அமித்ஷா தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வம் குருமூர்த்தியின் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் திறைமறைவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. தனது கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி கொண்டிருக்கிற எடப்பாடி சிறந்த ராஜதந்திரியா? அல்லது எடப்பாடியை செய்தியாளர் சந்திப்பில் உட்காரவைத்து பேச முடியாமல் வாயடைக்க செய்த அமித்ஷா சிறந்த ராஜதந்திரியா? என்று கேள்வி எழலாம். ஆனால் உண்மையான ராஜதந்திரி யார் என்றால் ஓ.பி.எஸ்.தான். குருமூர்த்தி வீட்டில் 3 பேர் பேசினார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியது. அவர்கள் அமித்ஷா, குருமூர்த்தி மற்றும் அண்ணாமலை ஆவர். இவர்கள் இல்லாமல் அந்த பேச்சுவார்த்தையில் 4வதாக ஒரு நபர் இருந்தார். அவர் தான் ஒபிஎஸ். குருமூர்த்தி வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் தயிர் வடை சாப்பிட்டவர் ராஜதந்திரியா? அல்லது அண்ணாமலையை நீக்கிவிட்டார்கள் என்ற உடன் அடித்துபிடித்து ஓடிவந்த எடப்பாடி ராஜதந்திரியா? ஏற்கனவே வேலுமணியிடம் சொல்லிவிட்டார்கள். அமித்ஷா வந்திருக்கார். அவரை பார்க்க நேரம் கேட்கவில்லை. அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டீர்கள் நீங்கள். சாய்ந்தரம் 7 மணிக்கு அமித்ஷா டெல்லி புறப்படுகிறார். அதற்கு பிறகு என்னிடம் எந்த விஷயத்திற்காகவும் வந்துவிடாதீர்கள் என்று சொல்லியுள்ளார்.
இதில் 2வது ராஜதந்திரி அண்ணாமலை ஆவார். பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி தவறாக பேசிவிட்டார் என்று அவரிடமே போட்டுக்கொடுத்துள்ளார். இதனால் பிரதமர் மோடி கடுமையான ஆத்திரத்தில் உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணியை கழற்றிவிட்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் மோடி, அமித்ஷா, அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை காலி பண்ணாமல் விடமாட்டார்கள். கருவாட்டு குழம்பில் கருவாட்டை ஒரே முறை கவிழுவிட்டு போட்டால் உப்பு அதிகமாக இருக்கும். அதனால் இரண்டு மூன்று முறை கருவாட்டை கழுவுவார்கள். அதன் பின்னர் உப்பு இறங்கிவிடும். அதேபோல்தான் எடப்பாடியை முதல் முறையாக கழுவி உள்ளனர். அதற்கு பின்னர் இரண்டு மூன்று முறை வாஷ் செய்துவிட்டு எடப்பாடியை தூக்கி வீசிவிடுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் வருகிறபோது எடப்பாடி முக்கிய இடத்தில் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும். இன்னும் 2 மாதங்களில் நிறைய மாற்றங்கள் நடைபெற உள்ளன.
நாம் ஏற்கனவே சொன்ன விஷயம்தான். செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்களை வைத்து காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் 3 பேர் முக்கியமானவர்கள். ஓபிஎஸ், புகழேந்தி, கே.சி.பழனிசாமி. இவர்களில் புகழேந்தி பாஜகவை எதிர்க்கும் நபர். கே.சி.பழனிசாமி, அதிமுகவுக்குள் மீண்டும் வர வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி கொண்டிருக்கிறார். அவரை பாஜக அதிமுகவுக்குள் உள்ளே கொண்டுவரப் போகிறார். ஜுன் மாதம் காலியாக போகிற ஒரு எம்.பி பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. அந்த வழக்கை வேறு ஒரு நபருக்கு சாதகமாக திருப்பி விடப் போகிறார். அந்த நபர் கட்சிக்குள் வந்த பிறகு, அதற்கு கைமாறாக கேசிபிக்கு எம்.பி. பதவி வழங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்கள் பாஜகவிடம் உள்ளது. கேசிபி, பாஜக வருவதால் கவலைப்பட மாட்டார். இவர்கள் எல்லோரையும் இழுத்துவிட்டால் பெங்களுரு புகழேந்தியை கழற்றிவிட்டு விடுவார்கள்.

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவித்துள்ளார். எடப்பாடியின் தலைமையில் அவரது வீட்டிலேயே திருட போகிறார்கள். தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறுவது தவறாகும். மருத்துவர் ராமதாஸ் பாஜக அல்லாத அதிமுக கூட்டணியை விரும்பினார். ஆனால் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்து விட்டதால் வேறு வழியின்றி பாஜக கூட்டணிக்கு செல்ல முடிவெடுத்து விட்டார். அன்புமணியை துரத்தியது துரத்தியது தான். அவர் 3 நாட்களாக வீட்டிற்கு செல்லவில்லை. அவரது 2 மகள்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். ஆனால் பெரிய மகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளார். இந்த அளவுக்கு பேசும் போதுதான் ராமதாஸ் ஆத்திரமாகி உள்ளார். பச்ச பிள்ளைகளை கூப்பிட்டு எம்எல்ஏ ஆக்கிறியா? கட்சியை உன் கையில் கொடுத்தால் உன் மனைவிக்கு எம்.பி சீட் கொடுத்து நிற்க வைக்கிறாய். அடுத்து மகள்களுக்கும் கொடுக்கப் போகிறார் என்கிறபோது, ராமதாஸ் ஆத்திரமாகிவிட்டார். உங்கள் குடும்பத்திற்கே கொடுத்தால் எப்படி கட்சியை நடத்துவது? என்று கட்சி தலைவர் பொறுப்பை பறித்துவிட்டார். தற்போது அன்புமணிக்கே சீட்டு இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலா உள்ளிட்ட நாம் நினைக்கும் அனைவரும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி தான். ஆனால் எடப்பாடி கட்சியிலேயே இருக்க மாட்டார். பாஜக ஓபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. அப்படி சொல்வதை விட எடப்பாடியை தூக்கி எறிவதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் அதிமுகவுக்குள் வந்துவிடுவார். 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடிக்கே எடப்பாடி அல்வா கொடுத்துவிட்டார். அதனால் இந்த முறை முழுமையாக லாக் செய்கிறார்கள். தற்போது எடப்பாடி டெல்லி போக போகிறார். அவரிடம் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு அதற்கு பிறகு கட்சி தலைவர் நீ இல்லை என்று சொல்ல போகிறார்கள். அதிமுக உடன்தான் கூட்டணி என்று மோடியே டிவிட்டரில் சொல்லில இருக்கிறார். அதில் எடப்பாடி, ஒபிஎஸ் என எந்த பெயரும் கிடையாது. குறிப்பாக பேசியதற்கு பிறகு கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, எம்ஜிஆரின் அதிமுக உடன் கூட்டணி என்றால் அப்போது எடப்பாடி இல்லை என்றுதானே அர்த்தம்.