Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாமலையின் பதவி பறிப்பு! டெல்லி செல்கிறார் நயினார்!

அண்ணாமலையின் பதவி பறிப்பு! டெல்லி செல்கிறார் நயினார்!

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியதை அடுத்து அண்ணாமலை தாமே முன்வந்து பதவி விலகிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பொறுபபில் இருந்து அண்ணாமலை விலகும் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் அளித்துள்ள குபேந்திரன் நேர்காணலில் அவர் கூறி இருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த பின்னர் அண்ணாமலை டெல்லியில்  அவரது குருநாதரும், பாஜக தேசிய செயலாளருமான சந்தோஷை பார்க்கிறார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீன்வளத் துறை அமைச்சர் ராஜன் சிங் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அவர் சந்தோஷிடம் சொன்னது என்ன என்றால்? அதிமுக கூட்டணி என்று வந்தால் நான் அங்கு இருக்க மாட்டேன். எனக்கு ரிஸ்க் அதிகம். அதனால் வேறு எதாவது பொறுப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது, 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றதாகவும், ஆனால் தோற்க போகும் பிரதமருக்கு நான் ஏன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாகவும் கூறினார். என் தலைவனை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை நான் எப்படி தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்றும் அண்ணாமலை சொல்கிறார்.

2019ல் எடப்பாடி பழனிசாமி போக மறுத்து விட்டதாக கூறும் அண்ணாமலை கட்சியில் 2020ஆம் ஆண்டில்தான் சேர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் யாருடைய கூட்டணியில் யாருடைய ஆசிவாதத்தில் யாருடைய பிரச்சாரத்தில் நீங்கள் போட்டியிட்டீர்கள்?  2019ல் நீங்கள் கட்சியிலேயே சேரவில்லை. அப்போது எடப்பாடி இப்படி பதில் சொன்னதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. அவருடன் இருந்தவர்கள் யாராவது சொல்லி இருந்தால்? இதனை உண்மை என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனரா?. அண்ணாமலை மாற்றி மாற்றி பேசுகிற நபராக உள்ளார். அவரது டர்ட்டி பாலிடிக்சை மோடி ரசிக்கிறார். அப்படி பட்ட நபர் ஏன் இப்போது மாற்றப்படுகிறார் என்பதுதான் முக்கியமா னதாகும்.

கோவை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை கூட்டணி குறித்து தான் பேச மாட்டேன் என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும் மிகவும் மரியாதையுடன் பேசியுள்ளார். இதற்கு முன்பாக தற்குறி, கொலை வழக்கில் சிக்கியவர் என்று எடப்பாடியை அவதூறாக பேசிவிட்டு அவருடன் ஒரே மேடையில் பங்கு போடும் காட்சியின்போது, அண்ணாமலையின் பழைய பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் காண்பித்தால் மாற்றி மாற்றி பேசும் அவரது குணம் தெரிந்து விடும். அதனால் அண்ணாமலையே சென்று அதிமுகவுடன் கூட்டணியாக இருக்க முடிவு செய்த பிறகு நான் தலைவராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லி வெளியே வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜிவ்காந்தி கொலை சம்பவத்தின்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி இதனை திமுக செய்தது திமுக என்று தவறான தகவலை பரப்பினார். பின்னர் அவரே திமுக கூட்டணிக்கு வந்துவிட்டார். அரசியலில் இதுவெல்லாம் சாதாரணம். இது கடந்து செல்லக்கூடிய விஷயம்தான். ஆனால் அண்ணாமலைக்கு இது உறுத்தும் அல்லவா?. பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்கிறார். அதிமுகவில் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று பாஜகதான் முடிவு எடுக்கிறது. தற்போது பாஜகவின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீர்மானிக்கிறார். அதனால்தான் அண்ணாமலை வெளியே செல்கிறார்.

nainar nagendran

வானதி சீனிவாசனி, ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர். அவர் தலைமை பொறுப்புக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த சரியாக இருக்கும் என்று எடப்பாடி விரும்புகிறார். ஆனால் அவரை தலைவர் பதவிக்கு கொண்டுவர பாஜக அகில இந்திய தலைமை விரும்பவில்லை. அதற்கு பிறகு பரிட்சையமான முகம் எதுவும் இல்லை. பொன்.ஆர் ஏற்கனவே தலைவராக இருந்துவிட்டார். தமிழிசை ஏற்கனவே மாநில தலைவராக இருந்து விட்டார். ஹெச்.ராஜா, ஆளுநர் பதவி வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே அண்ணாமலை கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இம்முறை முக்குலத்தோரை சேர்ந்த நயினாருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை

நயினார் நாகேந்திரன் அனுபவம் வாய்ந்த தலைவர் ஆவார். எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். நயினார் மத்திய அமைச்சர் ஆகி விடுவார் என்கிற பயத்தில் ரயில் நிலையத்தில் 4.50 கோடி பணத்தை அண்ணாமலைதான் சிக்க வைத்ததாக கட்சியினரே சொல்கிறார்கள். தன்னை தவிர வேறு யாரும் கட்சியில் வளரக்கூடாது என்று அண்ணாமலை தெளிவாக இருந்தார். அண்ணாமலையால் பாஜக வளர்ந்தது போன்று தோற்றமளிக்கலாம். ஆனால் அது போலியான பிம்பமாகும். பாஜக அண்ணாமலையை தமிழ்நாட்டில் இருந்து எடுத்தாலும், அவரை வைத்து திமுகவுக்கு எதிராக சில வேலைகளை செய்ய காத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ