Homeசெய்திகள்கட்டுரை3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமூடி அணிந்து வலம் ...

3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமூடி அணிந்து வலம் வரும் தனுஷ்..! – பகீர் கிளப்பும் நயன்தாரா..!!

-

3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமுடி அணிந்து வலம் வரும் தனுஷ்..! - பகீர் கிளப்பும் நயன்தாரா..!!
தனது இழிவான செயல்களை மறைக்கும் வகையில் போலியான முகமூடியை அணிந்துகொண்டு நடிகர் தனுஷ் வலம் வருவதாக நடிகை நயன்தாரா கடுமையாக சாடியுள்ளார்.  

நடிகை நயன்தாரா திரைத்துறையில் பல சவால்களை எதிர்கொண்டு இன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதேநேரம் அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நடிகை என்றாலும், ஒரு காலத்தில் அவரது படத்தை திரையிடவே கூடாது என போராட்டங்கள் நடந்த வரலாறுகளும் உண்டு. திரையுலகில் இன்னசென்ட் கேர்ளாக அடியெடுத்து வைத்த அவர், பெரும்பாலும் ஆரம்பக்காலங்களில் சினிமா என்னும் மாய வலைக்குள் சிக்கி தடுமாறி, தடம் மாறிப்போன நடிகைகளில் ஒருவராகவே இருந்தார்.

பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களுக்கு ஆளான அவர், முன்னணி நடன இயக்குநருடனான காதலின் போது நீதிமன்றத்தின் படியேறும் அளவுக்கு செல்ல நேரிட்டது. பலரது வெறுப்புப் பேச்சுக்களுக்கும் ஆளானார். இதேவேளையில் பப்ளி கேர்ளாக இருந்த நயன் தனது உடலிலும் பல மாற்றங்களை செய்துகொண்டே வந்தார். சட்டென நிதானித்துக்கொண்ட நயன், தனது அடுத்தடுத்த செயல்கள், தோரணை, தேர்ந்தெடுக்கும் படங்கள் மூலம் தனது கடந்த கால தவறுகளை மறக்கச் செய்துவிட்டார்.

3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமுடி அணிந்து வலம் வரும் தனுஷ்..! - பகீர் கிளப்பும் நயன்தாரா..!!

ஒருபக்கம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக்கொண்டே, கதாநாயகிகளை முன்னிறுத்தும் வகையிலான படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார். ஹீரோக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவம், நடிகைகள் பக்கமும் திரும்ப ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்றும் சொல்லலாம். முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடி சேரும் நடிகை என்றும் வெளியான செய்திகளுக்கு மாற்றாக நயன்தாரா-வுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர், நயன்தாராவுடன் இணைந்த முன்னணி இயக்குநர் என மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறார்.

நிதானமான தனது அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் தன்னை இந்திய அளவில் முக்கிய நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிறு வயது முதல் முன்னணி நாயகியாக உயர்ந்தது வரை நயன்தாராவின் வாழ்க்கைப்பயணம் குறித்த ஆவணப்படம் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்னும் தலைப்பில் உருவாகியுள்ளது. இது வருகிற 18ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் புதிய பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது.

3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமுடி அணிந்து வலம் வரும் தனுஷ்..! - பகீர் கிளப்பும் நயன்தாரா..!!

கடந்த 2015 ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் நடித்த போதுதான் விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற அவரது திருமண நிகழ்ச்சிதான் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படத்தின் அடித்தளமும் கூட.

இப்படியிருக்க இந்த ஆவணப்படம் 2 ஆண்டுகளாக வெளியாகமல் இருந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. நயன் – விக்கி இருவருக்குமான காதல் மலர ‘நானும் ரௌடிதான்’ காரணமாக இருந்ததால் அந்தப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை நிச்சயமாக ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் தனுஷ் அனுமதி கொடுக்காமல் அலைக்கழித்ததாக நயன்தாரா தற்போது தெரிவித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் வெளியான ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் 3 வினாடி காட்சிகளுக்கு தனுஷ் ரூ.10 கோடி கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தனுஷை கடுமையாக சாடியிருக்கும் அவர், கீழ்த்தரமான இந்த செயல் மூலம் ஒரு மனிதராக நீங்கள்( தனுஷ்) எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் பெரும் வெற்றியைக் கொடுத்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு தனுஷால் வலம் வர முடியும் ஆனால் இந்தப் படத்துக்கு எதிரான தனுஷின் கொடும் சொற்களை ஒருபோது தன்னால் மறக்கவே முடியாது என்றும், அதனால் ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என்றும் சொல்லியிருக்கிறார்.

அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போலவே, 2016ம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ‘நானும் ரௌடிதான்’படத்திற்கு சிறந்த நடிக்கைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய நயன்தாரா, தனுஷுக்கு இந்தப்படத்தின் என்னுடைய நடிப்பு பிடிக்கவில்லை. அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறினார். அதற்கு ஆமாம் என்பது போல தனுஷ் தலையை அசைத்து ஆமோதித்திருப்பார்.

மேலும், தனுஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை பழிவாங்குவதாக கூறியிருக்கும் நயன்தாரா, “கடந்த காலத்தில் உங்களோடு (தனுஷ்) பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

MUST READ