Homeசெய்திகள்கட்டுரைசென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது

சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது

-

- Advertisement -
kadalkanni

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததாக முன்னுதாரணம் இருப்பதாக தெரியவில்லை. இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம். இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விகளை ஊடகங்கள் எழுப்புகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை விக்னேஷின் தாயார் பிரேமாவிற்கு டாக்டர் பாலாஜி தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார். நோயாளி பிரேமாவிற்கு எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது? தனது தாயார் எப்படி இருக்கிறார் போன்ற சந்தேகங்கள் குறித்து கேட்டதற்கு டாக்டர் பாலாஜி முறையாக பதில் சொல்வதில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த தனது தாயாரை வெளியே அழைத்து சென்று தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஏற்பட்ட முரண்பாடு, வெறுப்பு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூகத்தில் படித்தவர்கள் முதல் பாமரன் வரை எல்லோரிடமும் ஒழுக்கம் குறைந்து வருகிறது. அவர்கள் படித்த படிப்பிற்கும் வாழும் நடைமுறை வாழ்க்கைக்கும் துளியும் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சவரத் தொழிலாளிக்கு தன் தொழிலை தாண்டி அவருக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. அதேபோன்று தான் மருத்துவரும். மருத்துவ தொழிலை கடந்து வேறு எதுவும் அவருக்கு தெரியாது. செருப்பு தைப்பவர், துணி துவைப்பவர், தட்சர் என்று அனைத்து தொழிலாளர்களும் அவரவர் தொழிலில் அவரவர் தலை சிறந்தவர்கள் தான்.

ஆனால் ஒரு சவரத் தொழிலாளி தனது தொழில் மீது வைத்திருக்கும் நேர்மை கூட மருத்துவம் படித்த மருத்துவர்களிடம் இல்லை என்பதுதான் இந்த சமூகத்தில் உள்ள சாபக்கேடு. சவரத் தொழிலாளி கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பேரம் பேசியதாக ஆதாரம் கிடையாது. ஆனால் மருத்துவர்களின் செயல்பாடுகளை உலகமே அறிந்து வைத்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்து வருகிறார். அந்த ஆய்வின் போது பல மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பதை கண்டறிந்தனர். இதுதான் படித்த மருத்துவர்களின் நிலைமை.

நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப சாதாரண மக்களின் வரிப்பணத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகளை கட்டமைத்து மருத்துவர்களை அரசு உருவாக்கி வருகிறது. அரசு சலுகைகளிலும், அப்பாவி மக்களின் வரிப்பணத்திலும் படித்து வரும் மருத்துவர்கள், பொறுப்புணர்வு இல்லாமல் படித்து முடித்ததும் டாக்டர் என்ற மிதப்பில் பணத்திற்காக
வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனையில் பணிக்கு சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ சொந்தமாக முதலீடு செய்து மருத்துவமனையை கட்டமைத்து பணம் மட்டுமே முக்கியம் மனநிலையில் செயல்படுகிறார்கள். மருத்துவம் என்பது சேவை என்கிற மனப்பக்குவம் ஒருவருக்கும் இல்லை.

அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். பின்னர் அரசு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பிற்கு மாத ஊதியத்துடன் மூன்று வருடம் முதுநிலை பட்டம் பெறுகின்றனர். அந்த படிப்பை முடித்தவர்கள் மீண்டும் அரசு பணிக்கு வருவதில்லை. இவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? எங்கே பணி செய்கிறார்கள் என்கிற விசாரணையிலும் அரசு ஈடுபடுவதில்லை. இந்த எதார்த்த நிலையில் தான் மருத்துவர்களின் ஒழுங்கு, தரம், நாணயம் இருக்கிறது.

மருத்துவ துறையில் மட்டுமே இதுபோன்ற குறைபாடுகள் இருக்கிறது. மற்றத் துறைகள் சிறப்பாக உள்ளது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அனைத்து துறைகளும் இப்படித்தான் இருக்கிறது.

உலகம் முழுவதும் மனித சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருகிறது. மனிதன் படித்த படிப்போ, அவனுடைய அனுபவமோ கைக் கொடுக்கவில்லை.

ஆதிகாலத்து மனிதனிடம் இருந்த வெறுப்பு, பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை இப்போதும் இருக்கிறது. தற்போது கல்வி வளர்ந்திருக்கிறது, விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறு. ஆனால் அறிவு வளரவில்லை, பகுத்தறிவு துளியும் இல்லை. அதனால் மனிதனை நேசிக்க, அவன் மீது அன்பு செலுத்த தெரியவில்லை. அதிகமாக படித்ததாக கூறும் மனிதன், நவீன நாகரீகத்தில் வாழும் மனித சமூகம் , ஆரோக்கியமான வாழ்க்கை வாழத் தெரியாமல் கோமாவில் இருக்கிறது.

MUST READ