Homeசெய்திகள்கட்டுரைவரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!

வரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால்,  மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகம் மத்திய அரசுக்கு வரி கொடா இயக்கம் நடத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் சொன்ன கருத்தில் எனக்கெல்லாம் உடன்பாடுதான். பணத்தை காட்டி, பல்வேறு நிபந்தனைகள் விதித்து, ஒரு கொள்கையை திணிப்பது என்பது லூரிங் பாலிடிக்ஸ் எனப்படும். வெளிப்படையாக சொன்னால் பிளாக்மெயில் பாலிடிக்ஸ். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்த பிறகு, இந்தி மொழி பேசுவோர் எண்ணிக்கையை உயர்த்தவும், இந்திக்கு எல்லா பக்கமும் ஆதரவு உள்ளது என்பதை காட்டவும் தமிழ் இல்லாமல் இந்தியை துணைப் பாடமாக தேந்தெடுத்தால் வருடத்திற்கு ரூ.720 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள், மாணவர்களை இந்தி வகுப்பில் சேர்த்தனர். ஆனால் அதை நம்பி சேர்ந்த மாணவர்களுக்கு கடைசியில் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லினார்கள். தர்மேந்திர பிரதான் அதைதான் செய்கிறார். ரூ.5 ஆயிரம் கோடி என்று அவர் சொல்கிறார். ஆனால் அதற்கு இன்னும் அவர் கணக்கு காண்பிக்கவில்லை. அப்படி நிதியை நிறுத்திவைக்க  மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா. மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு நீதிமன்றம் செல்வார்களா? என பல்வேறு கேள்விகள் உள்ளன.

"மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் ராஜ்பவனுக்கு வழங்கும் நிதியை எல்லாம் நிறுத்தி விட வேண்டும். தமிழ்நாடு அரசின் செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் நடத்துகிறார். அந்த நிகழ்வுகளுககும், தமிழக அரசுக்கும் தொடர்பே கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவி, கையை ஆட்டி பேசுவதற்காக மாதந்தோறும் சம்பளம் போக சில லட்சங்கள் செலவாகிறது. எதற்கு நாம் செலவு செய்ய வேண்டும்?. ஆளுநர் மாளிகை செலவுகளை மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும். தமிழக அரசு வரிகொடா இயக்கம் நடத்துவது இருக்கட்டும். இல்லை ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு நான் வேலை பார்க்கிறேன் என்று ஆளுநர் சொல்ல வேண்டும். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் என் சொந்த செலவில் பார்த்துக் கொள்வேன் என்று அவர் சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இதுதான் நடந்தது. 1959ல் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தான் அலுவல் மொழியாக நீடிக்கும் என சொன்னது தான் இதன் தொடக்கம். 1965ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். அதற்கு முன்பு பல நிகழ்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னாடி வரலாறு உள்ளது. அண்ணாமலைக்கு எல்லாம் இதெல்லாம் தெரியாது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இது வெறுமனே ஒரு மொழியை எதிர்ப்பது என்பது கிடையாது. ஒரு மொழி பேசுபவர்களின் ஆதிக்கம் அதிகமானால், மற்றொரு மொழி பேசுபவர்களின் வீச்சு குறையும். இந்தி பேசும் மாநிலங்களும், இந்தி பேசாத மாநிங்களும் சேர்ந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பு என்று வைத்துக்கொள்வோம். இந்த குடியிருப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று வைத்துக்கொள்வோம். நியாயமாக அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்க விட்டுக்கொடுத்து போக வேண்டும். ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தால், வரும் நபர் நமது ஆளாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தால் அதுதான் ஆதிக்கம். இம்போசிஷன். பிரதமர் இம்போசிஷன் இல்லை என்று சொல்கிறார். ஆனால் அதுதான நடந்து கொண்டிருக்கிறது. பல மொழிகள் நிறைந்த ஒரு தேசத்தில் மொழி ரீதியான திட்டங்களே தவறாகும்.

1960-களில் மும்மொழி கொள்கைதான் இந்தியாவுக்கு நல்லது என்று கொண்டு வந்தார்கள். மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்கிறபோது, அந்த 3வது மொழி என்ன என்று கேள்வி வரும். அப்படி 3வது மொழியாக மாரத்தியை படிக்க வேண்டும் என்றால் அதற்கு கேரளாவில், கர்நாடகாவில் வாய்ப்பு இருக்கிறதா? வாய்ப்பு இல்லை. மராத்தியா? இந்தியா? என 2 வாய்ப்புகள் தான் உள்ளது என்றால், நமக்கு வேறு வாய்ப்பே இல்லை இந்திதான். இந்தியாவுக்கு இன்று வரை தேசிய மொழி எங்கு உள்ளது?. அலுவலக மொழிகள் தான் உள்ளது. இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என மொராய் தேசாய் விரும்பினார். பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி இதனை விரும்பவில்லை. ஆனால் வேறு வாய்ப்பு இன்றி சக அமைச்சர்களின் நிர்பந்தத்திற்கு இறங்கினார். இதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வடிவம். அதுவரை அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் 1966ல் பாகிஸ்தான் போர் வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை புகழ்ந்தனர். 1968 வரை மூன்று மொழி கொள்கை இருந்தது. 1968ல் மீண்டும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் நாம் கடைபிடிக்கின்ற இருமொழி கொள்கை வந்தது. இது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அலுவலக மொழிகள் சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டாகிவிட்டது. இந்து திருமண சட்டம் நாடு முழுமைக்கும் பொதுவானது. ஆனால் சுய மரியாதை திருமணம் சட்டம் செல்லும் என்று தமிழ்நாடு விலக்கு வாங்கியுள்ளது. அதேபோல், இருமொழி கொள்கை செல்லும் என விலக்கு வாங்கியுள்ளோம். இது அண்ணாமலைக்கு தெரியாதா?. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை என்பதே கிடையாது. 1970களிலேயே அதற்கான விலக்கை நாம் பெற்றுவிட்டோம். இனி அதுகுறித்து பேசுவதே முட்டாள்தனம். அப்போது எதற்காக அதை  பேசுகிறார்கள் என்றால் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பத்தான்.

தற்போது புதிய கல்விக்கொள்கை வெறுமனே இந்தி மட்டுமா என்று நினைக்கிறீர்கள். 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வரும். அண்ணாமலை பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்துவோம் என்கிறார். அதோடு சேர்த்து 3,5, 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுத தயாரா? என்றும் கேளுங்கள். கிராமங்களில் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் படிப்பையே நிறுத்திவிடுவார்கள். அதை ஒழித்துக்கட்டி ஆல்பாஸ் நடைமுறை 9ஆம் வகுப்பு வரை கொண்டு வந்தோம். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்காக வகுக்கப்பட்ட கொள்கை அது. அடிப்படையில் கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என பிரதமர் மோடியும், அண்ணாமலையும் சொல்ல வேண்டும். குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று சொன்னவர் மோடி. மத்திய அரசின் அனைத்து கொள்கைகளையும் ஏற்றால்தான் நிதி வழங்குவீர்களா? மாநிலங்களிடம் இருந்து வரி வாங்குகிறீர்கள். அதில் இருந்து ஓரு பகிர்வை தான் எங்களுக்கு வழங்குகிறீர்கள். ஆனால் நமக்கு நியாயமாக வர வேண்டிய நிதியை கேட்டால், நீ நான் சொல்வதை கேட்டால்தான் தருவேன் என்பது எவ்வளவு கொடுமை. அதைதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

school

3, 5, 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்தால் கண்டிப்பாக இடைநிற்றல் அதிகரிக்கும். அந்த காலத்து இடைநிற்றல் எல்லாம் இதனால்தான் நடைபெற்றது. தற்போது 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்தால் நிறைய குழந்தைகள் பெயில் ஆகும். ஆல் பாஸ் நடைமுறை என்பது கற்றல்த்திறன் அடிப்படையிலானது அல்ல. அவர்களது வாழ்வாதாரம் அடிப்படையிலானது. குக்கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களை 3, 5, 8ஆம் வகுப்புகளில் பெயில் செய்தோம் என்றால், அந்த ஊரில் இருந்து பள்ளிக்கு வரமாட்டார்கள். அவர்கள் அங்கேயே வேலை பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பார்கள். பீகார், ராஜஸ்தானில் போய் கேட்டால் அந்த குழந்தைகள் கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் தங்களின் உண்மையான தாய் மொழியை இழந்துவிட்டார்கள். இந்திதான் தங்களது தாய்மொழி என தவறாக நினைக்கிறார்கள். இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு வருகிறது. பிகார் போன்ற இடங்களில் கிராமங்களில் இருந்து உயர்ந்த பதவிகளுக்கு செல்வோர், தங்களது தாய் மொழியை மீட்டுடெக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். தங்கள் மொழிக்கு எழுத்துரு கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி - அண்ணாமலை 

இப்பாடியான சூழல் நிலவும்போது, அண்ணா மும்மொழி கொள்கையை ஆதரித்தார் என அண்ணாமலை சொல்கிறார். 1967க்கு முன்பு அண்ணா மற்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கையை ஏற்றால், நாம் அது குறித்து பரிசீலிப்போம் என்றார். பின்னர் 1968ல் இருமொழி கொள்கை அமலுக்கு வந்துவிட்டது. மகாத்மா காந்தி ஆங்கில எதிர்ப்பை கொண்டுவரும்போது இந்தி என்கிறார். அப்போது இந்தி இருந்ததா? என்றால் அது இந்துஸ்தானி, உருது கலந்தது. உருது மொழியின் அமைப்பை பார்த்தோம் என்றால் முகலாயர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருது வருகிறது. இப்படி மொழி அரசியல் என்பது உருகுகலன். நேடியாக நன்மை பயக்காது. அப்படி என்றால் இந்திக்காரன் ஏன் தென்னகத்திற்கு படை எடுத்துவந்து வேலைத் தேடுகிறார்கள். தென்னகத்தில் இருப்பவன் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று வேலை தேடுகிறான். வேலைத்தேடும்போது அதிகப்படியான பொருளாதாரத்திற்கு தான் தேடுவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் பிரச்சாரம் என்ன என்றால், அடிப்படையில் எல்லாமே பொருளாதாரம் தான் முட்டாள்களே என்றுதான், அவரது பிரச்சார வாசகம் அமைந்திருந்தது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ