அதிமுக – விஜய் கட்சி இடையே கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சித்து வருவதாகவும், தேர்தல் வேலைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி லாட்டரி மார்ட்டினின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் பத்திரியாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக – விஜய் கூட்டணியை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வரும் அரசியல் முயற்சிகள் குறித்து பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- அதிமுக என்பது எம்ஜிஆர் உருவாக்கிய ஒரு நல்ல கட்சி. அதிமுக என்ற ஒரு கட்சி உருவாகி இருக்காவிட்டால் இங்குள்ளவர்கள் எல்லாம் பாஜகவிற்கு சென்றிருப்பார்கள். திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்றோர் அந்த மனநிலையில்தான் இருந்தனர். அதிமுக இயல்பில் இன்றும் இருமொழி கொள்கைக்காக போராடுகிறது. மொழிப்போர் தியாகிகள் தினத்திற்கு ஸ்டாலின் முலக்கொத்தளத்திற்கு சென்றார். எடப்பாடி பழனிசாமி, விஜய் எல்லோரும் அறிக்கை வெளியிட்டனர். தமிழகம் ஒரு நான் பிஜேபி மாநிலமாக உள்ளதற்கு அதிமுக மிக முக்கியமான காரணமாகும். எம்ஜிஆர் காங்கிரஸ் வாக்கு வங்கியில்தான் நடந்தார். அவருக்கு திமுக வாக்கு வங்கி குறைவு. அந்த கட்சி இப்போது ஆதவ் அர்ஜுனா என்கிற ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.
அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, பாலவன் ஆகியோரிடம் பேசினேன். ஆதவ் அர்ஜுனா பற்றி நான் பேசியது எப்படி என கேட்டேன். அவர்கள் உங்கள் அடி சிறப்பாக இருந்தது. தலைவர் திருமாவும் பார்த்தார் என்று சொன்னார்கள். ஆதவ் அர்ஜுனா இயங்கிய இடம் என்பது விடுதலை சிறுத்தைகள். அந்த கட்சியில் ஆதவின் செயல்பாடு என்பது தவறானது. அவர் திமுகவை விமர்சித்துவிட்டு விசிகவை அதிமுக முகாமுக்கு தூக்கி செல்வது திட்டம் என்பதை நாம் வெளிப்படுத்தினோம். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி புரிந்துகொண்டது. இப்போது கூட நான் வேங்கை வயலுக்கு சொல்வேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆதவின் அஜெண்டா என்பது லாட்டரி பணத்தை வைத்து விளையாடக்கூடியது. அஜெய் ரெட்டி என்பவர் ஆதவின் நண்பர். இவர் நடிகர் விஜய்க்கும் நண்பர் ஆவார். ஆதவ் – அஜெய் ரெட்டி – விஜய் ஆகியோர் இணைந்துதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றும் வேலையை செய்தனர்.
அதிமுக மறைமுகமாக விஜயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய் 60 இடங்களையும், துணை முதலமைச்சர் பதவியும் கேட்கிறார். எடப்பாடி பழனிசாமி 40 இடங்கள் வழங்க முன்வந்துள்ளார். இது பவுன்சிங் பேட் என்ற இணையதள அமைப்பு மூலம் இந்த செயல் நடைபெறுகிறது. இதில் ஆதவ் அர்ஜுன், மிதுன் போன்றோர் உள்ளனர் என்ற தகவல் வெளியாகிறது. ஆனால் அதன் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்றால் விஜயின் சொன்னால் என்றால் அவரது கேரக்டர் என்ன ஆகும்? என்பது கேள்விக்குறி. ஆனால் அரசியலில் ரிஸ்க் எடுப்பது என்பது பவன் கல்யாண் போல எடுத்த உடனே துணை முதலமைச்சர் ஆகிவிட்டால் எப்படி இருக்கும். இதன் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாம் என விஜய் நினைக்கலாம். ஆனால் விஜய் நான் தான் முதலமைச்சர் என்று சொன்னது பொய் ஆகிவிடும். அதிமுகவுடன் சேர்ந்துகொண்டு ஊழலை பற்றி விஜய் பேச முடியுமா? அப்போது விஜயின் பிம்பம் தகர்ந்திருக்கும்.
தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேராமல் இருந்திருந்தால் இன்று அந்த கட்சி ஆட்சிக்கே வந்திருந்தது. விஜயகாந்தின் பரிணாமம் என்பது 8 சதவீதம், 10 சதவீதம் என்று அதிகரித்து கொண்டே சென்றிருக்கும். விஜயகாந்தின் பலம் என்பது வேறு மாதிரியும் மாறி இருக்கும். விஜயகாந்தின் குணம் என்பது தன்னுடன் கூட இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாரி வழங்குவது. அதனால் குடும்பம் பாதிக்கப்பட்டது. அதனால் குடும்பத்தினர் அரசியலில் தலையிட்டனர். பின்னர் பிரேமலதா, சசிகலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திதான் அதிமுக கூட்டணிக்கு கொண்டு சென்றனர். அப்படி அவர் செல்லாமல் இருந்திருந்தால் இன்று முதலமைச்சர் ஆகி இருப்பார். அவருக்கு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்களுக்காக 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் இருந்த கெட்டப்பழக்கங்கள் ஆகியவை உடல்நலனை பாதித்தது. தற்போது அவரது கட்சி தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது.
விஜய் அரசியலுக்கு வருகிறார். தனித்து நின்று தேர்தலில் பலத்தை நிரூபித்து தனியாக அழகாக விஷங்களை கொண்டு செல்லலாம். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவுடன் சென்றால் ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க வேண்டி வரும். எடப்பாடி தனது கட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் விஜய்தான் ஒரே ஒரு சேவியர். இவர்களது திட்டம்தான் பிரசாந்த் கிஷோரை கொண்டு வருவது. அவர்கள் கொண்டுவந்ததுதான் யார் அந்த சார்?. எக்ஸ்பிரஸ் அவென்யூ போராட்டம் போன்றவை. இப்போது யார் அந்த சார் எங்கே சென்றது. அப்படி ஒரு சாரே கிடையாது. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் சொன்னது ஒரு பொய். அதனை காவல் ஆணையர் அருணின் செய்தியாளர் சந்திப்பு நன்றாக விளக்கியது. எப்படி ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல் ஆணையர் அருணின் வாதம் தான்நின்றது. அதுபோல இந்த விவகாரத்திலும் காவல் ஆணையரின் வாதம் தான் நின்றது. யார் அந்த சார் விவகாரமே தோல்வி அடைந்த நிலையில், இனிவரும் எல்லாம் அப்படிதான் நடக்கும்.
இந்த விஷயத்திற்காக பிரசாந்த் கிஷோருக்கு அதிமுக 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அந்த செலவை லாட்டரி மார்ட்டின் கொடுத்துவிடுவார். அடுத்து அதிமுக – விஜய் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், லாட்டரி மார்ட்டினின் ஆட்சி வந்துவிடும். தமிழ்நாட்டில் லாட்டரிக்கு மீண்டும் அதிமுக அனுமதி வழங்கிவிடும். பவுன்சிங் பேட் அமைப்பு இந்த வேலையை தான் செய்கிறது. ஆனால் மார்ட்டின் இந்த விஷயத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மார்ட்டின் அடிப்படையில் ஒரு திமுககாரர். அவரது மகன் சார்லஸ் புதுவையில் எம்.பி.ஆக முயற்சித்து வருகிறார். மே 17 இயக்கத்திலும் அவரது உறவினர்கள் உள்ளனர். எவ்வாறு ஆயினும் ஆதவ் அர்ஜுனாவின் இந்த திட்டத்திற்கு லாட்டரி மார்ட்டினின் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.