Homeசெய்திகள்கட்டுரைபெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?

-

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?
பல துறைகளில் பணிபுரிந்து முன்னேறிக் கொண்டிருக்கும்  பெண்களின் கருத்து.

முதலாவதாக  தரணி  என்ற பெண் தொழில்  முனைவரின் (women entrepreneur)  கருத்து.

தரணி சென்னையில் உள்ள  Direct Nutri என்னும் இரசாயனம்அற்ற புதிய தானியங்கள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் குளிர் அழுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இந்த துறையில் மூன்று ஆண்டுக் காலம் அனுபவம் பெற்றவர்.

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?

என்று கேட்டதற்கு

பல துறைகளில் சாதனை புரிந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ஒரு ஆண்மகன் நிச்சயம் துணையாக இருப்பார். அவர் அப்பாவாகவோ, கணவராகவோ,   உடன்பிறப்பாகவோ மற்றும் ஆசிரியராகவும் கூட இருக்கலாம்.

ஏனெனில் ஆணின் துணை இல்லை என்றால் பல துறைகளில் நம்மால் ஈடு பட முடியாது.

ஒரு பெண் சுயதொழில் செய்கிறாள் என்றால் முதலில் Negative கேள்வி மட்டுமே வரும் இதை பற்றி உங்களின் கருத்து?

நான் சுய தொழில் செய்ய தொடங்கிய பொழுது அவளுக்கு எல்லாம் ஏன் இந்த சுய தொழில் வேலை? வீட்டில் சமைத்து கொண்டு குழந்தைகளை பார்க்க சொல் என்றார்கள்.

 

ஆனால் அதை எல்லாம் நான் பொருட்படுத்த வில்லை, நம்மை பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்தால், நம் இலக்கை நம்மால் அடைய முடியாது.

உங்கள் கணவர் உங்களுக்கு உறுதுணையா இருக்கிறாரா?

என் கணவர் எனக்கு முழு உறுதுணையாக நின்றதால் மட்டுமே என்னால் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்ய முடிகிறது. ஆரம்ப நாளிள் இருந்தே வேலையிலும், குழந்தைகளை பார்த்துக்கொள்வதிலும் மற்ற குடும்ப சம்பந்த பட்ட அனைத்து விஷயங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.

சில சமயம் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் கூட என்னை  எதுவும் கேட்க மாட்டார். பல விஷயங்களில் எனக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

அதே மாதிரி , இதுவரை என்னை, நீ இந்த வேலை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்று எதுவும் வற்புறுத்தியதுமில்லை.

என் தொழில் நான்:

நான் சுய தொழில் செய்ய தொடங்கிய போது கொரோனா காலம் என்பதால் என்னால் அதை மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.  ஆனால் என் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியோடு தெரிந்தவர்களுக்கு மட்டுமே என் கம்பெனி பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினேன்.

என்னுடைய இலக்கு எங்கள் Direct Nutri Product-யை  இந்தியா முழுவதும் விற்பனை செய்ய பட வேண்டும். என்று கூறினார்.

இவரை தொடர்ந்து நாம் சந்தித்த மற்றொரு பெண் தான் சாவித்திரி.

யார் இந்த சாவித்திரி? அவரிடம் நாங்கள் என்ன கேள்வி கேட்டிருப்போம் என்று நீங்கள் ஆர்வத்துடன் இருக்கலாம்.

சாவித்திரியிடம் நாங்கள் கேட்ட கேள்வியும் அவர் கூறிய பதிலும் இதோ.

”பெண்களுக்கு இதுவரை தான் எல்லை” என்று சொல்கிறார்களே அதை பற்றி உங்கள் கருத்து?

பெண்களுக்கு எல்லை என்று எதுவும் கிடையாது, நாங்கள் பணி புரியாத துறைகளே இல்லை. கட்டட வேலையில் இருந்து விமானம் ஓட்டும் பணி வரை அணைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேறி கொண்டு தான் இருக்கிறோம்.

சில துறையில் பெண்கள், அவர்கள் வேலைக்கு ஏற்றது போல உடை அணிய  வேண்டி இருக்கும். ஆனால் பார்க்கும் சில கண்களுக்கு அவ ஏன் அப்படி டிரெஸ்ஸிங் பண்ணியிருக்கா, என்ற கோணத்தில் அவர்களுது பார்வை இருக்கும்.அறியாமையில் பேசுபவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது.

நான் SALES & MARKETING மேனேஜராக வேலை செய்கிறேன். மாத கடைசியில் என் பணி நேரத்தை விட  கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். அப்படி நீண்ட நேரம் உழைத்து வீடு திரும்பும் எனக்கு, என் கணவர் பக்கபலமாக இருப்பார்.

அக்கம் பக்கத்தினர் என்ன சாவித்திரி எப்பவும் சிக்கிரமா வருவ, இப்போ இந்த நேரத்தில வருக்கிறாயே என்று கேட்பார்கள்.

நான் ஏன் சொல்கிறேன் என்றால். இப்படி என் கணவர் என்னை புரிந்து எனக்கான சுதந்திரம் கொடுத்ததால் தான் என்னால் தெளிவாகவும் , நிம்மதியாகவும் நடந்து கொள்ள முடிகிறது. பெண்களுக்கு எல்லை என்று எதுவும் கிடையாது என்பதை விட நமக்கு தரும் சுதந்திரத்தை மீறாமல் இருந்தால் போதும் என்றார்.

இப்படி எல்லா குடும்பங்களிலும்  புரிதலுடன் உறுதுணையாக நிற்க ஒரு தந்தையோ, கணவனோ அல்லது சகோதரனோ இருந்தால் அனைத்து பெண்களும் வெற்றிகரமாக செயல்படுவதோடு சாதிக்க கூடியவர்களாகவும் வாழ முடியும்.

தொடரும்.

MUST READ