Homeசெய்திகள்கட்டுரைசம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

-

- Advertisement -

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:  நாளைக்கு எதுவும் நடக்கும். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி எடப்பாடிக்கு ஒரு சம்மன் அனுப்பலாம். உங்கள் சம்பந்தி வீட்டில் நடந்த சோதனையில் டைரியில் உங்களுக்கு தொடர்பு உள்ளது என்று சொல்லலாம். பதில் முடிந்து வீட்டிற்கும் அனுப்பலாம். அல்லது சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜியை ஓராண்டுக்கு மேல் சிறை வைத்தது போல, கொஞ்சமாவது வைக்கலாம் என பாஜக நினைத்தால் அதை செய்து காட்டுகிற வல்லமை அவர்களுக்கு உள்ளது. அவற்றை எல்லாம் எடப்பாடி தாங்குகிறாரா? என பார்க்கலாம். கடந்த 5,6 ஆண்டுகளில் தங்களுடைய அரசியல் எதிரிகளையும், தாங்கள் சொல்வதை ஏற்க மறுப்பவர்களையும் பாஜக என்ன செய்தது என்று பார்த்ததால் நான் இதை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல் படி எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் போக போகிறதாக தெரிய வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அனுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடைபெற்றது என்றால் பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளலாம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!

 

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தலைமை கழகத்தில் தீர்மானம் போட்டு எடப்பாடி வெளியே வந்தார். அதற்கு ஒரு வாரம் முன்பாக 4 முன்னாள் அமைச்சர்களை, 2 பேரை பெங்களுருவில் இருந்தும், 2 பேரை கொச்சியில் இருந்தும் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு அனுப்பினார். அப்போது கூட்டணியை விட்டு வெளியே வருகிறோம் என்று எச்சரிக்க அவர்கள் செல்லவில்லை. கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை கண்டித்து வையுங்கள் என்றுதான் சொன்னார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணாமலை சீண்டிக் கொண்டிருக்கிறார். இது அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. கூட்டணி தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்று பாஜக தலைவரை பார்த்து சொல்லிவிட்டு வந்தார்கள். ஒரு வாரம் காத்திருந்தபோதும் எந்த பதிலும் வரவில்லை. போனில் கண்டித்து விட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் வெளிப்படையாக கண்டித்தால்தான் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். அதுவும் இல்லாதபோது தான் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார். ஆனால் தேர்தல் நெருங்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நிர்மலா சீதாராமன், இன்னொரு சாமியாரை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டனர். எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிடலாம் என தூது விட்டனர். ஆனால் எடப்பாடி உறுதியாக இருந்தார்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

இந்த நிமிடம் வரை பாஜக எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தான் உள்ளார். சரி எடப்பாடியை தள்ளி வைத்துவிட்டால் அதிமுக எப்படி உறுதியாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனானப்பட்ட சசிகலாவையே ஒருநாளில் தூக்கிப்போட்ட கட்சிதான் அதிமுக. எடப்பாடி எல்லாம் எம்மாத்திரம். அதிமுக பொதுக் குழுவினரின் உணர்வு என்ன என்றால்? எது நடந்தாலும் கட்சி நல்லதற்கு தான் நடக்கிறது என்பார்கள். சசிகலாவை பொதுக்குழு பொதுச்செயலாளராக தேர்வு செய்தால் கை தட்டுவார்கள். அந்த பதவியில் இருந்து அவரை நீக்கினாலும் கை தட்டுவார்கள். ஒரு பேச்சுக்கு நாளை எடப்பாடிக்கு எதாவது நடைபெறுகிறது என்றால், சத்தம் இல்லாம் விலகிக்கொண்டு அடுத்து செங்கோட்டையனா?, நந்தம் விஸ்வநாதனா? என்று யார் தலைமை பொறுப்புக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வர்கள் தான் அதிமுக தொண்டன். அவனது நோக்கம் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.

ஒற்றைத் தலைமை ஆனால் ஜெயித்துக்காட்டுவேன் என்று எடப்பாடி சொன்னார். ஆனால் ஜெயிக்க முடியவில்லை. சசிகலா ஆக்டிவ் அரசியலுக்கு இன்னும் வரவே இல்லை. ஒபிஎஸ் 2021 தேர்தலில் இருந்த போதும் ஆட்சியை இழந்தார்கள். தினகரனை சேர்த்துக்கொண்டு 15 தொகுதிகளை கொடுங்கள் என்று சொன்னார் அமித் ஷா. சின்னம், கொறடா உத்தரவு எல்லாம் அவரது கட்டுப்பாடு என்றுதான் சொன்னார். ஆனால் எடப்பாடி கேட்கவில்லை. இன்றைக்கு அதை ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக ஆட்சியே இல்லையே. இத்தனை தவறுகளையும் அதிமுக தொண்டர்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உணர்வுக்கு ஒரு உருவம் கொடுத்து, அதிமுகவை வலிமைப்படுத்துவது சுயநலத்திற்காக என்ற பேச்சு நடக்கலாம்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

ஓபிஎஸ், தினகரன் போன்ற துரோகிகளுக்கு கட்சியில் இடமில்லை என்கிறார் எடப்பாடி. அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக சொல்கிறார். ஜனவரி 2024ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியின் அருகிலேயே எடப்பாடி அமந்திருந்தார். இன்று ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் மரியாதை அளிக்கிறார்கள். ஓபிஎஸ் உள்ளிட்டோர் திமுக உடன் சேர்ந்து விட்டார்கள் என ஜெயக்குமார் சொல்கிறார். என்னை பொருத்தவரை கள்ளக் கூட்டணி என்பது எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்கும் தான். அதிமுக ஆட்சிக்காலததில் போட்ட வழக்குகளுக்காக திமுக அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு நடையாக நடக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அப்படி பாதுகாக்கிறார். இப்போது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எந்த முடிவுக்கு வருகிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து விலகியது, இடைத் தேர்தல் புறக்கணிப்பு என எடப்பாடி எடுக்கும் முடிவுகள், திமுகவுக்குதான் சாதகமாக முடிகிறது. பாஜகவுடன் சேர்ந்திருந்தால் ஒரு தொகுதியாவது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும்.

துரோகிகள் என்று ஒதுக்கிவைத்துவிட்டு உங்களால் சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க முடிந்ததா?. 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தீர்கள். சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜனவரி 2021ல் டெல்லியில் சொன்னார். அவரது தைரியத்தை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் அந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார்கள். 2024ல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தபோது எல்லாரும் பாராட்டினார்கள். ஆனால் ஒரு வலிமையான கூட்டணி அமைக்க முடியவில்லை. அங்கேயும் தோல்வி. அப்போது இன்னொரு தோல்வியை அதிமுக தொண்டன் தாங்க மாட்டான். அதிமுக பலவீனமாக இல்லை. காணாமலே போய் விடும். இந்த ஆபத்தை உணர்ந்துதான் முக்குலத்தோர் சமுதாயம் அதிமுகவை விட்டு போய்விட்டது. ஓட்டுபோடவில்லை. இனி ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டே போய்விடுவார்கள். இந்த ஆபத்தை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

eps ops

ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் 3.5 லட்சம் வாக்குகள் வாங்குகிறார். தேனியில் டிடிவி 2.5 லட்சம் வாக்குகள் வாங்குகிறார். மதுரையில் அதிமுக டெபாசிட்டை இழந்தது. டெபாசிட் போகும் இடமா மதுரை? மதுரைக்கும், அதிமுகவுக்கும் உள்ள பிணைப்பு தெரியுமா? உணர்வு ரீதியாக அங்கே அதிமுகவுடன் பிணைப்பு உள்ளது. அங்கே முக்குளத்தோர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். இந்த உண்மையை ஒப்புக்கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?. ஒரு தலைவன் செய்கிற வேலையா என அதைதான் குருமூர்த்தி சொல்லி காண்பித்தார். இதைதான் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் புலம்புகிறார்கள். அதிமுகவில் ஒற்றுமை வேண்டாம் சரி. தனியாக நின்று ஜெயித்து காட்டுங்கள். அப்படி ஜெயித்தால் யாராவது பேச முடியுமா? ஆனால் தேர்தலில் ஜெயிக்கவும் மாட்டீர்கள், செய்வது எல்லாம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருப்பீர்கள்.

ஓபிஎஸ், தினகரன் அதிமுகவில் சேர்க்காத நிலையில், அவர்கள் பாஜக கூட்டணியில் சேந்துள்ளளனர். நீங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தபோது துரோகம் இல்லை.ஆனால் அவர்கள் இருவரும் போய் சேர்ந்தால் துரோகம். ஓபிஎஸ், தினகரன் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார் என்று அறிவித்துள்ளனர். இதற்கு தடையாக இருந்தால் தினகரன், தான் 2026 தேர்தலில் போட்டியிட கூட மாட்டேன் என்றும் அறிவித்து விட்டார். தினகரன் இன்று தனிக்கட்சி நடத்துகிறார். அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த கூட்டணியை வலுப்படுத்துவதற்காக அதிமுகவை அழைக்கிறார். எடப்பாடி இல்லாமலும் கூட்டணி என்பதன் ரகசியம், ஓபிஎஸ்க்குதான் தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ