Homeசெய்திகள்கட்டுரைஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்... அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

-

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், அவரது நோக்கம் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் நேர்மை அற்றவர்கள். வெளிப்படையாக திமுகவைதான் விமர்சித்தேன் என கூறினாள் என்ன? இவர் திமுகவை தான் விமர்சனம் செய்கிறார்.இந்த ஆட்சியைத்தான் விமர்சனம் செய்கிறார். நான் எதிர்பார்த்தது போல இந்த ஆட்சி இல்லை என்று கூறுகிறார். அதை கேட்டால் ஆமாம் என்று சொல்ல வேண்டியது தானே. ஆதவ் அர்ஜுனாவுக்கு மகாபெரியவரிடம் எடுத்துக்கொள்ள கூடிய பாங்கு உள்ளது என்றால் அவர் எப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்க முடியும். ராமானுஜர் குறித்து கலைஞர் எழுதினார் என்றால் அதன் பின்னால் மிகப்பெரிய வரலாறு உள்ளது. ராமானுஜர் பிறப்பால் பிராமணர் என்றபோதும் அவர் சனாதனத்திற்கு எதிராக ஒழுங்கை உடைக்கும் வேலையில் ஈடுபட்டவர். ஆனால் மகா பெரியவரிடம் சாதி ஒழிப்புக்கூறு என்ன உள்ளது. ஆதவ் அர்ஜுனாவிடம் இப்போது வரை நேர்மை இல்லை. திமுகவிடம் இருந்து திருமாவளவனை பிரிப்பது தான் தனது நோக்கம் என ஏன் வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை.

விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டாம் என திருமாவளவனிடம், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். எ.வ.வேலு ஒரு மூத்த அரசியல்வாதி, திருமாவளன் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். நீண்டகாலமாக கூட்டணியில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் அவர் திருமாவளவனிடம் தெரிவித்திருக்கலாம். இந்த குற்றச்சாட்டுக்கு விளக்க அளித்திருந்த திருமாவளவன், நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இருந்த காலகட்டம் வேறு, சூழல் வேறு அதன் பிறகு நடந்தவை வேறு என தெரிவித்திருந்தார். அவ்வாறு எ.வ.வேலு, திருமாவிடம் சொன்னது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் தவறு இல்லை. தமிழ்நாட்டிற்குள் பாஜக வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்த கருத்துக்கொண்டவர்கள் தான். விகடன் புத்தக வெளியீட்டு விழா உண்மையில் அம்பேத்கருக்காக நடத்தப்பட்ட விழாவா? திருமாவளவனுக்கு தூண்டில் போடும் விழாவா? அல்லது திமுகவை உடைக்கும் விழாவா என்று கேட்டால் அது திமுகவை சீண்டிப்பார்க்கும் விழாதான்.

அந்த நிகழ்ச்சியை கொண்டாடியவர்கள், திருமாவளவன் ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பியவர்கள்  யாருமே அம்பேத்கரியவாதிகள் கிடையாது. இதற்கு முன்பாக இவர்கள் அம்பேத்கருக்கு குரல் கொடுத்தவர்களும் கிடையாது. இவர்களுக்கு திமுகவை அழிக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் வெற்றி என்னவென்றால், திராவிட இயக்க கருத்துக்களை பேசிதான், அந்த இயக்கங்களையே விமர்சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தலித் அரசியல், பெண் விடுதலை போன்றவற்றை பேசிதான் திராவிட இயக்கங்கள் இவற்றை எல்லாம் செய்ததா என கேள்வி எழுகிறது. இதை பெரியாரின் வெற்றியாகவே நான் பார்க்கிறேன். ஆனால் இவர்கள் இப்படி பேசியவர்கள் இல்லை. இன்று திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்பற்று, தலித் பாசம் வருகிறது. அம்பேத்கர் பாசம் வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியில் பங்கு என்ற கருத்தினை முன்வைக்கின்றனர். கடந்த 2006ல் திமுக மைனாரிட்டி அரசாக இருந்தது. அப்போது, கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. அப்படி எனில் அவர்களை திமுக அடிமையாக வைத்திருந்தது என கூறலாமா? தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் உள்ளது. திமுகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், இயல்பாகவே ஆட்சியில் பங்கு என்ற கருத்து வந்துவிடும். எனினும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திமுக, அதிமுக ஆட்சி செய்வதைதான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி என்ற சூழல் வந்தால் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே கூட்டணி அரசு என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நிறைவு செய்யும். காரணம் இங்கே கூட்டணி ஆட்சி கிடையாது ஒரு கட்சியின் ஆட்சிதான். கூட்டணி கட்சியின் ஆதரவோடுதான் வெற்றி சாத்தியம் என்றால் கூட்டணி அரசு அமையும். ஆனால் காமராஜர் காலம் தொடங்கி, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என யாருக்கும் அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டதில்லை.

பெரியாரின் பெயரை கூறி திமுக கொள்ளை அடிப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அப்படி ஆனால் ஏன் அவர்களுடன் ஆதவ் அர்ஜுனா சைக்கிளிங் சென்றார். ஆதவ் அர்ஜுனாவின் நோக்கம் கட்சியின் கட்டமைப்பை உடைப்பது. பவர் பாலிடிக்சில் திமுகவை இறக்குவது. திமுக – விசிகவை பிரிப்பது. ஏன் என்றால் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது. அதிமுக அதன் பழைய வலிமையில் இல்லை. பாஜகா, நாம் தமிழர் கட்சியினால்  தேர்தலில் வெல்ல வாய்ப்பு இல்லை. இதனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற கணக்குதான். அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றபோது சபரீசன் தன்னிடம் பேசியதாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அவர் அனைத்து அதிகார வர்க்கத்தினரிடமும் தான் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவினருக்கு மிரட்டல் விடுக்க பார்க்கிறார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

மக்கள் நல கூட்டணியினர் திமுக, அதிமுகவை விமர்சித்துவிட்டு, அவர்களுக்கு மாற்றாக விஜயகாந்தை கொண்டுவந்தனர். ஆதவ் அர்ஜுனா தற்போது அதேபோல் திமுகவை விமர்சித்துவிட்டு விஜயை கொண்டுவருகிறார். விஜயிடம் பணம், செல்வாக்கு, பேஸ் வேல்யூ உள்ளது. இதை தவிர்த்து அவர் என்ன  பெரியாதை படித்தவரா?  பெரியார் திடலில் 5 வருடத்துக்கு முன்பு வைத்த சிலை உள்ளது. ஆனால் அது பெரியாரின் அடையாளம் அல்ல. உண்மையான அடையாளம் உள்ளேதான் உள்ளது. அது விஜய்க்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் 53 வயதில் தொடங்கும் விஜயும், 19 வயதில் இந்தி எதிர்ப்புக்காக அடிவாங்கிய திருமாவளவனுடன் ஒப்பிடுவதா?.இது அவரை அசிங்கப்படுத்துவது இல்லையா?. இது பக்கா டெல்லி அஜெண்டா.  6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா பின்வாங்கியது போல தெரியவில்லை. கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன் என்கிறார். அப்படி என்றால் அவர் மீதான இடைநீக்கத்திற்கு அர்த்தம் என்ன? கூட்டணியை உடைக்காதீர்கள் என்றுதான் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை செய்வேன் என்கிறார். இதில் இருந்தே அவர் யார் என்று தெரியவில்லையா உங்களுக்கு.

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள். திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். எடப்பாடியை விஜயுடன் சேர்த்துவிடலாமா என ஒரு திட்டம் உள்ளது. எடப்பாடி- திருமாவளவன் கூட்டணி வந்துவிடாதா என்று ஒரு திட்டம் உள்ளது. விஜய் – திருமாவளவன் மட்டுமாவது இப்போதைக்கு தனித்து நின்றால் போதும் என நினைக்கிறார்கள். திமுகவுக்கு பெரும்பான்மை வந்துவிடக்கூடாது. அதிமுகவை பலப்படுத்த வேண்டும். மக்கள் நலக்கூட்டணி அமைத்து தான் 10 ஆண்டுகள் திமுகவை ஆட்சிக்கு வர முடியாமல் தடுத்தனர். மீண்டும் அதேபோன்ற ஒரு சூழலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். திமுகவுக்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த கட்சி இன்று இல்லை. அதனால் திமுகவை உடைத்துவிட வேண்டும் என துடிக்கின்றனர். செந்தில்பாலாஜியை கைது செய்து முயற்சித்தார்கள், பொன்முடி போன்ற சீனியர்களை மிரட்டி ஷிண்டே, அஜித்பவார் போன்று கட்சியை உடைக்கலாம் என பாரத்தார்கள். ஆனால் அது எடுபடவில்லை. அதனால் தற்போது திருமாவளவனை வைத்து நடத்த பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

MUST READ