Homeசெய்திகள்கட்டுரைபசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக... அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்... ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

-

- Advertisement -

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்தும், இந்த விவகாரத்தின் ஆபத்து குறித்தும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதனை மேலோட்டமாக பார்த்தால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் இன்னொரு மொழியை படித்தால் என்ன தவறு என்று கேட்டு, ஏதோ அவர்களுக்காக பேசுவது போன்று தோன்றும். ஆனால் பாஜகவினர் எதை மறைத்துக்கொண்டு வந்து இப்படி பசப்பு வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்ப்போமானால், தமிழ்நாட்டை புதைகுழிக்குள் தள்ளப்பார்க்கிறார்கள் என்பது புரியும். மூன்றாவது மொழி ஒன்றை படிப்பதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. எந்த மொழி வேண்டும் என்றாலும் படிக்கலாம். தமிழ்நாட்டில் இப்போதும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதில்லை. இதற்கு காரணம் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அப்படி மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இவர்கள் மூன்றாவது மொழியாக மலையாளம், கன்னடம், தெலுங்கு படிக்கலாம் என்றும், இந்தி விரும்பினால் படிக்கலாம் என்று சொல்லலாம். காலப்போக்கில் அந்த மூன்றாவது பட்டியலில் உள்ள இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளை எல்லாம் அழித்ததால்தான் நிதி தருவேன் என்றும் மீண்டும் மிரட்டுவார்கள். இவர்களது நோக்கம் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களில் அடுத்த படியாக கூடுதல் மொழியாக சமஸ்கிருதத்தை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான். இந்தி பேசாத மாநிலங்களில் அவர்கள் தாய்மொழிக்கு அடுத்து இந்தியை திணிப்பது, கட்டாயப்படுத்தி படிக்க வைப்பது ஆகும்.

dharmendra pradhan

அப்படி அமல்படுத்தப்படும் 3-வது மொழி எதுவாகவும் வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்று அண்ணாமலை சவால் விடுகிறார். 2014ல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிரிதி இரானி என்ன உத்தரவுகளை எல்லாம் பிறப்பித்துள்ளார் என்று பொது வெளியில் வைத்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும். மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்கிற சட்டம் உள்ளது. சில நேரங்களில் கே.வி. பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பித்து வந்தனர். அனைத்து பள்ளிகளிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளபோதும், மத்திய அரசு அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. தமிழ்நாட்டில் எத்தனை கே.வி. பள்ளிகள் உள்ளன. அவற்றில் எத்தனை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அதில் எத்தனை இடங்களை மத்திய அரசு நிரப்பியுள்ளது. ஆசிரியர் இருந்தும் எத்தனை இடங்களில் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என்கிற பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும். மத்திய மனிதவள அமைச்சராக இருந்த ஸ்மிரி இரானி கே.வி. பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் 2 மொழிகளை தவிர்த்து மூன்றாவது மொழியாக ஜெர்மன், சீன மொழிகளை கற்பிக்கக்கூடாது என்றும், இந்திய மொழிகளை மட்டுமே கற்பிக்க வேண்டும் என்றார். பின்னர் அவர் 3வது மொழியாக சமஸ்கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பினார். அப்போது உங்கள் நோக்கம் என்ன கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவுவது. மூன்றாவது மொழி என்று சொல்வார்கள். பின்னர் மூன்றாவது மொழி என்று இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதை முதல் மொழியாக ஆக்குவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் கூட்டாட்சி தத்துவத்தை பாஜக சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இவர்களை மன்னிக்கவே கூடாது.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி படிப்பதாகவும், ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை என்றும் அண்ணாமலை சொல்கிறார். அப்படி என்றால் அந்த ஏழைக்குழந்தைகள் சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்று ஏன்  கே.வி. பள்ளிகளுக்கு ஸ்மிரிதி இரானி சுற்றறிக்கை வெளியிட்டார்?. இதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும். சரி பள்ளிகளில் 3வது மொழியாக எந்த மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ படிக்க வேண்டும் என்று எந்த காலத்திலும் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று, அரசியலமைப்பு சட்ட பாதுகப்பு வழங்குவார்களா?. இன்றைக்கு அப்படி ஒரு அரசாணை போடுவார்கள். நாளையே அந்த அரசமைப்பு சட்டத்தையே திருத்துவார்கள். இவர்களை நம்ப முடியாது. இன்றைக்கு லேசாக இடம் கொடுத்தால் இவர்கள் எதையும் செய்வார்கள். தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை, உரிமைகளை இவை அனைத்தையும் கபழீகரம் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளதால்தான், பாஜகவினரின் பசப்பு வார்த்தைகளை நம்ப வேண்டாம் என அனைவரும் எச்சரிக்கிறோம்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையில் படித்தவர்கள் இன்று அணு ஆராய்ச்சி, விண்வெளித் துறை, அமெரிக்காவின் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் முன்னணி பதவிகளில் இருக்கின்றனர். சிபிஎஸ்இ-யில் அவர்களுக்கு பிடித்த ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளைத்தான் படித்தார்கள். அவர்களை சமஸ்கிருதம் படி என்று யாரும் வற்புறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் பேசும் மொழிகளில் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். அதை தயாநிதிமாறன் கேட்கிறபோது, சபாநாயகர் ஓம் பிர்லா அது மூலமொழி என்று பொய் சொல்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக  தமிழை ஒழித்து, தமிழன் என்ற உணர்வை மழுங்கடித்து, அவர்கள் மனதில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தி, மோடி வரும்போதெல்லாம் அவரை இந்தியில் பேசவைத்து, அவரது கருத்துக்களை பரப்பும் ஆர்எஸ்எஸ் கலாச்சராத்தை தமிழ்நாட்டில் கொண்டுவருவதுதான் அவர்களது நீண்ட கால திட்டம். இவ்வளவு தூரம் ஆபத்தான நோக்கங்கள் இல்லாமல் செய்த காங்கிரசுக்கே தமிழ்நாடு மக்கள் வழங்கிய அரை, அவர்களால் இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. அந்த பாடம் தான் பாஜகவுக்கு கிடைக்கும், இவ்வாறு அவர் தெரித்தார்.

MUST READ