Homeசெய்திகள்கட்டுரைபாஜகவ தூக்கி சுமங்க எடப்பாடி! புத்தி இருக்கவன் யாராவது செய்வானா?

பாஜகவ தூக்கி சுமங்க எடப்பாடி! புத்தி இருக்கவன் யாராவது செய்வானா?

-

- Advertisement -

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்க வேண்டும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அதிமுக – பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் இவ்வளவு கேள்விகள், தடுமாற்றம், தாமதங்கள் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி போய்விட்டு வந்தார். அவர் தமிழ்நாட்டின் நலன்களுக்காக சென்றதாக சொன்னதை யாரும் நம்பவில்லை. ஏறக்குறை அது முடிந்துவிட்டது என்பதை அமித்ஷாவின் டிவிட்டர் பதிவு வெளிப்படுத்தியது. பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அமித்ஷா அதிமுக உடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக தெரிவித்தார். அப்போது அதை மறுப்பபதற்கு கூட இங்கு யாருக்கும் தைரிம் இல்லை. கிட்டத்தட்ட ஆளுமை பண்பை குறைத்துக்கொண்டே தான் வந்தார். இதை எல்லாம் தாண்டி தான் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் ஆகும். என்ன நடைபெற்றிருக்க வேண்டும் என்றால்? தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று சொல்கிறார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பாஜக ஏதோ பரிசை தூக்கி கொடுத்துவிடவில்லை. அதுதான் இயல்பு. பலவீனப்பட்டு இருந்தாலும் இன்றைக்கு அதிமுக பெரிய கட்சிதான். அந்த கட்சியின் தலைவர் தான் தலைவர்தான், கூட்டணிக்கு தலைமை வகிக்க வேண்டும்.

அமித்ஷா நேற்று மதியம் குருமூர்த்தி வீட்டிற்கு செல்கிறார். மீண்டும் ஹோட்டலுக்கு தான் சென்றார்.ஏதேதோ நடைபெறுகிறது. அதற்கு பிறகு கூட்டணி அறிவிப்பை அதே ஓட்டலில் மாலை அறிவிக்கிறார்கள். அதன் பிறகு எடப்பாடி வீட்டிற்கு வருகிறார்கள். அப்படி அவர் எடப்பாடி வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி, அல்லது நடத்தியதாக காண்பித்து அன்று மாலையில் கூட்டணி அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதிமுகவுக்கு மரியாதையும், இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார்கள் என்கிற வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் அதிமுக உடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்கிற கேள்விக்கு பதில் உள்ளதா? ஏனென்றால் டெல்லியில் பேச்சுவவார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி சொல்லிவிட்டார். அப்படியே நடத்தி இருந்தாலும் இன்னும் பாதி விஷயங்கள் முடிவாக வில்லை என்றால், அந்த முடிவாகாத மீதி விஷயங்களை எப்போது நடத்தினீர்கள்? இவை எல்லாம் தான் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது என்பதை தான் காட்டும். நேற்று நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளும் எடப்பாடி பழனிசாமியை, அமித்ஷா கிட்டத்தட்ட தனது கைகளில் எடுத்துவிட்டார் என்பதை தான் காட்டியது. அதில் நிஜமும் உள்ளது.

அவ்வளவு தூரம் அவர் பேசுகிறார். ஆமா என 2 வார்த்தைகள் எடப்பாடி பேசி இருக்க வேண்டும். எடப்பாடி ஏன் பத்திரிகையாளர் சந்திபபில பேசவில்லை. அதற்கு பிறகு ட்விட் போட்டுள்ளார். என்டிஏ கூட்டணில் சேர்ந்ததை பெருமையாக கருதுவதாக எடப்பாடி டிட்விட்டில் தெரிவித்துள்ளார். அப்போது பெருமையாக கருதும் ஒரு விஷயத்திற்கு எதற்காக மென்க்கெட்டீர்கள்? பிரஸ் மீட் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்கிறபோது, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு தாமதம் என்று அமித்ஷா சொல்கிறார். அதாவது, அதிமுகவை எப்படியாவது கூட்டணிக்கு வர வைக்க வேண்டும். என்டிஏவுக்கு வேறு வலு கிடைக்கவே கிடைக்காது. பெருமைப்படுகிற விஷயத்திற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்? இதெல்லாம் நடந்து முடிந்தாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது.

eps

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி என்று யார் அறிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அமித்ஷா அறிவித்துள்ளளார். அதனால்தான்  ஆளுமையை குறைத்துக் கொண்டுள்ளார். இதுபோன்ற  விஷயங்கள் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களின் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எடப்பாடி ஒரு ஆளுமை மிக்க நபர் என்கிற வார்த்தை எப்போது வரும் என்றால்? அவர் நடந்துகொள்ளும் விதத்தை வைத்துதான். அதிமுக தலைமையில் தான் இங்கு பாஜக இயங்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எடப்பாடி, அண்ணாமலையை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கச் செய்துள்ளார். ஓபிஎஸ்- இன் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார். எடப்பாடி அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லி இருந்தால் அதிமுக  தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அதே அண்ணாமலையை கூப்பிட்டு வந்து விருந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையே தோல்வி அடைந்த வார்த்தையாகும். தேர்தலுக்கு முன்பாக சொன்ன எந்த கூட்டணியும் வெற்றி பெற்றது கிடையாது. 1980களில் திமுக – காங்கிரஸ் சரிபாதி இடங்களில் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் எம்ஜிஆர்தான் வெற்றி பெற்றார். அதன் பிறகு யாரும் அந்த சோதனையை செய்யவே இல்லை. மக்கள் நலக்கூட்டணி காமெடியாகிவிட்டது. அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள  எடப்பாடி, இன்னொருவர் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இது சாணக்கியத்தனமா?

பற்ற வைத்த பாஜக… அடித்து நொறுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பின்னணியை உடைக்கும் அருள்மொழி பாஜக, முதல்வர் மு.க.ஸ்டாலின், அருள்மொழி, மக்களவை கட்டிடம், திமுக புதிதாக கட்டப்பட்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடத்தில் கூடுதல் இருக்கைகளை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தான் தற்போது முதல் தாக்குதலை எடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்'' என-திராவிடர் கழக பிரச்சார குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார். அம்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ''1967ல் டெல்லி தமிழ்நாட்டிற்கு போட்ட பூட்டை இன்று வரைக்கும் உடைக்க முடியாமல், செருப்பில்லாமல் சாட்டையை அடித்துகொண்டு திரிகிறார் அண்ணமாலை. நீ சாட்டையை அடித்துக் கொண்டே திரிய வேண்டியதும், நடந்து கொண்டே இருக்க வேண்டியதும் தான். அடுத்த 2026 தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்றும் கூறிக்கொண்டு உள்ளார். 25 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 1950ல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தது அதற்கு பிறகு 1975 இல் அப்பொழுது இந்திரா காந்தி அம்மையார் அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு, 1976 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எம்.பி-களை மாற்ற வேண்டுமா, குறைக்க வேண்டுமா? கூட்ட வேண்டுமா? என்ற கேள்வி வரும்பொழுது வீண் பிரச்சனை வரும் என மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளிப் போட்டனர். மீண்டும் 25 ஆண்டு முடிந்து 2002-ல் அப்போது பாஜகவினர் ஆட்சியில் இருந்தார்கள். 2002-ல் வந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி குறைப்பது கூட்டுவது மீண்டும் பிரச்சினை எழுந்தது. அதனால், மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளி வைத்து 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் இந்த தொகுதிகள் மறுபடியும் கணக்கிடப்படும் என்று மீண்டும் அரசியல் சட்ட திருத்தம் வந்தது. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. அதில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்து ஒரு சட்டத்தை நிறைவேற்றம் செய்தார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து 2026 ல் இந்த தொகுதியெல்லாம் மறு கணக்கீடு செய்யும்போது பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் எப்படி 2026-ல் நடைமுறைக்கு வரும். முதலில் இருந்த பாராளுமன்றம் பிரிட்டிஷ் கட்டிடம் மிகவும் அழகாக இருந்தது. இவர்கள் சத்திரம் ஒன்று கட்டி வைத்துள்ளார்கள். அதை பார்த்தாலே இந்த ஊர்களில் தர்மசத்திரம் போல பெறியதாக இருக்கும். இதற்கு பரதேசி மடம் என்று பெயர். உண்மையில் அங்கு பரதேசிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம் ஆகும். அவர்களுக்கு மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை எம்பி யாக கொண்டு வர முடியாது. கும்பமேளா சாமியார்களை போன்றவர்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமர்த்த வேண்டும் என பாஜகவின் நோக்கம் அதற்கேற்றார் போல் புதிய கட்டிடத்தை கட்டிவைத்துள்ளார்கள். மக்களவைக்கு 550 இருக்கை தேவை. ஆனால் அவர்கள் கட்டி வைத்திருப்பது 888 இருக்கைகள். மாநிலங்களவைக்கு 254 இருக்கை உள்ள இடத்தில் 380 இருக்கை போடப்பட்டுள்ளது. மாநிலங்களவைக்கு இது எல்லாம் செய்து வைத்துவிட்டு தான் அறிவிக்காமல் முதல் தாக்குதலை எடுத்து விட்டார் தமிழ்நாட்டில் முதலமைச்சர். தமிழ்நாடு அரசு இந்திய மக்கள் தொகை கட்டுப்படுத்தலை ஒழுங்காக பின்பற்றி நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்கிற அளவுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை குறைந்து உள்ளோம், இதனால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய மதிய பிஜேபி ஆட்சி 1976 லே அமண்ட்மெண்ட் வந்தபொழுது 2002 ல் சட்ட திருத்தம் வந்தபோது நீங்களே ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்து இப்போது உள்ள தொகுதி மாறாது என்றும் மக்களவையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாங்கள் கொண்டு வர வைக்கிறோம் என தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர்கள் சொல்வார்களா. கொண்டு வர வைப்போம் என கூறுவார்களா?. திராவிட முன்னேற்றக் கழக தோழர் போய் ஹிந்தியை தார் போட்டு அழித்து வந்தால் இவர்கள் பின்னாடியே மண்ணெண்ணெய் கொண்டு அதை இந்தி வார்த்தை மேல் பூசப்பட்ட தாரை அழித்து வந்தார்கள். அவ்வளவு பெரிய தேச பக்தர்கள் அந்த வேலையைத்தான் இன்றும் பாஜக செய்து கொண்டிருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியை இப்போது அறிவிக்க வேண்டிதன் அவசியம் என்ன? அது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியும். இன்னும் ஒரு வருடத்திற்கு அதிமுக எப்படி அரசியல் செய்யும். என்ன அரசியல் செய்யும். பாஜக செய்யும் அத்தனை தவறுகளுக்கும் இவர்கள் முதுகில் சுமக்க வேண்டும். விளக்கம் சொல்ல வேண்டும். புத்தி உள்ள எந்த அரசியல் கட்சியும் ஒரு வருடத்திற்கு முன்னதாக கூட்டணியை அறிவிக்க மாட்டார்கள். அமித்ஷாவுக்கு ஆயிரம் நிர்பந்தங்கள் இருக்கலாம். என்டிஏவில் ஒரு பெரிய கட்சி சேர்ந்துள்ளது  என்று மத்தியில் அவர்களுக்கு பயன்படுமே தவிர, அதிமுகவுக்கு இதனால் ஒரு துளி பலன் கிடையாது. வக்பு மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டீர்கள். இன்று அதை கொண்டு வந்தவர்களுடனே கூட்டணி வைத்துள்ளீர்களே.

குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற ஒன்றை கொண்டுவருவோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அசாதாரண சூழலில் இந்த கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்பந்தம் வருகிறது. சரி பொதுவான செயல் திட்டம் கொண்டுவரப் போகிறீர்கள் அதில் 4 பாய்ண்ட்டுகளையாவது வாசித்து காட்டினீர்களா?  நீட் தேர்வு விவகாரத்தில் மற பரிசீலனை செய்வோம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை மத்திய அரசு பரிசீலிக்கும் அமித்ஷா வாயில் இருந்து இந்த உறுதியை வாங்கி விட்டேன் என்றால் அது தான் சாணக்கியத்தனம். ஆனால் நான் டிடிவி, ஓபிஎஸ்-ஐ ஒதுக்கிவிட்டேன் என்பதுதான சாணக்கியத்தனமா? நடைபெற உள்ளது சட்டமன்ற தேர்தல். அவர் என்டிஏவில் உள்ளார் என்பதை அமித்ஷா சொல்லவில்லை. ஆனால் அதனை அவர் சொல்லி இருக்க வேண்டும். இதை நீங்கள் எடப்பாடியின் ராஜதந்திரம் என்று நினைத்தீர்கள் என்றால் அதை நடக்கப் போகிற தேர்தல் முடிவுகள் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று காட்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ