2024 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றிய ஆளுமையுள்ள 10 தொழில் அதிபர்கள் யாா் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
10. ராஜீவ் பஜாஜ்– பஜாஜ் குழுமத்தின் கீழ் 40 நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 1926 இல் மும்பையில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்டது. முதலில் பஜாஜ் ஆட்டோ தொடங்கி, தற்போது உலகின் நான்காவது பெரிய இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ளது. பஜாஜ் குழுமத்தின் தலைவரான ராகுல் பஜாஜ் பிப்ரவரி 2022 இல் காலமானார். அவரது மூத்த மகன் ராஜீவ் பஜாஜ் இப்போது குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பொறுப்பாளராக உள்ளார், அதே நேரத்தில் அவரது இளைய மகன் சஞ்சீவ் பஜாஜ் குழுமத்தின் நிதிச் சேவை வணிகத்தை மேற்பார்வையிடுகிறார். இந்த ஆண்டு இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளாா்.
9. சைரஸ் பூனவல்லா – இவருக்கு 83 வயதாகிரது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவணத்தின் தலைவா். 1966-ல் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சீரம் இன்ஸ்டிடியூட் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவணமாக உள்ளது. இந்த நிறுவணம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிகளின் மக்களின் பயண்பாட்டிற்கு வந்தது. இவர் இந்தியாவின் பணக்கார வரிசையில் 9 வது இடம் பெறுகிறாா்.
8. குமார் பிர்லா – இவரின் வயது 57, இவர் ஆதித்ய பிர்லா குழுமத்தின் சொந்தக்காரா்.இந் நிறுவனம் அலுமினியம் மற்றும் சிமென்ட் தொழில்களில் ஈடுபட்டுள்து, பிர்லா முன்பு வோடபோன் ஐடியாவின் நிர்வாக தலைவராக பணியாற்றினார்,பின்னா் அந் நிறுவனத்தின் கடன்கள் காரணமாக 2021 இல் பதவி விலகினார்.மீண்டும் வோடபோன் ஐடியாவின் குழுவில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிர்லா இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் பெற்றார். இவர் இந்திய பணக்காரா்களின் வரிசையில் 8 வதாக இடம் பெற்றுள்ளாா்.
7. சுனில் மிட்டல் – இவருடைய வயது 66, இவர் ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளா். ஏர்டெல் இந்தியாவில் ஏறக்குறைய மூப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது நாட்டின் மிகப்பெரிய மொபைல் போன் ஆபரேட்டர்களில் ஒன்றாகும். இப்போது 17 நாடுகள் மற்றும் சேனல் தீவுகளில் முன்னிலையில் உள்ளது. பார்தி ஏர்டெல் இந்த ஆண்டு ₹151,417.8 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இவர் இந்தியாவின் 7 வது பணக்காராக இடம் பெற்றுள்ளாா்.
6. ராதாகிஷன் ஷிவ்கிஷன் தமானி – இவருடைய வயது 69, இவர் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளா். இது இந்தியாவில் கிட்டத்தட்ட 336 டிமார்ட் கடைகளை நடத்துகிறது . 2002 ஆம் ஆண்டு மும்பையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இந்தியாவின் சில்லறை விற்பனை மன்னன் என்றும் அறியப்படுகிறார். மேலும், அவருக்கு VST மற்றும் இந்தியா சிமெண்ட் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன, இவர் இந்தியாவின் 6வது பணக்கரார் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளாா்.
5. திலீப் ஷங்வி – இவரது வயது 68. இவருடைய சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (சன் பார்மா) 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. உலகின் நான்காவது பெரிய ஸ்பெஷாலிட்டி ஜெனரிக் மருந்து நிறுவனமாகும். 43 உற்பத்தி நிறுவனங்களுடன் பங்கு தாராக உள்ளது , உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுகாதார வல்லுநர்கள் மற்றும் நோயாளிகளால் நம்பப்படும் உயர்தர, மலிவு விலையில் மருந்துகளை வழங்குகிறது. திலீப் ஷங்வி இந்தியாவின் 5 வது பணக்காராக உள்ளாா்.
4. ஷிவ் நாடார் – இவருக்கு 79 வயதாகிறது. ஷிவ் நாடார் HCL குழுமத்தின் நிறுவனர் மற்றும் இந்தியாவின் IT துறையில் ஒரு முன்னோடி ஆவார். சிஸ்கோ, மைக்ரோசாப்ட் மற்றும் போயிங் போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு HCL சேவை செய்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் திரு. நாடார் அவர்களுக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கியது. இந்திய பணக்கார வரிசையில் 4 ம் இடத்தில் உள்ளாா்.
3. சாவித்ரி ஜிண்டால் & குடும்பம் – சாவித்ரி ஜிண்டாலுக்கு 74 வயதாகிறது. சாவித்ரி ஜிண்டால் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறாா், அவர் OP ஜிண்டால் குழுமத்தின் தலைவராக பணியாற்றுகிறார் . வணிகத்தின் பல்வேறு பிரிவுகளை பிருத்விராஜ், சஜ்ஜன், ரத்தன் மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய நான்கு மகன்கள் நிர்வகித்து வருகின்றனா். JSW குழுமம் இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களில் தரவரிசையில் உள்ளது. ஸ்டீல், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட், பெயிண்ட்ஸ், B2B மின்வணிகம், துணிகர மூலதனம், பாதுகாப்பு, பசுமை இயக்கம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் JSW இன் புதுமையான மற்றும் நிலையான இருப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. JSW குழுமத்தின் விளையாட்டுப் பிரிவான JSW ஸ்போர்ட்ஸ், இந்தியா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் செயல்படும் இந்த விரிவான குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் துடிப்பான விளையாட்டு சூழலை மேம்படுத்துவதில் தீவிரமாக பங்களிப்பதே இதன் நோக்கமாக இருந்து வருகிறது. சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர் 3 வது இடத்தில் உள்ளாா்.
2. கௌதம் அதானி – இவருடைய வயது: 62, இவர் அதானி குழுமத்தின் உரிமையாளா். அதானி குழுமத்தின் வணிக நலன்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், மற்றும் பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளன . குறிப்பிடத்தக்க வகையில், அதானி இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் நாட்டின் மிகப்பெரிய குஜராத்தின் முந்த்ரா துறைமுகமும் இவருடைய ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதானி அறக்கட்டளைக்கு அவரது மனைவி பிரித்தி அதானி தலைமை ஏற்றுள்ளாா். இந்தியாவின் பணக்கார பட்டியலில் 2வது இடம் பெற்றுள்ளாா்.
1. முகேஷ் அம்பானி – இவருடைய வயது: 67 , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக இருந்து வரும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்ற தகுதியை பெற்றுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2024 நிதியாண்டில் ரூ.1,000,122 கோடி ($119.9 பில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து சாம்ராஜ்யத்தை கட்டமைத்துள்ளது. அம்பானியின் மகன்களான ஆகாஷ், ஆனந்த் மற்றும் இஷா ஆகிய மூன்று பேரும் பல்வேறு தொழில்களை நிர்வகித்து வகிக்கின்றனர். இந்திய பணக்கார பட்டியலில் 1ம் இடத்தில் இடம் பெற்றுள்ளாா்.
புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி