Homeசெய்திகள்கட்டுரைமூத்த நிர்வாகிகளுக்கே தெரியாத கூட்டணி அறிவிப்பு! எடப்பாடிக்கு நிர்பந்தமா? உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

மூத்த நிர்வாகிகளுக்கே தெரியாத கூட்டணி அறிவிப்பு! எடப்பாடிக்கு நிர்பந்தமா? உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு நேற்று வெளியாகும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கே தெரியாது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பின் பின்னணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி. லட்சுமணன் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் ஒபிஎஸ், டிடிவி இல்லாமல்  ஜெயிக்க முடியுமா? அதனால் இது இறுதி முடிவு கிடையாது. நேற்றைக்கு அதிமுக தனது ஆளுமைத் தன்மையை இழந்துவிட்டது. கூட்டணி ஆட்சி தற்கொலைக்கு சமம் என்று தொண்டர்கள் சொல்கிறார்கள். நேற்று அதிமுக ஒருங்கிணைப்புக்கு முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா வெளிப்படையாக சொல்லவில்லை. அப்படி எந்த தலைவரும் வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள். அதிமுகவை ஒருங்கிணைத்துவிட்டுதான் அவர்கள் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமுகவை அசைத்து பார்க்கிற அளவுக்கான வலு இந்த அணிக்கு இல்லை. ஒரு கூட்டணி அமைந்தால் அதில் உற்சாகம் வர வேண்டும். அது தேர்தல் நேரத்தில் வந்தால்தான் உற்சாகம் வரும். பலவீனம் இருந்தாலும் அதை மறந்துவிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள். இன்றைக்கு ஒரு வருடம் உள்ளது. அதிமுக தொண்டர்கள் உள்ளுக்குள் புழுங்கு புழுங்கி அழுவார்கள். டெல்லியில் இருந்து வந்தவர் கூட்டணியை இப்போது அறிவிக்க வேண்டிய தேவை என்ன? என்று கூறினார். அப்போது ஒரு வாரத்தில் ஏன் கூட்டணியை அறிவித்தீர்கள்? இதனை அதிமுக தொண்டர்களுக்கு விளக்க வேண்டும் அல்லவா.

பாஜக கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக இல்லை. நேற்று அவருடைய முகம், உடல்மொழியை பார்த்தால் எங்கே அவர் மகிழ்ச்சியாக இருந்தார். மிரட்டல் என்பதை விட ஏதோ ஒன்று பெரிதாக நடைபெற்றுள்ளது. அதனால்தான் சுயநலத்திற்காக கட்சியை அடகு வைத்துவிட்டார்கள் என்று அதிமுக தொண்டர்களே விமர்சிக்கின்றனர். பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2024 தேர்தலிலே கூட்டணியை முறித்துக்கொண்டு வந்தார்கள். அண்ணாமலை ஜெயலலிதாவை திட்டினார். அதனால் கூட்டணியை முறித்ததற்காக ஓரளவு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மெகா கூட்டணி அமைப்பேன் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஏமாந்துபோனார். அன்றைக்கு ஜெயிக்கிற கூட்டணியை விட்டுவிட்டார். இன்றைக்கு பாஜகவால் ஒரு சில இடங்களில் 2-3% சதவீதம் கிடைக்குமே தவிர பெரிய அளவில பிரயோஜனம் கிடையாது. பாஜக ஒன்றும் வாக்கு வங்கியை நிரூபித்த கட்சி அல்ல. பாஜகவால் அதிமுகவுக்கு என்ன லாபம் உள்ளது? ஆனால் அதிமுகவால் பாஜகவுக்கு லாபம். அப்போது அவர்களுக்கு லாபம் சேர்க்கும் ஒரு விஷயத்திற்காக எதற்கு இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்.

நேற்று அதிமுக – பாஜக கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள் என்பது, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதாவாக இருந்தால் குறைந்தபட்சம் 4 பேரிடம் ஆலோசனை செய்திருப்பார். ஆனால் அதை கூட அவர் செய்யவில்லை. வேலுமணி, முனுசாமி தான் போகிறார்கள். துணைப் பொதுச்செயலாளர்கள் எத்தனை பேர்? மூத்த நிர்வாகிகள் எத்தனை பேர் உள்ளனர். கூப்பிட்டு பேசினீர்களா? இவற்றை நான் எதோ எரிச்சலில் சொல்லவில்லை. அதிமுகவின் கைகள் முறுக்கப்படும் என்று சொன்னவன் நான்தான். வரப்போகும் வாரங்களில் காட்சிகள் மாறும் என்று சொன்னவன் நான்தான். தற்போது நடைபெற்று விட்டதா? யாராவது எதிர்பார்த்து இருப்போமா? பாஜகவுடன் இவ்வளவு சீக்கிரமாக போவார் என்று. அப்போது, நிர்பந்தத்திற்கு ஆளாக்கி உள்ளனர். எதை காண்பித்து மிரட்டினார்கள். என்ன என்ன நிர்பந்தம், கூட்டணி ஆட்சி என்றால் சரிபாதியா? என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்லவில்லை என்றால், குறைந்தபட்ச நேர்மையுடன் நடந்து கொள்ளாவிட்டால் அதிமுகவிலே அவர் இன்னும் பலவீனப்படுவார். அவமானப்படுவார். மதிப்பை இழப்பார்.

என்டிஏவில் தான் ஓபிஎஸ், டிடிவி இருக்கிறார்கள் என்று அமித்ஷா வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் ஒரு பத்திரிகையாளராக ஒபிஎஸ், தினகரன் ஆகிய இருவரும் பாஜகவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஓரளவுக்கு மேல் அவர்களை நம்பி இருந்தால், சரியாக இருக்காது. என்டிஏ வலுப்பட வேண்டும் என்று சொன்னது தினகரன்தான். அவரை என்ன செய்ய போகிறோம் என்று போனில் கூட சொல்லி இருக்கலாம். அதனால்தான் பொறுத்து இருந்து பார்ப்போம்.

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். முதலில் அவர்கள் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், இன்றும் தொடர்கிறது. அவர் பொய் சொல்வதை நிறுத்தவே இல்லை. அது எந்த அளவுக்கு புரியாத இளைஞர்களை ஈர்த்ததோ, அந்த பொய்யை பொய் என்று புரிந்துகொண்ட பொதுமக்கள் அவரிடம் இருந்து விலகிக் கொண்டேதான் வந்தார்கள். இதை நான் உணர்ந்துகொண்டதுபோல கட்சி மேலிடமும் உணர்ந்து கொண்டிருக்கலாம்.  வேறு சில குற்றச்சாட்டுகளும் சொல்கிறார். எது எப்படி ஆகினும் அண்ணாமலையை நீடிக்க விடக்கூடாது என்று கட்சி தலைமை முடிவு எடுத்துவிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்கள் வெல்ல வேண்டும் என மோடி முடிவு செய்திருந்தார். அப்போது, அதிமுகவை சீண்டி கூட்டணியில் இருந்து வெளியே தள்ள வைத்தது அண்ணாமலைதான்.அதற்கு முழு ஆதரவு அளித்தது அமித்ஷா, மோடி தான். அந்த தியரி வெற்றியை கொடுக்கவில்லை. அதனால்தான் டெல்லிக்கு எடப்பாடி சென்றபோது இந்த முடிவை நீங்கள் அன்றைக்கே எடுத்திருந்தால் நிலைமை வேறு மாதிரி மாறி இருக்கும். அண்ணாமலை நீடிப்பதை மோடியும் அமித்ஷாவும் விரும்பவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ