Homeசெய்திகள்கட்டுரைஇரு மொழியில் பிடிவாதம்... என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!

இரு மொழியில் பிடிவாதம்… என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!

-

- Advertisement -

இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள் ஒன்றும் குறைந்துபோக வில்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா எம்.பி. காட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது - திருச்சி சிவா

புதிய கல்விக்கொள்கை, இந்தித் திணிப்பு என்று பாஜகவின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் விதமாக பிரபல யூடியூப் சேனலுக்கு திருச்சி சிவா எம்.பி. அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரையும் மீறி சில விஷயங்களை சொல்லியுள்ளார். அது சற்று ஏறக்குறைய அவரது கட்சியினருக்கும் ஒரு பதிலாக இருக்கும். இனி வேறுமாதிரி சித்தரிக்கக்கூடியவர்களுக்கும் அதில் பதில் இருக்கிறது. தமிழ் என்பது மொழி அல்ல. அதையும் கடந்து ஒரு தேசிய அடையாளம் என்றும் உலகிலேயே செம்மொழிகளில் பழமையான மொழி என்றும், இந்தியாவின் மிகப்பழமையான மொழி தமிழ் என்றும் தர்மேந்திர பிரதான் சொல்கிறார். சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தது, தர்மேந்திர பிரதான் கூற்றுப்படி அடிபட்டு போகிறது. நாங்களும் அதைதான் சொல்கிறோம். 10வது நூற்றாண்டில்தான் ஆங்கிலம் எழுத்து வடிவத்தில் இருந்தது. மிகப்பெரிய இலக்கியங்கள் எல்லாம் உருவானது 15ஆம் நூற்றாண்டிற்கு பின்னர்தான். ஆனால் காலனி ஆதிக்கத்தின் மூலம் அவர்கள் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று ஆட்சியை நிலை நிறுத்தியதன் மூலம் அந்த மொழியை அங்கே உள்ளவர்கள் கற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற நிலையை உருவாக்கினார்கள். இப்போது ஆங்கிலம் தவிர்க்க முடியாததாக மட்டுமல்ல, பயன்படக்கூடியதாகவும் மாறிவிட்டது. பிரெஞ்சு மொழி இன்னும் சற்று முன்னால். ஆனால் ஆங்கிலேயர் அளவுக்கு காலனி ஆதிக்கம் செலுத்த முற்படவில்லை. ஜெர்மனியும் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது.

dharmendra pradhan

மொழிகளின் ஆராய்ச்சியில் இறங்குகிறபோது பழமையான மொழிகள் என்றால், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளை சொல்லலாம். தற்போது அந்த மொழிகள் இல்லை. அடுத்து ஹீப்ரு மொழி. அந்த மொழியில் பைபிள் எழுதப்பட்டதால், அதனை புதுப்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின்னால் சீன மொழி. அடுத்ததாக சமஸ்கிருத மொழி. இறுதியாகத்தான் தமிழ் மொழி. சமஸ்கிருத மொழி என்பது மக்களின் மொழி அல்ல. அது வேத மொழி. இரண்டு வேத விற்பனர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவதை பார்த்திருப்பீர்களே தவிர, ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் சமஸ்கிருதத்தில் பேசிக்கொள்வதை நீங்கள் எங்கேயும் கேட்டிருக்க முடியாது. எனவே அது மக்களின் மொழி அல்ல. இலக்கிய வடிவத்தில் இருக்கும் வேதமொழி. ஆனால் தமிழ்மொழி பேச்சு வடிவில், எழுத்து வடிவில், இலக்கியத்தில், இலக்கணத்தில் உள்ளது. காலம் கடந்தும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் தன்மையுடன் தமிழ் உள்ளது.

தற்போது எழுத்துச் சீர்திருத்தம் ஒரு மொழியில் மேற்கொள்வது கடினம். ஆனால் தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்களில் ஒரு காலத்தில் ஒ என்ற குறில் மட்டுமே இருந்தது. ஓ வரும்போது என்ன செய்வது என்றால், மேலே புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், குறில் எ என்பதில், எ மீது புள்ளியை வைத்தால் அது நெடில். வீரமாமுனிவர் இங்கே வந்தபோது அதை எளிமைப்படுத்துவதற்காக குறியில் ஏ-இல் ஒரு கோடு இழுத்தார். ஒ-வில் சுழி இழுத்தார். அதை தமிழ் ஏற்றுக்கொண்டது. தமிழர்கள் எதிர்க்கவில்லை. அந்த பக்குவம் நம்மிடம் இருந்தது. திருவள்ளுவர் 2000 ஆண்டுகள், தொல்காப்பியர் 2500 ஆண்டுகள். இப்படியே செல்கையில் கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய முத்தக்குடி. இது ஏதோ ஒரு புலவன் எழுதியதை போல தெரியலாம். ஆனால் இப்போது ஆராய்ச்சி என்ன சொல்லி இருக்கிறது. கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லலூரில் கிடைத்த இரும்புகள். அதுவும் இரும்பினால் செய்யப்படட பொருட்களின் காலம் கி.மு. 3,345. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழன் இரும்பை பயன்படுத்தும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தான். அந்த அளவிற்கு இருந்தால் அப்போது அவனது மொழியும் தொன்மையானது. தற்போதைய ஆராய்ச்சிகளின் படி தமிழ் ஏரத்தாள 5,500 ஆண்டுகளை தொட்டுவிட்டது. இந்தி எப்போது தோன்றியது? என சொல்ல சொல்லுங்கள். நான் சமஸ்கிருதத்தை சொன்னேன். அதை உயிர்ப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஆண்டவனுக்கு அது மட்டுமே தெரியும் என்று, ஆண்டவனை வழிபடுவதற்கு சொல்லிக்கொடுத்தவர்கள் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்தி எப்போது தோன்றியது? அதற்கு எழுத்துவடிவம் உண்டா என்றால் கிடையாது. அது தேவநாகரி என்ற எழுத்து வடிவத்தை கொண்டது. இந்தியாவில் கரிபோல்ட் என்ற பழமையான மொழி உள்ளது. அதனோடு சமஸ்கிருதம் இணைந்து உருவானதுதான் இந்தி. கரிபோல்ட் என்பதோடு, பாரசீக மொழி இணைந்து உருவானதுதான் உருது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவான,  ஒரு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மட்டும் பேசக்கூடிய எழுத்து வடிவம் கூட இல்லாத ஒரு மொழியை, நீ படித்தாக வேண்டும் என்று திணிக்க முயல்கிறபோது, நான் இந்தி என்ற மொழி இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. எல்லா மொழிகளும் இருக்கட்டும். அது பேசுகிறவர்கள் எங்களுக்கு எதிரி அல்ல நாங்கள் அவர்களோடு நட்பு பாராட்டுகிறோம். ஆனால் அந்த மொழியை இந்தியா முழுவதும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். காரணம் பெரும்பான்மை என்கிறார்கள். அதற்கு கூட அடையாளம் கிடையாது. ஏறத்தாழ 41 சதவிகிதம் பேர் இந்தி பேசுவதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. இன்னும் அதை சரியாக கணக்கிட்டால் 26 சதவிகிதம். இந்தியை ஏற்றுக்கொண்டதால் 10 மொழிகள் காணாமல் போயின. ராஜஸ்தான் எவ்வளவு பெரிய மாநிலம். ஆனால் அங்கே பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு கூட ராஜஸ்தானி தெரியாது.

திமுக - அண்ணா அறிவாலயம்

மும்மொழி கொள்கையை திமுக அரசியலாக்கவில்லை. இப்போது 3 மொழிகள் என்றால் தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவதாக எந்த மொழி? முதலில் இந்திதான் இருந்தது. பின்னர் எதிர்ப்பு கிளம்பிய உடன் மூன்றாவதாக எந்த மொழி வேண்டடும் என்றாலும் எடுக்கலாம். நாங்கள் அதைதான் சொல்கிறோம் என்கிறார்கள். நான் கேட்பது இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் மூன்றாவதாக எந்த மொழியை படிக்கிறார்கள் என்று சொல்ல சொல்லுங்கள். அவர்கள் இரண்டாவதாக ஆங்கிலம் கூட படிப்பது இல்லை. என்னோடு நாடாளுமன்றத்தில் பலர் பிஹெச். டி பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். நிறைய ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்  எல்லாம் எங்களுடன் உரையாட தடுமாறுவார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எதை பேசினாலும் இந்தியில்தான் பேசுவார்கள். நீங்கள் மூன்றாவது மொழிக்கு போகிறீர்கள். அங்கே இருப்பவர்கள் 2வது மொழிக்கு கூட கற்க வருவதில்லை.

உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் என்னிடம் நட்புரிமையோடு கேட்டார். வடமாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரத்துக்கு வருகிறார்கள். நீங்கள் அங்கே எங்கே பார்த்தாலும் ஆங்கிலத்திலும், தமிழிழும் எழுதி வைத்துள்ளீர்கள். ஏன் 3வதாக இந்தியில் எழுதினால் அவர்களுக்கு உதவியாக இருக்காதா? என்றார். நான் உங்கள் கேள்வியை மதிக்கிறேன். அதில் உள்ள உண்மையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்கிறேன். எனக்கு உள்ள ஐயம். எங்கள் பகுதியில் இருந்து காசிக்கு வருகிறார்கள். நீங்கள் அங்கே இந்தியில் தானே எழுதி இருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் கூட எழுதவில்லை. 2வதாக அதை எழுதினால் என்ன என்று கேட்டேன். ஆக அவர்கள் 2வது மொழிக்கூட படிக்காதபோது, என்னை மூன்றாவது மொழி படிக்க சொல்கிறார்கள்.

சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
Photo: ISRO

இப்போது தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. இந்தி படிக்காத நாம் தமிழ் படித்ததால் எந்த வகையில் வீணாகி விட்டோம். இஸ்ரோ விண்ணில் செலுத்திய 3 சந்திரயான் விண்கலன்களின் இயக்குநர்களும் தமிழர்கள்தான். சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலத்தின் இயக்குநர் செங்கோட்டையை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி. தமிழ்வழி கல்வி படித்தவர். அக்னி ஒன்றின் பிதாமகன் ஏ.பி.ஜே-அப்துல் கலாம். 5000 கிலோ மீட்டர் செல்லக்கூடிய அக்னி 5-ன் இயக்குநர் சங்கரி என்ற ஒரு பெண். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள். பெரும்பாலும் அரசுப்பள்ளியில் படித்தவர்கள். வெறும் ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். சுந்தர் பிச்சைக்கு செல்லுங்களேன்.

இன்னும் உலக நாடுகள் பலவற்றில் ஜொலிப்பவர்களை பாருங்களேன். இந்தி இல்லாமல் நாங்கள் குறைந்துபோக வில்லை. ஆனால் வடக்கே இருப்பவர்கள் வாழ்வதற்கு வழிதேடி வரும் இடம் தமிழ்நாடு. நீங்கள் கற்ற இந்தியினாலோ, அல்லது கற்காமல் போன எந்த மொழியினாலோ உங்கள் நிலை என்ன ஆனாது?. தமிழ் 8 நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. இந்தி இன்னும் இந்தியாவை தாண்டவில்லை. இந்தியாவிலும் கூட இன்னும் எல்லோராலும் பேசப்படவில்லை. அவசியமும் இல்லை. ஏன் இதை திணிக்கிறீர்கள், இவ்வாறு அவர் பேசினார்.

MUST READ