2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – விஜய் கூட்டணி அமையும் என்றும், இந்த கூட்டணியில் பா.ம.க, தேமுதிக நிச்சயமாக இணையும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் சூழல் தொடர்பகாவும், நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தக்கட்ட நவடிக்கைகள் தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தனியார் இணையதள நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:- திமுக பல்வேறு எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் கடந்து வளர்ந்த கட்சி. உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் பலர் அக்கட்சியை விமர்சித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி திமுக வளர்ந்துள்ளது.
விஜய், பாஜகவை மென்மையாக எதிர்க்கிறார் அதேவேளையில் திமுகவை குடும்ப கட்சி, ஊழல் ஆட்சி என மிகக்கடுமையாக எதிர்க்கிறார். அவர் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை கைப்பற்ற முயற்சிக்கிறார். தற்போது அந்த வாக்குகள் அதிமுக வசம் தான் உள்ளது. ஆனால் அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை. இதேபோல் அதிமுகவும் விஜயை விமர்சிக்கவில்லை. சீமான் மட்டுமே விஜய்-ஐ கொள்கை ரீதியாக விமர்சிக்கிறார். மற்றவர்கள் யாரும் அவரை விமர்சிக்கவில்லை. அதிமுக – தவெக அச்சு போல் உள்ளது. பலவாராக பிரிந்து கிடக்கும் திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் 35 சதவீத வாக்குகள் உள்ள கட்சிதான் வெற்றிக்கிடைக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் 35 சதவீத வாக்குகள் இல்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்த்தால் 40 சதவீத இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனல் திமுக, பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க 35 சதவீத வாக்குகள் இருப்பது போன்ற சித்திரத்தை உருவாக்க வேண்டும். இதனால் அதிமுக – விஜய் ஓரணிக்குள் வருவார்கள். இதனை திமுக நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயை விமர்சித்தார்.
நடிகர் விஜய் ஊழல் எதிர்ப்பை முன்னிருத்தி அரசியலுக்கு வந்துள்ளார். சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற சினிமா பிரபலங்கள் அரசியலில் தோல்வியை தழுவினர். அதனால் சினிமா புகழ் அரசியலில் எடுபடாது. அது முகவரியாக இருக்குமே தவிர வாக்குகளை பெற்றுத்தராது. 2006 தேர்தலில் ஊழல் எதிர்பபை முன்னிருத்திய விஜயகாந்த், 2011-ல் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதனால் தேர்தல் வியூகங்கள் மாறலாம். விஜய், அதிமுக கூட்டணி நிச்சயம் அமையும். அதிமுகவிடம் 25 சதவீத வாக்குள் உள்ளது. கூடுதலாக 10 சதவீதம் வாக்கு தேவையென்ற நிலையில, விஜய் வந்தால் அந்த 10 சதவீத வாக்ககுள் நிச்சயமாக கிடைக்கும்.
அதேவேளையில் திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது. ஆனால் திமுக தனது ஆதரவாளர்களை அரணைத்து செல்வதில்லை. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் பழகியவர்களை அரவணைத்துச்செல்வதில் திமுக தோல்வி அடைந்துள்ளது.
அதிமுக – விஜய் கூட்டணி அமைந்தால், கூட்டணிக்கு பா.ம.க வர வாய்ப்பு உள்ளது. அவர்கள் விசிக கூட்டணி உள்ள கட்சிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. மேலும், வெற்றிபெறும் கூட்டணியிலேயே இடம்பெற விரும்புவார்கள். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, விஜய், பாமக, தேமுதிக கூட்டணி அமைவது உறுதி. இந்த கூட்டணிக்கு கூடுதலாக ஒருசில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதே தவிர, பிரிய வாய்ப்பில்லை. இக்கூட்டணியில் இடங்கள் ஒதுக்கீடு, கூட்டணிக்கு தலைமை தாங்குவது தொடர்பாக பிரச்சினை வரலாம். ஆனால் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக உள்ளதால், இந்த விவகாரத்தில் அனுசரித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் தன்னை விமர்ச்சிக்கும் சீமானை விமர்சிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.