுகாவலராக பணிபுரியும்போது அது கமர்ஷியல் ஆகிவிடும்.
அந்த வீடியோ காட்சியை பார்த்தாலே தெரியும். காவல்துறையினர் சீமான் வீட்டின் கதவை திறக்கிறார்கள். அமல்ராஜ் ராணுவ வீரர்தானே போலிசாரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டாலோ, இல்லை உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்றால் போய்விட்டு போகிறார். பிரச்சினை இல்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டு, அமல்ராஜும் தவறாக நடந்துகொண்டார். அவர் கதவை திறக்கமாட்டேன் என்று மூடியதால்தான், காவல்துறையினர் தள்ளுகின்றனர். வீட்டிற்குள் திருடன் வரவில்லை. போலீசார்தான் வந்துள்ளனர். போலீசார் கதவை தள்ளினால் திறந்துவிட்டு என்ன பிரச்சினை? நான் வர வேண்டுமா? வாங்க என்றால் முடிந்துவிட்டது. ஆனால் தள்ளுமுள்ளு செய்கிறார். அமல்ராஜே தாக்க முற்படுகிறார். போலீசார் சீருடையில் வரவில்லை என்கிறார்கள். அது ஒரு விஷயமே இல்லை. போலீசார் கூப்பிட்டபோது அமல்ராஜ் போயிருப்பார் என்றால் இவ்வளவு பிரச்சினையே இல்லையே? அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி இருப்பார்களே. அதனால் திட்டமிட்டே இந்த விகாரத்தை சீமான் மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்காக செய்கிறார்கள். இந்த பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். சட்டம் அனைவருக்கும் சமம்தானே. சீமான் சாமானியனாக இருந்திருந்தால், இந்நேரம் இந்த வழக்கில் 10 வருடம் சிறையில் இருந்திருப்பார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்மன் அனுப்பி சட்டப்படி விசாரணைக்கு அழைத்தால், அதை கிழித்தெறிந்து வீடியோ எடுத்துபோட்டு, விசாரிக்க சென்ற போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்துள்ளனர். சீமானிடம் விசாரணைக்கு சம்மன் அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது நான் வர மாட்டேன். என்ன செய்வார்கள் என்று கேட்கிறார். இதுதான் சட்டத்தை மதிப்பது நடப்பவர் பேசும் பேச்சா? மடியில் கணம் இல்லை நான் வருகிறேன். என்று விசாரணைக்கு போக வேண்டியதுதானே. எத்தனையோ அமைச்சர்கள், அரசியல்வாதிகள் விசாரணைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெண் நிர்வாகிகள் மத்தியில் பாலியல் வழக்கை நார்மலைஸ் செய்யும் விதமாக பேசுகிறார். இந்த வழக்கில் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதனிடையே, ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் வெடிகுண்டை வீசுவேன் என பேசிய விவகாரத்தில் ஈரோடு காவல்துறையினர் சம்மன் ஒட்டியுள்ளனர். நேற்று சீமான் வீட்டின் காவலாளி அமல்ராஜை சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது, வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தன்னுடைய கடமையை செய்கிறது. நீங்கள் ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் பிரச்சினை இல்லையே?. இதே அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ சோதனை செய்திருந்தால் இப்படி செய்திருப்பீர்களா?
இந்த விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்றதாகும். இதில் மாநில அரசு என்ன செய்தது? ஆனால் திமுக செய்தது என சீமான் குற்றம்சாட்டுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ஒரே வருடத்தில் 7 முறை கருக்கலைப்பு செய்தவன் நானாக தான் இருக்கும் என்று சொல்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக ஒருக்கும் வீடியோ காட்சி, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நான் பாதிக்கப்பட்ட நடிகைக்கு அவ்வப்போது பணம் கொடுத்துக்கொண்டிருந்தேன். தம்பிகளை அவ்வப்போது பணம் கொடுக்க சொன்னேன். நான் அவரை திருமணம் செய்திருந்தால் கயல்விழியை திருமணம் செய்தபோது தடுத்திருக்கலாமே என்கிறார். சீமான் இறக்கப்பட்டுத்தான் பணம் கொடுத்தேன் என்கிறார். அவருடன் நடித்த மற்ற நடிகைகளுக்கு எல்லாம் ஏன் நிதியுதவி செய்யவில்லை. அவர் 5 படங்கள் எடுத்துள்ளார். அந்த படங்களில் நடித்த நடிகைகளுக்கு எல்லாம் உதவாமல், அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்த விஜயலெட்சுமிக்கு மட்டும் உதவி செய்ததன் நோக்கம் என்ன?
கற்பழிப்பு என்பதை நார்மலைஸ் செய்ய விரும்புகிறார். ஒரு ஆணாதிக்கவாதியாக பேசுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிற பேச்சா அது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை, பாலியல் சுரண்டலை நார்மலைஸ் செய்வது என்பது தவறானது. விஜய் எப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நார்மலைஸ் செய்ய முயன்றாரோ அதுபோலவே சீமான் பாலியல் விவகாரத்தை நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.