ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் 95 சதவீதம் வெற்றிப்பெற்றது.
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மக்கள் நேரடியாக வாக்கு செலுத்தி தேர்வு செய்யும் முறையை மாற்றி கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்தனர்.
மறைந்தாலும் இசையாய் மலர்வேன்… பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் பிறந்த தின சிறப்புப் பதிவு!
அதனால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கைகாட்டும் நபர்கள் மேயராகவும், நகராட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கலைஞர் காலத்து திமுக ஆட்சியில் மேயர் போன்ற மக்கள் பணியாற்றும் முக்கிய பதவிகளுக்கு தலைமை நேரடியாக தேர்வு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அந்த தேர்வு முறையில் மேயர் வேட்பாளர் கட்சியில் எத்தனை ஆண்டுகள் இருந்துள்ளார். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைக்கு சென்றாரா? மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு எப்படி என்று பல கோணங்களில் ஆய்வு செய்தப்பின்னரே மேயராகவும், தலைவராகவும் தேர்வு செய்யப்படுவார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பழைய தேர்வு முறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மேயர், நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு ஏற்ற நபர்களை அந்த தொகுதி அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து, அதனை தலைமையிடம் ஒப்புதல் பெற்றால் போதும் என்ற நடைமுறையை கொண்டுவந்தனர்.
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய வீட்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதுப்போல் நினைத்துக் கொண்டு மேயர்களையும், தலைவர்களையும் தேர்வு செய்தனர்.
சென்னை, தாம்பரம், ஆவடி போன்ற முக்கிய மாநகராட்சி மேயர்கள் அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். அமைச்சர்களால் தேர்வு செய்யப்பட்ட மேயர்களுக்கு மக்கள் பணி என்றால் என்ன என்பது சுத்தமாக தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் மக்கள் பணி. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் வீடுகளுக்கு, அவர்களின் வாரிசுகளுக்கு செய்கின்ற தொண்டே மக்களுக்கு செய்யும் தொண்டு. அதுவே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்று நினைத்து வேலை செய்து வருகின்றனர்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4
அதனால், உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சியில் மாதாம் தொரும் நடைபெற வேண்டிய மன்றக்கூட்டம் 2023ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்களில் ஒருமுறை மட்டுமே நடந்துள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற அந்தக் கூட்டமும் மன்றத்தின் மினிட் புத்தகத்தில் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 25ந் தேதி மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தை மேயரே ரத்து செய்வதாக அறிவித்து எல்லோரையும் காமெடியில் ஆழ்த்தினார்.
மன்றப் பொருள் அச்சடிக்கப்பட்டு, அதில் மேயர் கையெழுத்திட்டு, கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி மேயர் அழைப்பு விடுத்து கூடிய கூட்டத்தை அதே மேயர் ரத்து செய்வதாக அறிவித்த சம்பவம் வேறு எங்கேயும் நடைபெறாத அதிசயம். தமிழ்நாடு வரலாற்றில் காணமுடியாத முன் உதாரணம்.
ஆவடி வளர்ச்சியில் முன்னுதாரணமாக இருக்கிறதோ இல்லையோ, இதுபோன்ற கேலிக்கும், கிண்டலுக்கும் எடுத்துக் காட்டாக மாறிவருகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா IAS, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கடந்த ஜூன் 3 ம் தேதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மன்றக் கூட்டம் முறையாக நடைபெறாததால் மக்கள் பணிகள் முடங்கிப் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மேயர் உதயகுமார், மாநகராட்சிக்கு முறையாக வராமல், கோப்புகளில் கையெழுத்திடாமல் அலட்சியமாக நடந்துக் கொள்வதாக புகார் வாசித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்றக்கூட்டத்தின் மினிட் புத்தகத்தை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மினிட் புத்தகத்தை கையோடு கொண்டு சென்றுவிட்டார். மேலும், மன்றக் கூட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது? யாருடைய தூண்டுதலில் இதுபோன்ற செயல் நடந்தது? அதனால் பணிகள் முடங்கியுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்? போன்ற கேள்விகள் கேட்டு,மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மேயர் உதயகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேயர் கொடுக்கப் போகும் விளக்கத்தின் அடிப்படையில் பதவி தப்பிக்குமா? தப்பிக்காதா என்பது தெரிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.