Homeசெய்திகள்கட்டுரைபல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

-

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்
பல
போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் “மெட்ராஸ் ஸ்டேட்” தமிழ்நாடு என்று மாறியது. சுலபத்தில் பெயர் மாற்றம் நடந்துவிட வில்லை.

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக போராடி வந்தது. காங்கிரஸில் இருந்த சிலருக்கும் தமிழ்நாடு  பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதனால்தான் தமிழ்நாடு பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். அதே உண்ணாவிரதப் பந்தலில் உயிர் தியாகமும் செய்தார். அவருடைய கோரிக்கையை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்கவில்லை.

மெட்ராஸ் ஸ்டேட் மாகாணத்தில் இருந்து மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்துபோன பிறகும்கூட, தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி, தமிழர்கள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்றே எழுத வேண்டும்” என்று பெரியார் ஆவேசமாக பேசினார்.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

அதன் பிறகு, முதன்முதலில் 15 எம்எல்ஏ களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த திமுக, 1957 மே 7இல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் தீர்மானம் என்பதால், முதலமைச்சர் காமராஜர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விவாதங்கள் முடிந்ததும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தமிழ்நாடு பெயருக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தது. எதிர்த்து  127 வாக்குகள் விழுந்தது. சட்டமன்றத்தில் திமுக கொண்டுவந்த முதல் தீர்மானம் தோல்வி அடைந்தாலும்  மேடைகளிலும், கட்டுரை வாயிலாகவும் தமிழ்நாடு என்ற முழக்கத்தைத் திமுக தொடர்ந்து எழுப்பி வந்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

அதேபோன்று 1961 ஜனவரி 30இல் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஆளுங்கட்சியினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் எழுந்தது. அப்போது முதலமைச்சர் காமராஜர் அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்கக் கோரிக்கை விடுத்தார்.

அது பிரச்சனையை தாமதப்படுத்தும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். மூன்று நாள்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. வேண்டுமானால், நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடலாம் என்றது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அது முழுமையான திருப்தியைத் தரவில்லை.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

அதேபோன்று “தமிழ்நாடு”பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசியலில் பேசுபொருளாக மாற்றியது மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. அவர் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்துக் கொண்ட காங்கிரஸ், மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, மேற்குவங்கத்தை சேர்ந்த பூபேஷ் குப்தாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

அப்போது “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்புவரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, அறிஞர் அண்ணா ‘பரிபாடல்’, ‘பதிற்றுப்பத்து’, ‘மணிமேகலை’, ‘சிலப்பதிகாரம்’ உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லிப் பதிலளித்தார். கம்பரும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், ‘தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?’ என்று கேள்வி எழுப்பினார்.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

உடனே அண்ணா, ‘பார்லிமென்ட்டை லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்களோ அதே லாபத்தை பெறுவதற்காக போராடுகிறோம் என்று வாதிட்டார். அப்போதும் அந்தத் தனிநபர் மசோதா தோல்வியடைந்தது.

1963 ஜூலை 23 அன்று மீண்டும் தமிழ்நாடு தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், “மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது. பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும்” என்றார்.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

உடனே, ‘கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. அப்படியிருக்க ஒரு மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?’ என்று திமுக உறுப்பினர்கள் கேட்டனர். சட்டமன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்தத் தீர்மானமும் தோல்வியடைந்தது.

1967இல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது.  அதே வேகத்தோடு தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்ய வேண்டிய திட்டத்தையும் ஆரம்பித்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு – Tamil Nadu’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

1967 ஜூலை 18 அன்று முதலமைச்சர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அந்த தீர்மானத்தின் மீது  எதிர்கட்சி தலைவர் கருத்திருமன் பேசும் போது,“மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர், தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்ட வேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே’ என்று ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையை அண்ணா ஏற்கவில்லை. இறுதியில் தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் அண்ணா, “மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தமிழ்நாடு என்ற பெயரைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்பிவைத்தால், அதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதில் தடை ஏதும் இல்லை’ என்றனர். ஆகவே, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

மேலும், “நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதனை தொடர்ந்து ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.

MUST READ