நாட்டுச் சர்க்கரை நன்மை தரும் – டாக்டர் அட்வைஸ்
எந்தவகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?
அதற்கான காரணம் , வெள்ளை சர்க்கரையால் ஆபத்தா? நாட்டுச் சர்க்கரையில் என்ன நன்மை? எந்த வகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?
என சர்க்கரை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், உணவியல் நிபுணர் மற்றும் ஆரோக்கிய ஊட்டசத்து நிபுணர் ஸ்ரீமதி வெங்கட்ராமன் பதிலளித்திருக்கிறார்.
100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றனவாம். அதேநேரம் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்பட்டு உபயோகத்துக்கு வரும் வெள்ளைச் சர்க்கரையில், அந்த ப்ளீச்சின் எச்சங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
அத்துடன் வெள்ளைச் சர்க்கரையில் சல்ஃபரின் அளவு அதிகம் என்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல .வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டை தவிர்ப்பதே நல்லது.
மாற்றாக நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துவது ஆரோக்கியமானது. நாட்டுச் சர்க்கரைக்கு மணமும் சுவையும் இருக்கும். வெள்ளைச் சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் அதிகம்.
வெள்ளைச் சர்க்கரையா? நாட்டுச் சர்க்கரையா? கருப்பட்டியா? எனக் கேட்டால், மூன்றில் கருப்பட்டிதான் சிறந்தது. பனையிலிருந்து எடுக்கப்படுவது தான் கருப்பட்டி.
கருப்பட்டியில் கால்சியம் சத்து மிக அதிகம், அதாவது 363 மில்லிகிராம் அளவு கால்சியம் இருக்கிறது, இதில் பாஸ்பரஸ் சத்தும் அதிகம். இந்த மூன்றிலுமே கலோரியின் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். ஆனாலும் கருப்பட்டியில் மட்டும்தான் சத்துகள் அதிகம். இதனால் தான் மற்ற இரண்டையும் விட கருப்பட்டி சிறந்தது எனச் சொல்கிறோம்.
வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தும் அனைத்து உணவுகளிலும், கருப்பட்டி சேர்த்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. அது முடியாத பட்சத்தில் நாட்டுச் சர்க்கரையாவது கொடுக்க வேண்டும், அதனால் வெள்ளைச் சர்க்கரையைத் சிறிது தவிர்க்கலாம். எதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் வயது, உடல்நலம் ஆகியவற்றைப் பொறுத்தது.
நாட்டு சர்கரையின் நன்மைகள்:
*கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானம் அடையச் செய்யும், இதுவே மலச்சிக்கலை தடுக்கவும் உதவும்.
* நாட்டு சர்க்கரை இதய நோய்களில் இருந்து காக்கும்.
*மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
*புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
*இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
*நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
*இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.