Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடி விஜய் அவுட்! திமுக அணிக்கு ஜாக்பாட்! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

எடப்பாடி விஜய் அவுட்! திமுக அணிக்கு ஜாக்பாட்! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

-

- Advertisement -

அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சாதிக்க முடியாதவற்றை, மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சண்டையிட்டு சாதித்து காட்டி உள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அமித் ஷாவும், எடப்பாடியும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அவர் அமித்ஷா பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். சேர்ந்து எல்லாம் சந்திக்கவில்லை. சந்திப்பு என்றால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர்களிடம் ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும். அப்படி எந்த கருத்தையும் எடப்பாடி சொல்லவில்லை. பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால் எடப்பாடி தலைமையில் கூட்டணி. அவர் தலைமையில் தான் ஆட்சி அமைய உள்ளது. ஆனால் அந்த கூட்டணி தலைவர் அது பற்றி எதுவும் பேச மாட்டாராம். எந்த அளவுக்கு அமித்ஷாவின் இரும்பு பிடியில் சிக்கி அண்ணா திமுக, அமித்ஷா திமுகவாக மாறி இருக்கிறது என்பதற்கு நேறறைய செய்தியாளர் சந்திப்பே சாட்சி ஆகும்.

இவ்வளவு மோசமான கூட்டணி அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நாங்கள் பார்த்ததே கிடையாது. மிக மகிழ்ச்சியாக நாங்கள் கூட்டணி அமைத்துவிட்டோம் என்று சொல்வார்கள். இனிப்பு வழங்குவார்கள். கூட்டாக அறிவிப்பை வெளியிடுவார்கள். ஆனால் கூட்டணி அறிவிப்பை அமித்ஷா தான் வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி மிகவும் இருக்கமாக உட்கார்ந்திருக்கிறார். அவரது உடல் மொழியை பார்த்தால் முழுக்க முழுக்க கட்டாயப்படுத்தி கையை முறுக்கி உட்கார வைத்திருக்கிறார்கள். பல நெருக்கடிகள் அவர்களுக்கு உள்ளது. இல்லாவிட்டால் சின்னத்தை முடக்குவார்கள். ஒபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை கையில் எடுத்துக்கொண்டு இன்னும் நெருக்கடி தருவார்கள். ஏற்கனவே 35 – 40 சதவீதம் ஆக இருந்த அதிமுக 18 சதவீதம் ஆக குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் ஒரு புயல் வீசினால் இன்னும் வாக்கு சதவீதம் குறையும். அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழக்கும். இதனால் வேறு வழியில்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு போய் உட்கார்ந்துள்ளார். அண்ணாமலை விவகாரத்தில், அதிமுக எந்த நெருக்கடியும் தரவில்லை என்று அமித்ஷா சொல்கிறார். அண்ணாமலையும் சில வார்த்தைகள் பேசுகிறார். ஆனால் எடப்பாடி ஒன்றும் பேசவில்லை.

eps

எடப்பாடி வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து சாப்பிடுவது பெரிய விஷயமல்ல. அவர் ஒரு பெரிய கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர். அவரின் கீழ் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் அமித்ஷா எடப்பாடியின் வீட்டிற்கு செல்வது என்பது இயல்பானது. ஆனால் அரசில், ஆட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத குருமூர்த்தியின் வீட்டிற்கு செல்கிறார். ஏன் அங்கு செல்கிறார். குருமூர்த்திக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அப்போது அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் இன் செயல்திட்டம் அது. தேவை என்றால் எங்கே வேண்டுமானாலும் போவார்கள். எடப்பாடி வீட்டிற்கு போக வேண்டிய தேவை அமித்ஷாவுக்கு இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜக நினைத்தது நடக்க வேண்டும்.

அமித்ஷா வந்தால் அவ்வளவுதான். அவர் கையில் எடுத்தால் அப்படி ஆகிவிடும். இப்படி ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் எப்படியும் ஆகவில்லை. ஆர்.என்.ரவி, அண்ணாமலை என்று 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இறக்கினார்கள். மிஷன் அமித்ஷா, மிஷன் தமிழ்நாடு என்று சொன்னார்கள். கடைசியில் 2 ஐபிஎஸ்களின் நிலை என்ன ஆனது என்று நாம் பார்க்கிறோம். அமித்ஷா வந்தால் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விடுவார் என்று சொன்னார்கள். நேற்று அவர் சொன்னது முழுக்க பொய்கள். திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அவரால் நிருபிக்க முடிந்ததா? அண்ணாமலை ஃபைல்கள் எல்லாம் போட்டார் அல்லவா? இதில் அதிமுக ஃபைல் வேறு வரும் என்று சொன்னார். அப்படிபட்ட விஷயங்களை செய்த பாஜக அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவுடைய மிரட்டலுக்கு பணிய வேண்டிய இடத்தில் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது இயல்பான கூட்டணியா?  தமிழ்நாடு சார்ந்த நலன் எதாவது இருக்கிறதா?

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

இந்தி திணிப்பு, நீட் விலக்கு போன்ற தமிழ்நாடு சார்ந்த பிரச்சினைகளில் காங்கிரஸ் உடன்பட்டு வருகிறார்கள். இதுபோன்று ஒரு விஷயத்தில் பாஜகவை அதிமுக உடன்பட வைக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. பாஜகவின் கொள்கைக்கு அதிமுக விட்டுக்கொடுத்து சென்றனர். மத்திய அரசுடன் பாஜக இணக்கமாக இருந்ததால்தான் ஜிஎஸ்டி வந்தது. உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்றவை இணக்கமாக இருந்ததால் தான் வந்தது. இந்த ஆட்சி தேவைக்காக சண்டை போடுகிறது. மக்களுடைய பிரச்சினைகளுக்காக சண்டை போடுகிறார்கள். கல்வி நிதி தரமாட்டேன் என்கிறார்கள். இணைக்கமாக போகலாம் என்று புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் 2 ஆயிரம் கோடி அல்ல 20 ஆயிரம் கோடி நிதி கூட தருவார்கள். இணக்கமாக போவது வளர்ச்சி, பணம் என்று போனால் நாம் உருவாக்கி வைத்திருக்கிற அடிப்படை கட்டுமானம் தகர்ந்துபோகும். நம்முடைய கொள்கை, கோட்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படும். அப்படி போனாலும் பரவாயில்லை பணம் தருகிறார்கள் மத்திய அரசோடு இணக்கமாக போவோம் என்று  போனது தான் அதிமுக. அப்படி இணக்கமாக இருந்தும் நிதி வழங்கவில்லை. அவர்களால் கூட்டணியில் இருந்து சாதிக்க முடியவில்லை.  இன்றைக்கு எதிர்த்து போரிட்டு முதலமைச்சர் சாதித்து கொண்டிருக்கிறார். ஆளுநர் கையெழுத்து இல்லாமல் இன்று 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி காட்டிவிட்டார்.

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

முழுக்க பாஜக கொண்டு வந்த சட்டத்தை எல்லாம் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் அவற்றை இறக்கிவிட்டவர்தான் எடப்பாடி. இன்றைக்கு சொந்த கட்சியை காப்பாற்ற முடியாமல் போய் நிற்கிறார். இது அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய அழிவு.  பாஜகவுக்கு 18 சதவீத வாக்குகள், அதிமுகவுக்கு 18 சதவீத வாக்குகள். சேர்த்தால் 36 சதவீதம் . கூட்டணி சேர்ந்தால் 40 சதவீதம். திமுகவும் 40 சதவீதம் வைத்திருப்பதால் இருசமம் என்று ஒரு கணக்கு போடுகிறார்கள். பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற கட்சிகளின் தலைவர்களை பாஜக சின்னத்தில் போட்டியிட வைத்ததனர். இதனால் கடசியின் வாக்கு சதவீதம் 18 சதவீதமாக உயர்ந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே 18 சதவீதம் பெற்றிருந்தது. இதனால் தற்போது பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இதனால்தான் அண்ணாமலையின் பதவியை பறித்தார்கள். பாஜக அண்ணாமலையோ, நயினாரையோ கொண்டுவந்தால் தனிநபர்களை விட பாஜகவின் கொள்கை தான் முக்கியமாகும். அவர்களுடன் அதிமுக சேர்ந்து என்ன புரட்சி செய்ய போகிறது. இது எங்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இதில் புதிதாக வந்தவர் விஜய். அவர் இன்றைக்கு நீட் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவை விமர்சித்திருக்கிறாரே தவிர, நீட் விலக்கு தர மறுக்கிற பாஜக குறித்து விமர்சிக்கவில்லை. நீட் விலக்கு வராததற்கு யார் காரணம்? திமுக  சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை  செய்து கொண்டிருக்கிற அரசு. அதே வேளையில் இந்த மாநிலத்தின் குரலுக்கு செவி சாய்க்க மறுக்கிற மத்திய அரசை நோக்கிதானே குரல் எழுப்ப வேண்டும். ஆனால் திமுகவை நோக்கி கேள்வி கேட்கிறார். இவ்வளவு நாளாக அவர் அதிமுகவை எந்த கேள்வியும் கேட்கவில்லை. இன்றைக்கு அதிமுக, பாஜக உடன் கூட்டணியில் சேர்ந்துவிட்டது. இப்போது அவர் அந்தரத்தில் நிற்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது பாஜக அணிக்கு எதிராக தான் தமிழ்நாட்டு மக்கள் ஓரிடத்தில் அணி திரள்வார்கள். விஜய்க்கு வாக்களித்தால், பாஜக கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். பாஜக கூட்டணியை வீழ்த்தும் வலிமை உள்ள திமுக அணிதான் என்பதால் அவர்களது வாக்குகள் ஒருங்கிணைக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ