Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக கூட்டணியா? என்டிஏ கூட்டணியா? பாஜக கேட்ட சீட்டு!  எனக்கு கிடைத்த டெல்லி தகவல்! ப்ரியன்...

அதிமுக கூட்டணியா? என்டிஏ கூட்டணியா? பாஜக கேட்ட சீட்டு!  எனக்கு கிடைத்த டெல்லி தகவல்! ப்ரியன் நேர்க்ணல்!

-

- Advertisement -

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி முன்னிலை பெற்றிருக்கிறார் என்று பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்றிருந்தது. தினகரனை சேர்த்திருந்தால் 90 இடங்கள் கிடைத்திருக்கும் என்று அமித்ஷா சொன்னார். நாடாளுமன்றத் தேர்தலில் இருவரும் தனியாக போட்டியிட்டபோது பல தொகுதிகளில் அதிமுக, பாஜக வாக்குகளை கூட்டினால் திமுகவை விட கூடுதலாக வந்தது. அதில் இருந்து அதிமுகவில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு இருந்தது. உண்மை நிலையை பாஜக மேலிடம் உணர்ந்துகொண்டது. அண்ணாமலை சொன்ன தகவல்களை பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி தலைமையில் போடக்கூடாது என்று சொல்லி பார்த்தார். ஆனால் அவரது வாதங்களை ஏற்கவில்லை. அதிமுகவில் பாஜக கூட்டணிக்கு எதிரானவர்களும் உள்ளனர். அவர்கள் விஜயுடன் கூட்டணி அமைக்கக விரும்பினார்கள். பாதிக்கு பாதி இடங்களை கேட்டார்கள். சிஎம் பதவியை பாதி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என்று விஜய் சொன்னார். ஆனால் அதனை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அதிமுக, தவெக பக்கம் போய்விடும் என்று அமித்ஷா விழித்துக்கொண்டார். எடப்பாடிக்கும், பாஜக எதிர்ப்பாளர்களை சமரசம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து 3 நிபந்தனைகளை வைத்தனர். அண்ணாமாலை மாற்றம், ஓபிஎஸ் விவகாரத்தில் தலையிடக்கூடாது மற்றொன்று எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர். அதில் எடப்பாடியின் 3 கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.

அண்ணாமலை நீக்கம் மிகவும் இழுபறியாக இருந்தது. தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று குருமூர்த்தி விரும்பினார். எதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டில் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தனர். அப்போது தென்னக பொறுப்பாளர் என்கிற பொறுப்பை ஏற்படுத்தினார்கள். இதனை அறிந்த எடப்பாடி, அண்ணாமலை தமிழ்நாடு பக்கமே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் அண்ணாமலை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்று அமித்ஷா அறிவித்த பின்னரே எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்தார். எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லை. முதல் ரவுண்டில் அதிமுக ஸ்கோர் செய்துவிட்டார். அமித்ஷாவுக்கு தற்காலிக தோல்வி ஏற்பட்டுள்ளது. தற்போது அதிமுகவின் நிலைமை என்ன என்று பார்த்தோமானால், பாஜகவினர் கோழியை பிடித்து கூண்டில் அடைத்துவிட்டனர். இதற்கு பிறகு கோழியை பிரியாணி போட்டு விடுவார்கள். தற்போதைக்கு பிரச்சினை செய்யாமல் நாகரிகமாக பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். இதே நிலைமை நீடிக்காது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது கெடுபிடிகளை காட்டலாம்.

அமித்ஷா வந்த நேரத்தில் ராமதாஸ் பிரச்சினையை கிளப்பிவிட்டார். அது திட்டமிட்டு கிளப்ப பட்டதா? அல்லது  அவர்களது குடும்பத்தின் பிரச்சினை வெடித்ததா? என்று தெரியாது. ஆனால் அதன் விளைவு அன்புமணி, அமித்ஷாவை சென்று சந்திக்கவில்லை. இதற்கு பின்னால் உள்ளடி வேலை இருப்பதாகவும் பாமக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தின் அன்புமணி மவுனமாக இருக்கிறார். அவர்கள்  அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்பை திறந்து வைத்துள்ளனர். மேலும், அதிமுக – பாஜக கூட்டணியிலும் தொடர வாய்ப்பு உள்ளது. தேமுதிக, திமுக பக்கம் சிக்னல் கொடுக்கிறார்கள். அவர்களை இழுத்துபோட பாஜகவும் முயற்சி செய்கிறார்கள். பாஜக கூட்டணியை ஒட்டுமொத்தமாக காண்பிக்க முடியவில்லை. அதுவும் அண்ணாமலை தேசிய அரசியலுக்கு போவார் என்று சொன்ன உடன்தான் எடப்பாடி பழனிசாமி வந்தார். அதிமுகவுக்கு, பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக தான் இருந்து வருகிறார்கள். மக்கள் பார்வையில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக தான் பார்க்கிறார்கள். தவெக கூட்டணியில் தங்களுடைய எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்திருந்தால் அதிமுக – தவெக கூட்டணி அமைந்திருக்கும். சீமானுடன் கூட்டணிக்கு செல்லாது.

அடுத்த பிரச்சினை எங்கே வரும் என்றால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தான். கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் எடப்பாடி ஒப்புக்கொள்ள மாட்டார்.  இது மாநில சட்டமன்ற தேர்தலாகும் மாநிலத்தில் 2வது பெரிய கட்சி அதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனியாக பெற்றது 11 சதவீதம் தான். அது காட்டுவது என்ன என்றால் எந்த தொகுதியிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் அதிமுக மொத்தமாக 150 இடங்களில் போட்டியிட்டு கொண்டு 84 இடங்களை பாஜகவிடம் கொடுத்துவிடலாம். அதில் எதாவது பிரச்சினை வரும்போதுதான் கூட்டணி மாற்றம் வரும். பாஜகவுக்கு முக்குலத்தோர் மக்களிடையே அதிருப்தி உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன் கொண்டுவரப்பட்டுள்ளார்.

எடப்பாடி கடைசி நேரத்தில் மாறுவாரா என்றால் ஊகிக்க முடியாது. இப்போது இருக்கும் நிலை நீடிக்கும். அதிமுகவில் கணிசமான தொண்டர்கள் பாஜகவை விரும்பவில்லை. ஆனால் மேலே இருக்கும் தலைவர்கள் பல காரணங்களுக்காக விரும்புகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ள நிலையில், அந்த வாக்குகளை அதிமுக – பாஜக கூட்டணி வாங்கும் என்று நம்புகிறார்கள். இந்த கூட்டணிதான் திமுகவுக்கு கடும் சவால் அளிக்கும் என மக்கள் பார்ப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த சமயத்தில் விஜய், சீமான் ஒரங்கட்டப்படுவார்கள். அந்த நேரத்தில் இந்துத்துவா வாக்குகளையும் சேர்ந்து பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். இந்த கூட்டணியில் அதிமுக ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ