Homeசெய்திகள்கட்டுரைநாட்டின் அடையாளத்தை சிதைக்கும் பாஜக... சீமான் போலதான் விஜயும்... ஸ்ரீவித்யா குற்றச்சாட்டு!

நாட்டின் அடையாளத்தை சிதைக்கும் பாஜக… சீமான் போலதான் விஜயும்… ஸ்ரீவித்யா குற்றச்சாட்டு!

-

- Advertisement -

கலவரம் செய்ய ஸ்கெட்ச் போட்ட கிரிமினல்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா விமர்சித்துள்ளார். சீமானை போலவே வாக்குகளை பிரிக்கவே விஜயும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திராவிட நட்புக் கழகம் நிர்வாகி ஸ்ரீவித்யா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  கோவையில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக முன்பு போல இல்லை என்றும், வேலூரில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் சிக்கிய இருவரையும் தீர்த்துக்கட்டப் போவதாக தொண்டர் ஓருவர் தன்னிடம் போன் செய்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பாஜக தொண்டர்கள் எழுச்சியான நிலைக்கு வந்துவிட்டதாகவும், இனி அவர்கள் மீது யாரும் கைவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கலவரத்தை தூண்டும் விதமாக அண்ணாமலை பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியின் மாநில தலைவர் இவ்வாறு பேசுவது தவறானது. இதுதான் ஓரு கட்சிக்கு எழுச்சியா. கொலை செய்வது, கலவரம் செய்வதுதான் ஓரு கட்சிக்கு எழுச்சியா?. இதை பெருமையாக பேசுவதா?. பாஜக கலவரம் செய்து, ஆட்சியை பிடிக்க அமைக்கப்பட்ட கட்சி. ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு கலவரத்தை தூண்டுவது, குண்டு போடுவது எல்லாம் பெருமையாக கருதும் அமைப்புகள்.

அண்ணாமலை

வேலுர் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகள் இருக்கும் இடம்  அண்ணாமலைக்கு எப்படி தெரியும். முதலில் அண்ணாமலை மீது மதக் கலவரத்தை தூண்டியதாக வழக்கு உள்ளது. வழக்கு விசாரணையின்போது தான் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறி வாய்தா கேட்கிறார். பாஜக என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்பதற்கு மாணவி லாவண்யாவின் மரணம் ஒரு உதாரணம். லாவண்யா சொந்த பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதை பாஜக கும்பல் மரண படுக்கையில் இருந்த மாணவியிடம் பேட்டி எடுத்து, அவர் இறந்ததற்கு பின்னர் அதை வெட்டி, ஒட்டி மத மாற்றத்திற்காக கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார் என மதக் கலவரத்தை தூண்டுவதற்காக திட்டம் போட்டவர். வடஇந்தியாவில் இருந்து கலவரம் செய்வதற்காக ஏபிவிபி ஆட்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தவர் அண்ணாமலை. முதலமைச்சர் வீட்டின் முன்பு அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி எல்லாம் போலியானது என தெரிய வந்தது. பாஜகவில் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பேருக்கு, கட்சியில் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ரகசியங்களை கூறியதாக பாஜக நிர்வாகியை என்.ஐ.ஏ கைதுசெய்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி பிக்யாசிங் தாக்கூருக்கு, எம்.பி சீட் கொடுத்து அழகு பார்த்தது. நாடாளுமன்றத்தில் மண்டை உடைந்ததாக கூறும் சாரங்கி, ஒடிசாவில் பாதிரியாரை குடும்பத்தை உயிருடன் எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவன். அமித்ஷா மீது போலி என்கவுன்டர் வழக்கு உள்ளது.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அனுதாபத்தை சேர்த்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களான பிரவீன் கந்தெல்வால்- சாந்தினி சௌக் தொகுதி, ஹர்ஷ் மல்ஹோத்ரா- கிழக்க டெல்லி தொகுதி, சுபான்சூரி ஸ்வராஜ் – புது டெல்லி தொகுதி, மனோஜ் திவாரி – வடகிழக்கு டெல்லி தொகுதி, யோகேந்திர சாண்டேலியா- வடமேற்கு டெல்லி தொகுதி, திருமதி கமல்ஜீத் ஷெராவத் – மேற்கு டெல்லி தொகுதி, ராம்வீர் சிங் பிதூரி – தெற்கு டெல்லி தொகுதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணியை முற்றிலுமாக துடைத்தெறிந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இவர்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் பல்வேறு இடங்களில் குண்டு தயாரிப்பது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் குண்டு வைத்ததாக வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் கடை பிடிக்கப்படும் மதவாத அரசியலை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என குறியாக உள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் அயோக்கியத்தனமான அரசியலை, ஆபாசமான அரசியலை முன்னெடுக்கிறார். இதற்கு முன்னாடி தமிழகத்தில் இருந்த பாஜக தலைவர்கள் யாராவது இதுபோல பேசியுள்ளனரா?. அவர்கள் பொய் சொல்வார்கள், அவதூறு பரப்புவார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே கலவரம் செய்வது, கொலை செய்வது என்றெல்லாம் பேச மாட்டார்கள். பாஜகவின் அயோக்கியத்தமான அரசியலை அண்ணாமலை பல மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலானது, மிகவும் ஆபத்தானது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அண்ணாமலையின் கருத்து முற்றிலும் தவறானது. உதயநிதி, கிறிஸ்துவர்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தீர்கள் என்றால், நான் கிறிஸ்தவன், என்னை இஸ்லாமியன் என்று நினைத்தால் தான் ஒரு இஸ்லாமியன். என்னை ஒரு இந்து என நினைத்தால் இந்து. நான் அனைவருக்கும் பொதுவானவன் என்றுதான் தெரிவித்துள்ளார். அவர் தன்னை சனாதனவாதி என்று சொல்லாதது தான் அண்ணாமலைக்கு வருத்தம். மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் சனாதானத்தை அவர் ஏற்கமாட்டார்.

பாஜகவினர் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிப்பவர்கள். மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் எம்.பிக்கள், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கக்கூடியவர்கள். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ எல்லாம் அனுப்பி மிரட்டி ஆட்சியை பிடிக்கக்கூடியவர்கள். அது தமிழ்நாட்டில் நடக்காது. தமிழ்நாட்டில் 5 முனை போட்டி என்பது வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக திட்டமிடுகிறது. அவர் சொல்லும் வேலையை சீமான் செய்கிறார். விஜயும் அப்படி தான் இருக்கிறார் என்பது முன்பு சந்தேகமாக இருந்தது. இப்போது உறுதி செய்யும்படியாக உள்ளது. ஏனெனில் பாஜகவின் பாசிச அரசியலை, மதவாத அரசியலை, சனாதன அரசியலை இதுவரை விஜய் வெளிப்படையாக கண்டிக்கவில்லை. அப்போது என்ன தோன்றுகிறது என்றால் விஜயும் சீமானை போல வாக்குகளை பிரிப்பதற்காக பயன்படுத்துகிறார்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

திமுக முன்னெக்கக்கூடிய திராவிட மாடல் சமூகநீதி இந்தியா முழுக்க செயல்பட தொடங்கியுள்ளது.40 எம்பிக்களை இளக்காரமாக பேசியவர்கள் சிந்தனை எப்படி பட்டது என்றால், ஜனநாயகம் அப்படி என்றால் என புரிந்துகொள்ள முடியாதவர்கள் அப்படி பேசியுள்ளனர். ஜனநாயகம் எனும்போது வெற்றிவாய்ப்பு எங்கு வேண்டுமானாலும் போகும். பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது, ஆனால் அவர்களை 400 இடங்களை பெற விடாமல் தடுத்துள்ளோம். அவ்வாறு அவர்கள் வந்திருந்தால் மிகக் கொடுரமான சட்டங்களை எல்லாம் நிறைவேற்றி இருப்பார்கள். அதனை தடுத்துள்ளோம். ஆட்சி அவர்கள் அமைத்திருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய போராட்டத்திற்கு திமுக வென்றிருக்கக்கூடிய 40 இடங்கள் என்பது முக்கியமானது. வெற்றி தோல்வியை தாண்டி நாம் எதற்காக போராடுகிறோம் என்பது மதிப்புவாய்ந்தது.

அம்பேத்கரை என்றைக்கும் பாஜக புகழ்ந்தது இல்லை. அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பாஜக பேசியுள்ளது. இந்த நாட்டிற்கு எதிரான பாஜகவின் கருத்தாகத்தான் பார்க்கிறது. அம்பேத்கர் இந்திய நாட்டின் அடையாளமாக உள்ளார். அவர் பெயரை சொல்வதில் பாஜகவுக்கு இத்தனை வன்மம், எரிச்சல் உள்ளது என்றால், இந்த நாட்டின் அடையாளத்தை சிதைப்பதில் பாஜக எவ்வளவு மும்முரமாக உள்ளது. இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் விதாமாக பாஜக பேசியுள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது, நாட்டின் மீது யாருக்கு உண்மையான அக்கரை உள்ளது என்பதை காட்டுகிறது. திமுகவை ஏன் இழிவாக பேசினார்கள் என்றால், அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அதனால்தான் அவதூறு பேசுகிறார்கள். வெற்றி, தோல்வி என்பதை விட ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது தான் மிகவும் முக்கியம். அதை திமுக முன்னெக்கிறது, மற்ற கட்சிகளும் அதை பின்பற்றுவது தமிழ்நாட்டிற்கு பெருமையான விஷயம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ