Homeசெய்திகள்கட்டுரைமாற்றம் முன்னேற்றம் - நாம் மாற வேண்டும் - 1

மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1

-

- Advertisement -

1.நாம் மாற வேண்டும்

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

– சுவாமி விவேகானந்தர்

நம் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைவேறாத ஆசைகள் பல இருக்கிறது. அதேபோல் நமது வாழ்க்கை மிகவும் உன்னதமாக, சீரும், சிறப்புமாக இருக்க வேண்டும் என்கிற உள்மன ஏக்கமும் இருக்கிறது.

நாம் எப்படியாவது உயர்வடைய வேண்டும். சமுதாயத்தில் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறோம். இது வெளியில் தெரியாமல் உள் மனதில் இருப்பது. ஆனால் இப்படி ஒரு எண்ணம் நம்மிடம் இருப்பதை உணராமல் பிரச்சனைகளை உருவாக்கி குழப்பமான வாழ்க்கையை வாழ்கிறோம்.

பறவை இனங்களிலேயே அதிகபட்சமாக எழுபது ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய பறவை கழுகு மட்டுமே. ஆனால் எழுபது ஆண்டுகள் வாழ்வதற்கு முன்பு கழுகு தனது நாற்பதாவது வயதில் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையிருக்கிறது.

கழுகின் நாற்பதாவது வயதில், அதன் அலகு மற்றும் சிறகுகள் வலுவடைந்து, பறப்பதற்கு சிரமத்தை அனுபவிக்கிறது. இதே நிலை நீடித்தால் கழுகினால் பறக்கவோ இரை தேடவோ முடியாது.

இந்த நிலையில், கழுகு இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு வழி மரணம், மற்றொரு வழி ஐந்து மாதங்கள் மரண வலியை தாங்க வேண்டிய போராட்ட வாழ்க்கை.

 அதாவது ஒன்று கழுகு இறக்க வேண்டும் அல்லது ஐந்து மாதத்திற்கான போராட்டம் மிகுந்த ஒரு வாழ்வினை அது வாழ வேண்டும்.

முடிவில் கழுகு ஐந்து மாத போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறது.

அதன்படி கழுகு உயரமான மலையில் சென்று தன் அலகினை பாறையில் மோதி, உரசி முகப்பினை முறித்து விடுகிறது. மேலும் தன் இறக்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இறகுகளையும், வலியை தாங்கிக்கொண்டு உருவிப்போடுகிறது.

பசியையும், தாகத்தையும் பயங்கரமான வலியையும் தாங்கிக்கொண்ட கழுகு, ஐந்து மாதத்திற்கு பிறகு புதிய சிறகுகளோடும், அலகோடும் இளமையாக தோன்றி, அடுத்த முப்பது வருடத்திற்கு ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழ்கிறது.

 ஐந்தறிவு ஜீவராசிகள் கூட தனது வாழ்விற்கான மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றியடையும் பொழுது, ஆறறிவு பெற்ற நம்மால் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றியடைய முடியாதா? முடியும்!

 நம்மை அறியாமலேயே உயர்வடைய வேண்டும் என்கிற தீராத தாகம் நமக்குள் இருக்கிறது. இலக்கை நோக்கி நமது உள் மனம் பயணம் செய்ய துடிக்கிறது. ஆனால் நாம் அதனை கூர்ந்து கவனிக்காமல் அதற்கான முயற்சியில் இறங்காமல் தானாகவே கிடைத்து விடும் என்று சோம்பேரித்தனமாக வாழ்ந்து வருகிறோம்.

”வாழ்க்கை மிகவும் அழகானது இயல்பானது. அதன் வழியில் வாழ்ந்தால் இனிமையானது. நாம் அதனை புரிந்து கொள்ளாமல் குழப்பத்தை தோற்றுவிக்கிறோம். வாழ்க்கையின் ஒழுங்கை மீறுகிறோம். அதன் பின்னர் அது நமக்கு எதிராக திரும்பும் போது வன்முறையில் இறங்குகிறோம்”. பொறாமை கொள்கிறோம். வாழ்க்கையை கடினமானதாக மாற்றி விடுகிறோம். சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கிறோம். அதனாலேயே நமது வாழ்க்கையும் சாதாரணமானதாக அல்லது மோசமானதாக மாறி இருக்கிறது.

உள் மனம் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறது. திசைமாறிய மனமோ சாதாரண வாழ்க்கையே போதும் என்கிற நிலையில் நின்று விடுகிறது.” அப்போது மனம் ஒருவிதமான போராட்டத்தை சந்திக்கிறது இதுவே குழப்பமான வாழ்க்கைக்கு அடிப்படை காரணம்.

 உள்மனம் உந்துதலை நாம் உதாசீனப்படுத்தினால் அல்லது அதனை கூர்ந்து கவனிக்க தவறினால் நாம் குழப்பத்தில் தான் வாழ வேண்டும். நமது வாழ்க்கையில் ஏதோ தவறு செய்து விட்டோம் என்ற உறுத்தல், குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அப்போது அதற்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழும். அந்த எண்ணம் வரும் போது நாம் உற்சாகமாக எழுந்து நிற்க வேண்டும்.

அடுத்தது நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய அறிவை மேலும் அதிகரிக்க வழிமுறைகளை தேட வேண்டும். நம்முடைய ஆற்றலை பல மடங்காக பெருக்குவதை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு இந்த நூல் முழுவதையும் படிக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் இது தான்.

 கற்பனை சக்தியால் மட்டுமே அறிவை விரிவடைய செய்ய முடியும். அடிக்கடி நாம் விரும்பும் வகையில் நாம் விரும்பும் அரசியல் தலைவராகவோ, தொழிலதிபராகவோ கற்பனை செய்து கொள்ள  வேண்டும் இது எப்பொழுதும் எல்லோருக்கும் பொருந்தும் ”நடைமுறை விதி என்று அழைக்கிறார்கள்.

 ஒரு பொழுதும் தோல்வியைப் பற்றியோ, தோல்வி அடைந்ததைப் பற்றியோ கற்பனை சக்தி வலையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எண்ணம் ஒரு விதமாகவும், முடிவு வேறு விதமாகவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அன்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் வெறுப்பு என்பதே வராது”.

நமது உள் மனதிடம் ஒரு உந்துதல் இருக்கிறது. வேகம் இருக்கிறது. அந்த உந்துதலையும் வேகத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் எதுவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை பற்றியே தொடர்ந்து கற்பனை செய்ய வேண்டும். மிகப்பெரிய மனிதனாக ஆளுமையாக கற்பனை செய்வோம். அதை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வோம்”.

MUST READ