குடிமகனே!!! குடியில் இன்பம் பெரும் குடிமகனே, இந்திய குடிமகனாக கருதி மதுவின் பிடியில் அடிமையாகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்…
நாட்டிற்கு நீ ஒரு வருவாய் என்று மதுக்கடை உன்னை அழைக்கிறது.. வீட்டிற்கு நீ வருவாய் என்று உன் குடும்பம் அங்கு காத்திருக்கிறது…
குடியால் நிலை தடுமாறுகிறாய் நீ… உன்னால் மனம் தடுமாறுகின்றாள்…. உன் மனைவி..
கணவனின் வரவை எதிர்பார்த்து வாசலில் நிற்கும் ஒவ்வொரு மனைவியும் தினம் கண்டது தோல்வியே…. ஆனால் அவனோ மதுக்கடையில் தொலைத்து விடுகிறான் அவன் மனைவியின் அன்பை…
உன் அன்பிற்காகவும் அரவணைப்பிற்கும் காத்திருக்கின்றாள் நீ பெற்ற பெண்.. நீயோ புகையிலை வாசத்தோடும் மதுவின் மனத்தோடும் அவளை நாடுகிறாய்… ஏங்கும் அந்த பிஞ்சு உள்ளம் உன் அன்பை காணாமல்… என்பதை உணர்வாயா…..??
ஒரு பெண் மற்ற ஆண்களை நம்பவும் வெறுக்கவும் காரணமாக இருப்பது ஒவ்வொரு தந்தையின் செயலை கொண்டு தான்… அவள் வாழ்க்கை நரகமாவதும் சொர்க்கமாவதும் உன்னில் தான்… என்பதை நீ அறிவாயா ..??
உன் குடும்பத்தில் உன் மனைவியின் காதலில் நீ பெற்ற குழந்தைகளின் மகிழ்ச்சியில் இல்லாத போதையா? அந்த மதுவில் இருந்துவிட போகிறது…
மானிடா புரிந்துகொள்… வாழ்வதோ சில காலம்… உனக்காக அல்லாமல் நீ பெற்ற மழலைகளுக்காக வாழ்ந்து பார்…. புரியும் வாழ்வின் அர்த்தம்….
அவர்கள் சிரிப்பில் உண்டு 1000-மது பாட்டிலின் போதை… அவள் உன்னை கட்டியனைத்து முத்தமிடும் அன்பில் உண்டு… மதுவை விட அதிகமான போதை…
பிறக்கும் பொழுதே நீ மது அருந்தி பிறக்க வில்லை…. அப்போது நீ அருந்தியது ஒரு பெண்ணின் இரத்தம் என்பதை அறிவாயா???
வாழ்வின் ஒரு பகுதியாக வந்த பழக்கம்….. அது பாதியிலே சென்றால் தான் உன் வாழ்க்கை ஜொலிக்கும்…
-ப.சுஜி