Homeசெய்திகள்கட்டுரைஒவ்வொரு கட்சியிலும் ஆதவ் குடும்பத்தினர்... விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்... பத்திரிகையாளர் சுமன் கவி பகீர்...

ஒவ்வொரு கட்சியிலும் ஆதவ் குடும்பத்தினர்… விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்… பத்திரிகையாளர் சுமன் கவி பகீர் தகவல்!

-

- Advertisement -

ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவர் விஜய் கட்சியில் சேரும்பட்சத்தில் விஜயின் அந்தரங்க ரகசியங்கள் வெளியாகும் அச்சம் உள்ளதாகவும் சுமன் கவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் அடுத்தக்கட்டமாக எந்த கட்சியில் சேருவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், அவர் அதிமுகவுக்கு செல்லும் வாயப்பு குறைவு தான் என்று பத்திரிகையாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு, சுமன் கவி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திருமாவளவனுக்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பேசுவது நல்லது போல தோன்றலாம். ஆனால் அது கட்சியின் கட்டமைப்புக்கு எதிரானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்களை எதார்த்தத்தில் செயல்படுத்த தெரிந்தவருக்கு ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என தெரியாதா?. விளிம்பு நிலை மக்களுக்கான அதிகாரம் என்பது எந்த அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும், எப்படி பெற முடியும் பாசிட்டிவ் ஆன வழிகள் இருந்தாலும் எக்ஸ்பெரிமெண்ட் மூலம் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி எல்லாவற்றையும் பார்த்து வந்த ஒரு தலைவர் திருமாவளவன் சொல்கிறார். ஆதவ் அர்ஜுனா சொல்வது நல்லது செய்வது போல இருக்கலாம். ஆனால் அது நன்மை அல்ல என்று.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா, தான் ஒரு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வந்தேன் என்றும், அரசுப்பள்ளியில் படித்தேன் என்றும் கூறுகிறார். விவசாயம் பொய்த்து போனதால் தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும், தங்களை போன்று ஏழையாக இருந்த திலகவதி ஐபிஎஸ், தங்களை வளர்த்ததாக தெரிவித்துள்ளார். ஏழை என்ற வார்த்தைக்கு இங்கே என்ன அளவு கோல் அவர் வைத்துள்ளார். ஒருவேளை லாட்டரி மார்ட்டின் மருமகனாக மாறிய பின்னர் திலகவதி ஐபிஎஸ் இவருக்கு ஏழையாக தெரியலாம் போல. இந்த சதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வகுப்பில் முன்னேறிய சமூகத்தினர். வர்க்கத்தால் பணம் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. அவர்கள் இன்று அதிகாரம் வேண்டும் என்பதற்காக உள்ளே இருந்து கொண்டு, மக்களுக்கு அதிகாரம் வேண்டும் என சொல்கிறார். பக்கத்து இலைக்கு பாயாசம் வையுங்கள் என கேட்பது, பக்கத்து இலைக்கு அல்ல தனது இலைக்கு பாயாசம் வையுங்கள் என்பது தான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியது, திருமாவுக்கு நெருடல் கொடுக்கக் கூடாது என்பதற்காக அல்ல. அவர் போட்ட திட்டங்கள் எல்லாம் பலிக்கவில்லை என்பது தான். ஆதவ் அர்ஜுனா தனது திட்டங்களை எவ்வளவு நுட்பமாக வைத்துள்ளார் பாருங்கள். ஒரு பக்கம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என நான் பேசுகிறேன். மறுபுறம் விஜய் கூட்டணிக்கு வாருங்கள், வாருங்கள் என அழைக்க வேண்டும். நான் திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து தூக்கிக்கொண்டு வருவேன் என்று சொன்னால் ஏமாந்து போகிற அளவுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்த திருமாவளவனுக்கு ஒன்றும் தெரியாதா?

புஷ்பா-3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுன்...

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவுதம் சன்னா வெளிப்படையாகவே சொல்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 14 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அவர்கள் 7 இடங்கள் தருவதற்கு தயாராக இருந்தததாகவும், ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் 6 இடங்களுக்கு மேல் தரக்கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், 7 இடங்கள் கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் ஜெயிக்க மாட்டார்கள் என்றும் ஆதவ் தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனது இது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தொழில்நுட்ப ரீதியான அறிவு உள்ளதாக கூறிதான் அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆதவால் கட்சிக்கு நல்லது நடக்கும் என்று நம்பினார்கள். ஆனால் அது தவறான கணிப்பாக மாறிவிட்டது. திருமாவளவன் தவறு செய்துவிட்டார். தற்போது கட்சிக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது. என்ன என்ன எல்லாம் உள்ளது. யார் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள். கட்சியின் அடுத்த திட்டம் என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தரவுகளும் ஆதவ் அர்ஜுனாவின் கையில் உள்ளது.

ஆதவ் அர்ஜுனா, விஜய் கட்சிக்கு போக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியிடமும் பேசி கொண்டிருக்கிறார். சீமான், தன்னிடம் ஆதவ் அர்ஜுனா பேசுவாரா? என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் பிரச்சினை ஏற்படுத்துவார் என்பதை உறுதிபடுத்தியுள்ளார். ஒரு கட்சிக்குள் சென்று அந்த கட்சியை கலைப்பதற்கான, கூட்டணியை உடைப்பதற்கான வேலையை செய்துவிட்டு வந்துள்ளார். எனவே அவர் எங்கு சென்றாலும் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி, அக்கட்சியின் நிர்வாகிகளை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளார். கூட்டணி என்பது எப்படி முக்கியமோ அப்படிதான் புதிய கட்சி தொடங்கியுள்ளதும். அந்த கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனாவை கொண்டு வந்து வைத்தால் என்ன ஆகும்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா – தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. ஆனால் அவர் சீமானோடும் பேசிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியுடனும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது போல, அதிமுகவில் ஆதவுக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்க முடியாது. ஐ.டி. விங் பொறுப்பு கொடுக்கலாம் என்றால், அங்கே நிர்மல் குமார் உள்ளார். எனவே ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான்.

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்றால் அவருக்கு ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. தனது ரசிகர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி ஒன்றும் இல்லை. அவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்?. அவரது இலக்கு என்ன?. மார்ட்டின் கோடிக்கணக்கில் ஊர்ப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ளார். இந்த பணத்தை பாதுகாக்க தனது குடும்பத்தில் ஒருவரை பாஜகவிலும், ஒருவரை மற்றொரு கட்சியிலும், ஒருவர் விசிகவிலும் உட்கார வைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் ஒரு ஓரு கட்சியில் இருந்து அதிகாரத்தை பெறுவார்கள். நாளை பிரச்சினை என்று வந்தால், இதன் மூலம் வந்து சரிசெய்யலாம். திருட்டுபபணத்தை பாதுகாக்க அதிகாரத்தை வேண்டுகிறார் ஆதவ். இதற்கு நாம் நாமும் கூட போக வேண்டுமா என்பதைதான் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

வடஇந்தியாவில் ஆதவ் ரெட்டி என பெயர் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வந்து சாதிப்பெயரை நீக்கிக்கொண்டு தலித் மக்களுக்கு அதிகாரத்தை வாங்கித்தர போகிறேன் என்பதெல்லாம் நடிப்புதான். அவரிடம் விஜய் தான் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஆனால் ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு சென்றால், புஸ்ஸி ஆனந்தின் நிலைதான் பாதிக்கப்படும். அவர்கள் இருவருக்கும் தான் இழுபறி ஏற்படும். தன்னை ஒரு டேட்டா அனலிஸ்ட் என்ற சொல்லிக்கொள்ளும் ஆதவ் அர்ஜுனா, விஜய் கட்சியின் தகவல்களை எல்லாம் கைப்பற்றும் அபாயம் உள்ளது. புஸ்ஸி ஆனந்த் 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டவர். ஆனால் ஆதவ் அர்ஜுனாவிடம் கார்ப்பரேட் மனநிலைதான் உள்ளது. கட்சியை ஒட்டவும், வெட்டிவிடவும் அவர் பின்னபற்றுவது காப்பரேட் மனநிலைதான். அவர் தவெகாவுக்கு வந்தால் விஜய் குறித்த அந்தரங்க விஷயங்கள் வெளியாகும் அபாயம் உள்ளது. ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் மாட்டிக்கொள்வார் என எச்சரிக்கை விடுக்கிறன்.

அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் தனி விமானத்தில் கோவா சென்றுள்ளார். இந்த வீடியோ எப்படி வெளியே வரும். அந்த அளவுக்கு விஜய் கண்காணிக்கப்படுகிறார். ஆதவ் அர்ஜுனா போன்றோர் வெளியே இருக்கும்போதே இவ்வளவு நடக்கிறது என்றால், அவரை கட்சிக்குள் விட்டால் வேலியில் சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட நிலைதான் ஏற்படும். ஆதவ் அர்ஜுனா அந்த அளவிற்கு ஆபத்தான நபர். அவர் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய அளவில் ஆபத்தை கொடுப்பார். அவர் போட்டோ, வீடியோ மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் விஜய்க்கு அச்சுறுத்தல் கொடுப்பார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ