Homeசெய்திகள்கட்டுரைமுக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?

முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?

-

முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?
மா, பலா, வாழை என முக்கனிகளின் சீசன் உச்சத்தில் இருப்பதால் எந்த வயதுக்காரர்கள் எவ்வளவு பழங்களை சாப்பிடலாம் முக்கனிகளில் எந்த வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?

பழ வகைகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகிய மூன்றும் முக்கனிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் வாழைப்பழம் கிடைத்தாலும் மாம்பழம் மற்றும் பலாப்பழத்தின் சீசன் தற்போது தான். முக்கனிகளிலும் எந்த வகையான சத்துகள் இருக்கின்றன? சர்க்கரை நோயாளிகளும் முக்கனிகளை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?

இளம் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளும் ஒரு மாம்பழம் சாப்பிடலாம் என்றும் உணவுகள் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தில் அதிகமாக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கு நல்லது, சீசன் தோறும் சாப்பிட்டு வந்தால் மூட்டு பிரச்சனைக்கு தீர்வாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றலும் உண்டு என்கிறார்கள் நிபுணர்கள்.

முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?

வைட்டமின் ஏ, பி12, சி, மெக்னீசியம் மற்றும் தாது உப்புகளின் சத்துகளும் வாழைப்பழத்தில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஒரு வாழைப்பழம் தினமும் இரவில் சாப்பிடலாம். மலச்சிக்கல் ஏற்படாது என்றும் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

MUST READ