Homeசெய்திகள்கட்டுரைடெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!

டெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணி அமைவது என்பது அண்ணாமலைக்கு பின்னடைவு தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை இன்னும் தமிழ்நாடு திரும்பாததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. நான் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது. எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடங்கும். தலைவர்கள் அந்தரங்கமாக இத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்துவிடுவார்கள். அதற்கு பிறகு கூட்டணி அறிவிப்பு என்பது மேம்போக்கானதுதான். ஜெயலலிதா காலத்தில் உடனிருந்தே பார்த்துள்ளேன். தொகுதி பங்கீடு முடிந்திருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இப்போதே ஏன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தொகுதி பங்கீடு இல்லாமல் கூட்டணியே உறுதியாகாது. ஆனால் இதுபோன்ற ஒரு பேச்சு வருவதை எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அதில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. இரட்டை இலை தொடர்பான வழக்கில் பாதுகாப்பும் கிடைக்கிறது. கடைசி நேரத்தில் பாஜக கேட்கும் தொகுதிகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளன.

அண்ணாமலைக்கு இந்த விவகாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சியில் தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும். அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக பாஜகவை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற டோனை செட் செய்து விட்டார். மும்மொழி கொள்கை விவகாரம், டாஸ்மாக் முறைகேடு போன்ற விவகாரத்தில் மேட்டுக்குடி மக்களின் வாக்குகளை அவர் குறி வைத்துள்ளார். இந்து நாளிதழில் மொழிக் கொள்கை தொடர்பாக சிறப்பான கட்டுரை ஒன்றை அசோக்வர்தன் ஷெட்டி எழுதியுள்ளார். அதில் அறிவியல், கணிதம் பாடங்கள் தான் முக்கியமானது. அவற்றை கடந்து ஆங்கிலம் மட்டும்தான் முக்கியமானது என்று சொல்கிறார். மற்றபடி மொழி திறமை தேவை இல்லை, அவை குழந்தைகளுக்கு சுமைதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதில் மாநில வாரியாக வெற்றி, தோல்வி புள்ளி விவரங்களை குறிப்பிட்டு விளக்கியுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.  ஆனாலும் பாஜக இதில் உறுதியாக உள்ளது ஏன் என்றால் வடமாநில வாக்கு வங்கியாகும். பாஜக இந்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வடமாநிலத்தில் ஓட்டு வாங்க முடியாது.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

மாநில கட்சிகள் என்று வருகிறபோது அது தமிழ்நாடு மாநிலம், மாநிலம் உரிமைகள் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசிவிடும். தேசிய கட்சி என்று வருகிறபோது அவர்களால் பேச முடியாது. காங்கிரஸ் கட்சியே தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கை விவகாரத்தில் தேசிய அளவில் இதுவரை என்ன சொல்லியுள்ளது?. எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் காங்கிரசை தான் எதிர்த்தோம். இன்றைக்கு அதே இடத்தில் பாஜக உள்ளது. அவர்கள் வடநாட்டு வாக்கு வங்கியை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு லாபமாகும். தமிழ்நாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக அண்ணாமலை சொல்கிறார். உண்மையில் அவர் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. பாஜகவைதான் பிரதிநிதித்துவம் செய்கிறார். அந்த கட்சியின் கொள்கைக்கு எதிராக அவர் எப்படி பேச முடியும். அப்படி எப்படி தமிழ்நாட்டின் நலனுக்காக அவர் பேச முடியும்.

நாளை தவேகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

விஜய் அந்த இடத்தில்தான் எப்படி ஸ்கோர் செய்ய விரும்புகிறார் என்றால்?  திமுக தமிழ்நாட்டின் நலனுக்காக போராடுகிறது. அவர்களுக்கு அடுத்த இடத்தில் நாங்கள் தான் இருக்கிறோம் என்கிறார். ஆனால் இதுவரை அவர் எந்த போராட்டங்களையும் நடத்தவில்லை. நடத்தப் போகிறோம் பாருங்கள் என்று அடுத்த 10 மாதங்களை ஓட்டுவார். விஜய் கட்சி பிரம்மாண்டமான அளவுக்கு வளர்ந்துவிட்டது என்று நாம் நம்ப வேண்டும் என்றால் அது களத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்போது சிஓட்டர் யாரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள் என்கிற கேள்வி வரும். 100 பேரிடம் சர்வே எடுக்கிறோம் என்றால், அவர்களுக்கு திமுக – அதிமுக குறித்து தெரிந்திருப்பார்கள். அவர்களுக்கு விஜய் குறித்து அறிந்திருப்பார்கள். ஆனால் அவரது கட்சி குறித்தும், அவர்களால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்று தெரியாது. அதனால் இதுபோன்ற நேரத்தில் கருத்துக்கணிப்பு எடுத்தால் இப்படிபட்ட நிலைமைதான் வரும். தேர்தலுக்கு முன்பாக எடுத்தால் முழுவதும் மாறிவிடும்.  தற்போதைக்கு இந்த சர்வே பாப்புலாரிட்டி சர்வே என்று சொல்லப்பட்டாலும், பல நேரங்களில் பாப்புலாரிட்டி சர்வே ஆக அமைவது இல்லை. ராகுல்காந்தியே பல கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் இருந்தாலும் வெற்றி  பெற மாட்டார்கள்.

அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும் அதற்கு அண்ணாமலை முட்டுக்கட்டையாக தான் இருப்பார். கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அவர் கொங்கு மண்டலத்தில் தான் சீட்டுகளை கேட்பார். இதேபோல், பாமகவும் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் கேட்பார்கள். பாஜக நாளை 10 எம்எல்ஏக்கள் வருகிறார்கள் என்றால் அவர்களில் பலர் கொங்கு மண்டலத்தில் இருந்து வருவார்கள். தமிழ்நாட்டில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது தமிழ்நாடு அரசியலுக்கும், பாஜக முன்வைக்கிற அரசியலுக்கும் இடையே பெரிய முரண் உள்ளது. அதிமுகவிலேயே பாஜக கூட்டணி வேண்டும், வேண்டாம் என்று சிட்டிங் எம்எல்ஏக்களிடையே முரண்பாடு இருக்கிறது. இதேபோல், பாஜகவிற்கு உள்ளேயும் கருத்துமோதல் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு வேலை பார்க்கவா நாம் இருக்கிறோம் என்று கேள்வி வரும். கொள்கை இல்லாமல் தான் ஒரு கூட்டணி அமைகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது சரிதான். ஆனால் ஏரியா ஆப் இன்டெரஸ்ட் ஒன்றாக இருக்கக்கூடாது. ஒரு பார்ட்னர் மேஜர் பார்ட்னராக இருக்க வேண்டும். மற்றவர்கள் மைனர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதுதான் கூட்டணி. மேஜர் பார்ட்னர் ஆக வேண்டும் என்று நினைக்கிற ஒரு மைனர் பார்ட்டியை நாம் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது. இவ்வளவு முரண்களுடன் செல்லும் அந்த கூட்டணி என்ன பெரிய அரசியல் லாபத்தை அடைந்தவிட போகிறது என்பது சந்தேகம்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ