Homeசெய்திகள்கட்டுரை"ஷா"வுக்கு சவால் - தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!

“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!

-

- Advertisement -

நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப் தங்கரின் விமர்சனம் மற்றும் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நிர்வாகத்தில் நீதிமன்றத்தில் தலையிடலாமா? என்று ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்புகின்றனர். இயல்பாக நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடும் வகையில் நிர்வாகத்தை நடத்தக்கூடாது. சிறப்பு அதிகாரத்தை நீதிமன்றம் மிகவும் அரிதாகவே பயன்படுத்த வேண்டும். இந்த சிறப்பு அதிகாரம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உள்ளது. எழுதப்பட்ட வரிகளை விட சட்டம் உணர்த்துவது மிகவும் சிறந்ததாகும். ஆளுநர் ரவி விவகாரத்தில் சட்டம் எதை உணர்த்துகிறது என்றால், கால தாமதம் கூடாது என்பதாகும். இது அரசியலமைப்பு சட்டத்தில் இரு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று As Soon As Possible. இன்றைக்கு மசோதா வந்தால், இன்றைக்கே அனுமதி அளிப்பது. மற்றொன்று Reasonable Time. நியாயமான கால அவகாசம். இல்லை எந்த கால அவகாசமும் கொடுக்கவில்லை என்று மசோதாக்களை கீழே போட்டு உட்கார்ந்திருப்பது தவறாகும்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

குடியரசுத் தலைவர் என்பவர் ஆளுநரின் நீட்சி ஆவார். ஆளுநர், நான் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன் என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஜெயில்சிங் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் ராஜிவ்காந்தி அரசு போஸ்டல் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பியது. ஆனால் ஜெயில் சிங் அதற்கு ஒப்புதல் தரவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கு காரணமாக அரசியலமைப்பு சட்டத்தில் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று சொன்னார். இதனால் பிரதமர் ராஜிவ்காந்திக்கு தான் தர்மசங்கடம் ஏற்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதா? 3 நீதிபதிகள் கொண்ட உள் விசாரணைக்கமிட்டி அமைத்தீர்களே அதெல்லாம் என்ன? என்று ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது குற்றச்சாட்டு என்பது மிகவும் சரியானது. நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து நீதித்துறை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கேலிக்கூத்தாகும்.

இந்த கலங்கத்திற்காக, சிறப்பு அதிகாரத்தை அணு ஆயுதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. குடியரசுத் துணைத் தலைவரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக  இருக்க வில்லையே. அவர் ஆளுநராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் என்ன செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது குடியரசு துணை தலைவராகி, ராஜ்யசபா தலைவராகி உட்கார்ந்திருக்கிறீர்கள். அவரே தனது பதவியின் காரணமாக 4 பல்கலைக் கழங்களுக்கு வேந்தராக உள்ளார். நீங்கள் ஆளுநருக்கு தான் ஆதரவளிப்பீர்கள். அப்படி இருக்கையில் பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கும் உத்தரவை தங்கர் எப்படி ஏற்றுக்கொள்வார்?

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சொன்னதால் உயர்ந்தது. ரவி சொன்னதால் தாழ்ந்தது என்று பார்க்கக் கூடாது. இந்த நாடு மக்களுக்கு நன்மை செய்வதை நோக்கி செல்கிறது. நன்மை செய்கின்ற மாநிலங்கள் வெறுமனே பயனாளர்களா? அல்லது இந்திய நாட்டின் மொத்த ஆட்சியில் மாநிலங்கள் பங்கேற்பாளர்களா? என்பதுதான் கேள்வி. என்னை பொறுத்தவரை மாநிலங்கள் எல்லாம் பங்கேற்பாளர்கள். அனைத்து மாநிலங்களும் முன்னேறினால், நாடு தானே முன்னேறும். அதற்கு ஏற்ற மாதிரியான வழிவகைகளை செய்வது நமது அரசமைப்பு சட்டம். அப்போது அரசமைப்பு சட்டத்தின் உணர்வு என்னவோ அதன்படி நடந்துகொள்ள வேண்டியது நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் அரசியல்வாதிகளின் கடமையாகும்.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னது வாக்கு வங்கி அரசியல்தான். ஆனால் நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நாம் இந்த நாட்டின் மக்களுக்கும், மக்களின் நன்மைக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். 1967ல் அண்ணா மாநில சுயாட்சி தொடர்பாக பேசினார். தம்பி கள்ளக்குறிச்சியிலே ஒரு சர்க்கரை ஆலை. அந்த சர்க்கரை ஆலையிலே சர்க்கரை உற்பத்தி ஆகிறது. ஆனால் உற்பத்தியான சர்க்கரையை தமிழ்நாட்டிற்கு கொடுப்பதற்கு அதிகாரம் இல்லை. உற்பத்தியான சர்க்கரையை எப்படி வினியோகம் செய்வது என்று மத்திய  அரசாங்கத்திடம் கேட்டால் பதிலே இல்லை. இதுதான் தம்பி நாட்டின் நிலை, என்று சொன்னார். அதுதான் உண்மை. நீங்கள் தான் சொல்லப்போகிறீர்கள். சீக்கிரம் சொல்லுங்கள் என்று சொல்கிறோம். யோசித்து சொல்கிறோம் என்கிறார்கள். அப்போது மக்களுக்கு எப்போது நன்மை செய்வீர்கள். தினமும் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் சர்க்கரை தேவைப்படுகிறது. அப்படி தினமும் கொடுப்பதற்கு வழியில்லை. ஆனால் ஓரிடத்தில் சர்க்கரை உற்பத்தியாகி குவிந்து கிடக்கிறது. அந்த ஆலை தொழிலாளர்களுக்கும் நன்மை கிடைக்கவில்லை.

கலைஞர் - அண்ணாதுரை

இதற்கெல்லாம் என்ன காரணம்? என்றால் நிர்வாகத்தில் ஏற்படுகிற மந்தம். 1950 முதல் 1967 வரை நாம் என்ன என்ன அனுபவங்களை அடைந்தோமோ? அந்த அனுபவங்களை வைத்து நாம் புதிய நிர்வாக முறைகளை உருவாக்கும்போது மாநில சுயாட்சி வரத்தான் செய்யும். மாநில சுயாட்சி என்பதே ஒரு வகையிலான அதிகாரப் பகிர்வுதான். மாநில சுயாட்சி என்பது திசைத் திருப்பும் வேலை அல்ல. திசைவழி பயணம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ