Homeசெய்திகள்கட்டுரைஅண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்...  ஆளுநரின் செயல் மட்டகரமானது... வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்…  ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

-

- Advertisement -
kadalkanni

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆளுநரிடம் இன்னொரு விஷயத்தையும் வலியுறுத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு பல்கலைக் கழகங்களின் வேர்ந்தராக முதலமைச்சரை நியமிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் வேந்தராக உள்ளதால், பல்கலைக் கழக வேந்தர்கள் நியமனத்தில் அருவருக்கத்தக்க அரசியலை செய்து வருகிறார். அதன் காரணமாகத்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இருந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்குமா?. இவற்றை எல்லாம் அண்ணாமலையும், விஜயும் ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதனை ஆதரமற்ற குற்றச்சாட்டு என பல முறை மறுத்து பேசியுள்ளோம. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களையும், கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், திமுக ஆட்சியில் குற்றங்கள் சற்று குறைந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தைவிட திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்து இருந்தால் உங்களது குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்திருக்கும். ஆனால் குற்றங்கள் குறைந்து கொண்டுதான் வருகிறது. அப்படி இருக்கையில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களின் நோக்கம் என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும். இதை தடுத்திருக்க வேண்டும். இந்த குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது. பல்கலையில் துணை வேந்தர் இல்லை. அடுத்த பொறுப்பு யாரிடம் உள்ளது என்றால் பதிவாளருக்கு உள்ளது. வழக்கமாக பதிவாளரை அந்த கல்லூரியில் பணிபுரியும் மூத்த பேராசிரியரை தான் நியமிப்பார்கள். ஆனால் எம்.ஐ.டி கல்லூரியை சேர்ந்த ஒருவர் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகம், பல்கலை. கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் பாதுகாப்பிற்கு பதிவாளர்தான் முழுமையான பொறுப்பு. அவர் தான் தனியார் நிறுவன பாதுகாப்பும் வழங்கியுள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த குற்றச்செயலை தடுக்க வேண்டிய கடமை அண்ணா பல்கலை. அதிகாரிகளுக்குத்தான் உள்ளது. அவர்களை அதை தவறிவிட்டனர். ஆனால் அதிமுக, பாஜக இதை பற்றி பேசுமா. இதை திமுகவுக்கு எதிராக திருப்ப வேண்டும் என ஒரு கள்ள ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

குற்றச்செயல் நடைபெற்ற பின்னர் இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. குற்றவாளி 3 மணி நேரத்தில் கைதுசெய்யப்பட்டார். இதற்காக காவல் துறையை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் எப்.ஐ.ஆர் லீக் ஆகிவிட்டதற்கு, தமிழ்நாடு காவல்துறை தான் காரணம் ஒரு அவதூறை பரப்பி விடுகிறார்கள். இதற்கு தேசிய தகவல் மையமே விளக்கம் அளித்துள்ளது. ஐபிசி பிரிவு 376, 375, 354 ஆகியவை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பிரிவுகள் ஆகும். பிஎன்ஸ் சட்டத்திற்கு மாறும்போது அந்த குற்றங்களுக்கான பிரிவுகளுக்கான எண்களும் மாறிவிட்டது. இதனால் இந்த தகவல்களை இணையத்தில் பதிவிடும்போது 376, 375 உள்ளிட்ட பிரிவுகளை தன்னிச்சையாக பிளாக் செய்யப்படுகிறது. ஆனால் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவை மற்றவர்கள் பார்வையிட முடிகிறது என்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்தார். அதனை ஏற்காமல் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தேசிய தகவல் மையம் அளித்துள்ள கடிதம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் எப்ஐஆர் தொழில்நுட்ப காரணங்கள் தான் வெளியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களே ஒப்புக்கொண்ட பின்னர் திமுக மீது தான் குறறம்சாட்டுகிறார்கள் என்றால், அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

பெண்கள் கல்லூரிக்கு சென்றால் பெரிய சமுக புரட்சி ஏற்பட்டு விட்டதாக முதலமைச்சர் தெரிவிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை வடஇந்தியாவுக்கு சென்றால்தான் தெரியும். அவர்கள் படிக்கக்கூடிய வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் இதை எல்லாம் சொல்வது இல்லை போல. நாட்டில் 100 பேர் பள்ளிப்படிப்பை முடித்தால் அவர்களில் 27 சதவீதம் பேர் தான் கல்லூரிக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 100 பேர் பள்ளிப்படிப்பை முடித்தால், அவர்களி 54 சதவீதம் பேர் கல்லுரிக்கு செல்கின்றனர். பள்ளியில் நன்றாக படிக்கும் பெண்கள் பெரிய அளவில் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தனர். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. புதுமைப்பெண் திட்டம் என்பது ஒரு புரட்சிகரமான திட்டமாகும். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெண்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருப்பார்கள் என பாருங்கள். கல்லூரிக்கு செல்வதே புரட்சியா என்று கேட்கிறார் அண்ணாமலை. அவர்களை 5வது, 8வதிலேயே வகுப்பிலேயே  பெயில் செய்து குலத் தொழிலுக்கு அனுப்புங்கள் என்பது பாஜகவின் கொள்கை. உங்கள் கண்களுக்கு முதலமைச்சர் சொல்வது சொல்வது சரியாக தெரியாது.

யார் அந்த சார்?

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

யார் அந்த சார் என்பது அப்பட்டமான பொய். இது குறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் அருண், குற்றவாளி ஞானசேகர் போனை பிளைட் மோடில் போட்டு பேசியதாக தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுக்கின்றனர். தற்போது மாணவி பாலியல் விவகாரத்தை 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். அவ்வாறு குற்றவாளி வேறு நபரிடம் பேசியிருந்தார் என்றால், அந்த கால் ரெக்கார்டு ஆகி இருக்கும் அல்லவா? அதனை விசாரிக்கும் அதிகாரிகளால் எடுக்க முடியும் அல்லவா?. இவ்வளவு பெரிய பிரச்சினை எழுந்த பின்னர் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்காமல் இருப்பார்களா?. காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தவறான தகவலை சொல்ல முடியுமா?. எதிர்க்கட்சிகளிடம் குறைந்தபட்ச நாணயத்தை எதிர்பார்க்கிறோம். நீங்கள் அரசியல் செய்யலாம், ஆனால் அரசியலில் கள்ளத்தனம் இருக்கக்கூடாது. ஒரு நியாயம் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவதூறு மட்டுமே பரப்பி வருகின்றனர். இதற்கு காரணம் இந்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதும், காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பும் ஆகியவைதான். இவை அவர்களை அரசியல் செய்ய விடாமல் தடுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் போராட அனுமதி மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். நீங்கள் போராட வேண்டும் என்றால் முறையாக அனுமதி பெற்று போராடுங்கள். எந்த அனுமதியும் இன்றி சாலையில் உட்கார்ந்தால், அதற்கான கைது நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக, விஜய் ஆகியோர் மிகத் தீவிரமாக உள்ளதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் எல்லாம் சரியாக நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம், வள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம், கண்ணாடி பாலம் திறப்பு ஆகியவை முதலமைச்சருக்கும், திமுகவுக்கும் மிகப்பெரிய பேரையும், புகழையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை திசை திருப்பவே அவர்கள் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மூன்று பேரும் சேர்ந்தே இந்த நாடகத்தை நடத்துகின்றனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மனு அளித்தது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மதச்சாயம் பூசும் வகையில் ஜோசப் விஜய் என தெரிவித்துள்ளார். விஜய் தனது அறிக்கையில் எந்த இடத்திலாவது ஜோசப் விஜய் என தெரிவித்திருந்தாரா. அப்படி எனில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் எவ்வளவு மட்டமான அரசியல். எதற்கு இந்த கேவலமான செயலை செய்கிறார். இதன் முலம் அவர் என்ன சொல்ல வருகிறார்.  ஆளுநரின் இந்த செயலை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்கள் யார் என்றால் திராவிட இயக்கத்தினர் தான், தவெகவினர் இந்த விவகாரத்தில் வாய்திறக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ