Homeசெய்திகள்கட்டுரைதமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!

தமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!

-

- Advertisement -

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தணிச்சையாக வெளிநடப்பு செய்வது என்பது, தமிழக மக்களை இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள் என்று சொல்வேந்தர் சுகி சிவம் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆன்மீக சொற்பொழிவாளரான சொல்வேந்தர். சுகிசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  எவ்வளவு பெரிய ஒரு இயக்கமாக இருந்தாலும், மன்றமாக, கூட்டமாக, குடிகளாக இருந்தாலும் அதில் தலைவன் தலைமை அவசியமாகிறதா? இல்லையா? என்றும் உலகம் முழுவதும் கேள்வி உள்ளது. ஒரு நல்ல தலைவன் இல்லை என்றால், வலிமையான கூட்டம் கூட வெற்றிபெற முடியாமல் போய்விடும். ஒரு மோசமான கூட்டமே கையில் கிடைத்தாலும் சரியான தலைவன் கையில் கிடைத்துவிட்டால் அவர்கள் வெற்றியை குவித்துவிடுவார்கள். ஒரு சில தனி மனிதர்களின் அணுகுமுறை மிகப்பெரிய அளவில் வெற்றியையும் தருகிறது, மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியையும் தருகிறது.

நமது முதல்வர் அவர்கள் கொஞ்சம் மென்மையாக பல பிரச்சினைகளை அணுகுகிறவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற உணர்வில் எந்த ஒரு பிரச்சினையையும் அவர் அணுகமாட்டார். அவர் மென்மையாக நடந்துகொள்கிறார் என்பதற்காகவே அவர் பலம் குறைந்தவர் என்று பல பேர் நினைக்கிறார்கள். காலத்திற்கு ஏற்று உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, என்ன மாதிரியான நெலிவு சுழிவோடு ஒன்றை கொண்டு செலுத்த வேண்டும் என்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவராக முதல்வர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது பலருக்கு புரியவில்லை. மிகப்பெரிய சிக்கலான சூழலில் தமிழ்நாடு உள்ளது. நமக்கு ஒரு இம்சை அரசன் கிடைத்துள்ளார். எதிர்பார்க்க முடியாத அறிவுப்பூர்வமாகவே நடந்துகொள்ளாத ஒரு மனிதரை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொண்டு இந்த ஆட்சியை வெற்றிகரமாகவே நடத்திக்கொண்டு போகிறாரே அதுவே இமாலய சாதனை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

தனிமனித சண்டையாக இன்று எதுவும் இல்லை. ஒரு இனத்தை அழித்துவிட வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களும், அந்த இனத்தை காத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களும் சந்திக்கின்ற ஒரு போர் முனையாக இன்றைக்கு சூழல் இருக்கிறது. ஒரு இனத்தை முழுமையாக காக்க வேண்டும் என்ற பொறுப்பு  உணர்ச்சியோடு, இன்றைக்கு நமது முதல்வருடைய தலையில் மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கே இருந்தவர்கள் என்னென்ன மாதிரியான யுக்திகளை பயன்படுத்தி தெற்கே இருக்கிறவர்களை வீழ்த்திவிட வேண்டும் என நினைத்தார்களோ? அதே யுக்திகள் இன்றைக்கு கையாளப்படுகின்றன. நீங்கள் நினைப்பது போன்று கட்சிகளின் பெயர் வேண்டுமானால் மாறி இருக்கலாம். கபலிகரம் செய்கிற மனோ நிலை மாறவில்லை என்பதை நுட்பமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியில் நலமுடைய ஒரு தமிழகத்தை தரமற்ற திறமற்ற ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வில்லை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அதனால் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் கல்வியில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. எத்தனையோ விஷயங்கள் இருக்கிறபோது அவர்கள் ஏன் பல்கலைக் கழகங்களையும், துணை வேந்தர்களையும் மட்டும் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்?. அதற்கு முக்கிய காரணம் கல்வியில் அவர்களது கோட்பாடுகளை திணிக்க வேண்டும் என்றால், அவர்கள் சொல்லுவதை கேட்கிற துணை வேந்தர்கள் வந்தால் மட்டும்தான், அவர்கள் நினைக்கிற கருத்துக்களை திணித்து மீண்டும் நம்மை முட்டாள் ஆக்க முடியும். நாம் அறிவாளியாக இருக்கிறபோது அறிவாளியாக இருக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் ஒரு அடிமைத்தனத்தை உண்டு செய்வதற்கான துணை வேந்தர்களை அவர்கள் தேடுகிறார்கள். ஆனால் முதல்வர் ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளார். வேந்தருக்கான அதிகாரம் முழுவதும் முதல்வருக்கு வரும் விதமாக, ஆளுநரை துணை வேந்தர் நியமனத்தில் இருந்து நகர்த்தி வைக்கும் முயற்சியை தமிழக சட்டமன்றம் மேற்கொண்டது. ஆனால் அந்த மசோதாவில் ஆளுநர் கையொப்பம் போடவில்லை. தன்னுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுக்கிற மசோதாவில் ஆளுநர் எப்படி கையெழுத்து போடுவார் என்று விவாதம் எழுந்தது.

'6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!'

மக்களுக்கு தெரியாத ஒரு மிகப்பெரிய விஷயத்தை இப்போது நான் முன்வைக்கிறேன். 2013ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அங்கிருந்த ஆளுநருடைய அதிகாரம் முழுவதையும் பறித்து 13 பல்கலைக் கழகங்களுக்கு முதலமைச்சர் ஆளுமைக்கு கீழ் வரும் என்ற சட்டத்தை நரேந்திர மோடி குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அப்போது, ஆளுநராக இருந்தவர் அந்த மசோதாவிற்கு கையொப்பம் இட மறுத்துவிட்டார். ஆனால் நரேந்திர மோடி  பிடிவாதமாக நின்று, பின்னர் வேந்தராக வேண்டும் என்றால் ஆளுநர் இருக்கட்டும், ஆனால் அதிகாரம் முழுவதும் முதல்வருக்கு தான் இருக்க வேண்டும் என்று மசோதாவில் மாற்றம் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். வேறு வழியின்றி ஆளுநரும் கையெழுத்திட்டு அது சட்டமாகியது. அப்போது குஜராத்தில் மட்டும் பல்கலைக்கழகம் முதல்வர் கைகளில் இருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் முதல்வர் கையில் பல்கலைக்கழங்கள இருக்கக் கூடாது என்பது எந்த அடிப்படையில் நியாயம்?

மக்கள் மன்றத்தின் கணக்குப்படி ஆட்சி என்பது முதல்வருடையது தான். சட்டமன்றத்தின் கணக்குப்படி ஆட்சி என்பது முதல்வருடையது. நீதிமன்றத்தின் கணக்குப்படியும் ஆட்சி என்பது முதல்வருடைய ஆட்சிதானே ஒழிய, அது ஆளுநரின் ஆட்சியாக கருதப்படாது. இப்போது மாதம் ரூ.1,000 உங்களுக்கு வராவிட்டால் ராஜ்பனிடம் போயா கேட்பீர்களா?. வெள்ளம் வந்துவிட்டால் உடனே ராஜ்பவனிடம் சென்றா மனு கொடுப்பீர்கள்?. அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம்தான் உள்ளது. எப்போது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒரு முதல்வருக்கு இருக்கிறதோ, அப்போது மக்களுடைய மரியாதையும் முதல்வருக்கு மட்டும்தான் வழங்கப்படும். யாரை பொறுப்பு என்று சொல்கிறோமோ, அவர்களுக்குதான் உரிய மரியாதை உலகத்தில் கொடுக்க முடியும். வந்து போகிறவர்களுக்கு அந்த மரியாதையை கொடுக்க முடியாது என்பதை தயவு செய்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் முதல்வர் அவர்களை ஒரு தனி மனிதராக மட்டுமே இங்கே பாராட்ட விரும்பவில்லை. இப்போது நிகழ்கின்ற தமிழ் மக்களுடைய அடையாளத்தை, இனத்தை, கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய ஒரு பொறுப்பு மொத்தமாக தமிழகம் முதல்வரிடம் உள்ளது. அவருடைய கைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. சட்டமன்றத்தில் ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். நீங்கள் நினைப்பது போன்று இது சாதாரண விஷயம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சபையில் இருந்து ஆளுநர் தன்னிச்சையாக வெளிநடப்பு செய்வது என்றால் தமிழக மக்கள் அனைவரையும் அவர் இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள். மக்களாட்சி தத்துவத்தை கேள்விகுறியதாக ஆக்கியுள்ளார் என்பது பொருள். இவற்றை எல்லாம் இன்னும் நம் மக்கள் சரியாக புரிந்துகொள்ள வில்லை. வெறும் கட்சி தகராறாக இதை நான் பார்க்கவில்லை. தேசத்தின் கவுரம் பாழ்படுகிறது என்பதை பற்றிய கவலையால் சொல்ல வந்திருக்கிறேன்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

முகாலாயர் ஆட்சிக்காலம் உள்பட பல்வேறு வடஇந்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்தை தேடிப்பார்த்தோம் என்றால் தமிழ்நாடு அவர்களது ஆளுகைக்கு உட்படாமல் துண்டாகவே இருக்கும். ஏன் என்றால்? என்ன முயன்றாலும் இந்த மக்களை அடிமைப்படுத்தவே முடியாது என்பது தீர்மானமானது. நாம்மால் சோறு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் சொரணை இல்லாமல் இருக்க மாட்டார்கள். தமிழர்கள் இன்னொருவருக்காக தாழ்ந்து போவதற்கு ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள். இது தமிழர்களின் இயல்பு. அதை கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் நெருப்பில் கை வைப்பது போல தவறுதலாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இந்தியா என்கின்ற கட்டமைப்பை  ஏற்றுக்கொள்கிறோம். அது தமிழர்கள் பெருந்தன்மையால் நடந்துகொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்து கொள்ள வேண்டும். பேரினவாதம் இவற்றை வைத்துக்கொண்டு யாரையாவது நாம் அடிமைப்படுத்தி விடலாம் என்ற கனவோடு எந்த பிரச்சினையையும் கையாளக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ