Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!

எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே வெடித்துள்ள மோதலின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதிமுக இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வந்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த 2017, 2018 கால கட்டத்தில் இதே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக சசிகலா தரப்பு சென்றபோது, அந்த தீர்ப்புகளை பார்த்தால் தலைகீழாக இருக்கும். அப்போது எடப்பாடி தரப்பினர் தேர்தல் ஆணையம்தான் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏன் இப்படி சொல்கிறது? என மக்களிடம் பெரிய குழப்பம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேரதல் ஆணையம் தரப்பில் உட்கட்சி விவகாரங்களை ஆணையம் விசாரிக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு மனு தாக்கல் செய்தனர். அதற்கு எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உட்கட்சி விவகாரங்களை ஆணையம் விசாரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று ஆமோதித்ததுதான் தேர்தல் ஆணையம். ஆனால் நீதிமன்ற உத்தரவு இப்படி எதிராக வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தான் தேர்தல் ஆணையத்தின் பணி. அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் 2 கோஷ்டிகள் மோதிக்கொண்டு விசாரணைக்கு வந்தால் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என சட்டம் சொல்கிறது. அதிமுக சட்ட திட்டங்களில் என்ன மாற்றம் செய்தாலும், அதை பதிவு செய்வதும், சின்னம் வழங்குவதும் தான் தேர்தல் ஆணையத்தின் கடமை என சி.வி.சண்முகம் சொல்கிறார். அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்தால், தேர்தல் ஆணையம் தரப்பில் எப்படி வருவார்கள் என்றால், சசிகலா தரப்பு சொல்லும்போது நீங்கள் தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் சொன்னதை குறிப்பிடுவார்கள். எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தேவை இல்லாமல் விசாரணை மேற்கொண்டால், அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்றால், தேர்தல் ஆணையம் அடிபட்டு போய்விடும். அதனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைக்க அனுமதி வழங்கியது பாஜக தான். அவர்கள் ஆட்டத்தை தொடங்கி விட்டனர்.

edappadi palanisamy

பாஜக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி தரப்பை மிரட்டி பார்த்தார்கள். உருட்டிப் பார்த்தர்கள். கடந்த மாதம் கூட ரெய்டு எல்லாம் நடத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அசராமல் உறுதியாக உள்ளார். உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாஜக தரப்பில் எவ்வளவு அழுத்தம் வந்தபோதம் எடப்படி உறுதியுடன் நிற்கிறார். ஒரு காலத்தில் பாஜக ஆதரவோடுதான், பாஜக சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி கொண்டுதான் முதலமைச்சராக தொடர்ந்தார். அதிகாரத்தில் இருந்தபோது அவர்கள் சொன்னதற்கு எல்லாம் இசைவு கொடுத்தார். அசைந்து கொடுத்தார் என்பதை விட, அதிகாரத்தில் இல்லாதபோது பாஜக செய்கிற செயலை எல்லாம் எதிர்கொண்டு உறதியாக உள்ளார். அண்ணாமலை கட்சி வளர்ந்துவிட்டது என போலியாக பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்தவர். அவரது பேச்சைதான் மோடி கேட்பார். எதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், எடப்பாடியை அடிக்க காத்திருக்கிறது பாஜக தலைமை.

தமிழ்நாட்டில் பாஜக நிலைமை பற்றி மோடிக்கும், அமித்ஷாக்கும் நன்றாகவே தெரியும். கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். முதலில் அண்ணாமலை ஆட்டத்திற்கு அவர்கள் ஆடினார்கள். அதற்கு அப்புறம் அடி விழுந்த பிறகு 3 மாதம் தலைமறைவாக இருக்க சொல்லி லண்டனுக்கு அனுப்பினார்கள். திரும்ப வந்து கப்சிப் என்று தான் பாஜக இருக்கிறது. அண்ணாமலையை மாற்றி விடுகிறோம் எடப்பாடி சொன்னால் போதும் என்று இன்று வரை மாநில பாஜக தலைவரை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணம் அதுதான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் தலைவர் பட்டியலில் முதலில் இருப்பது அண்ணாமலை, 2வது நைனார், மூன்றாவது வானதி பெயர்கள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏன் அறிவிக்காமல் உள்ளனர். முதலில் ஜனவரி மாதம் அறிவிப்பதாக சொன்னார்கள். பின்னர் டெல்லி தேர்தல் முடிந்து அறிவிக்கப்படும் என்றார்கள். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கான சிக்னல். நீங்கள் கூட்டணிக்கு வருவதாக சொன்னால் தலைவரை மாற்றுகிறோம் என்கின்றனர். ஆனால் எடப்பாடி நீங்கள் மாற்றுங்கள், மாற்றாமல் இருங்கள் அது குறித்து எனக்கு கவலை இல்லை என்று நிற்கிறார்.

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

எடப்பாடி பழனிசாமியின் ஆசை என்பது அண்ணாமலையோ, பாஜகவோ இல்லை. அவருக்கு தேவை விஜய், தவெக. அவர்கள் வந்தால், திமுகவை பார்த்துக்கொள்ளலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் பாஜக தேவையில்லை என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இப்போது ஏன் செங்கோட்டையன் கொதித்து எழுந்தார்? பாஜக ஏன் அவரை கையில் எடுத்திருப்பதாக நாம் பேசி கொண்டிருக்கிறோம்?. செங்கோட்டையனின் கோபம் என்பது நியாயமானது தான். ஆனால் அதனால் என்ன பிரயோசனம்?. நிச்சயமாக யாரோ ஒருவர் செங்கோட்டையனை தூண்டி விட்டுள்ளனர். அதை மறுப்பதற்கில்லை. அவர் சுயமாக முடிவெடித்திருந்தால் அவர் என்றைக்கோ ஒரு விவகாரத்தை கையில் எடுத்திருப்பார்.

ஒரு 6,7 மாதங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர், எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த சந்திப்பை பச்சை பொய் என்று சொன்னார். செங்கோட்டையனுக்கு ஒரே நோக்கம் பிரிந்து கிடக்கிற அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அதனை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டிற்கு அதிமுக, திமுக என்ற 2 திராவிட கட்சிகள் தேவை. மூன்றாவதாக ஒரு தேசிய கட்சி தமிழ்நாட்டிற்குள் வந்தால் அது ஆபாத்தானது. செங்கோட்டையனின் மற்றொரு நோக்கம் பாஜக கூட்டணியாகும். அதற்கு காரணம் சிறுபான்மையினர் வாக்குகளை நாம் எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. அதனால் பாஜகவுக்கு செல்லலாம் என செங்கோட்டையனுக்கு ஆசை வந்திருக்கலாம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பிரச்சினை அவர் மிகவும் கடினமாக உள்ளார். சர்வாதிகாரி போல தன்னை காட்டிக்கொள்கிறார்.  செங்கோட்டையனை போல, நத்தம் விஸ்வநாதனை போல, சி.வி.சண்முகத்தை போல அவரும் ஒரு இரண்டாம் கட்ட தலைவர்தான். ஆனால் அதிகாரம் உச்சபட்சமாக உள்ளது. ஆனால் அவர் இறங்கிவந்து பேசி இருந்தால் இந்த பிரச்சினையே நடந்திருக்காது. உங்களை மதித்து வீடு தேடி வந்தவர்களை நீங்கள் பேச அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அவர்களிடம் உங்களது கருத்தை சொல்லி இருக்க வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்க ஒரு திட்டம் போட்டிருக்க வேண்டும். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை போய் பாருங்கள், என்ன பதவி கேட்கிறார்கள் என்று பேசுங்கள் என்று அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.  இப்படி சொல்லி இருந்தால் மூன்று விஷயங்கள் நடந்திருக்கும். முதலாவது எடப்பாடி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளார், 2-வது அவர்களுக்கு கட்சியில் பதவி கொடுக்க தயாராக உள்ளார், மூன்றாவதாக இயக்கம் வலிமை அடைந்திருக்கும்.

"கோடநாடு வழக்கு- ஆகஸ்ட் 1-ல் போராட்டம்"- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு!
Video Crop Image

ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி அதனை உணர தவறிவிட்டார். அங்கேதான் அவர் பெரிய தவறு செய்தார். இந்த விவகாரம் குறித்து ஜுலை மாதத்தில் பேசலாம், அக்டோபரில் முடிவு எடுக்கலாம். அதுவரை இது தொடர்பாக பேச வேண்டாம் என்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இணையானவர்களிடம், அப்புறம் பேசலாம் என்றால் என்ன அர்த்தம்?. மறைந்த ஜெயலலிதா அப்படி சொன்னால், அவர் கேட்டிருப்பார்கள். இவர் எடப்பாடி என்பதால்தான் அவரது வீடு தேடி வந்திருக்கிறார்கள். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தவறு செய்து விட்டார். அதனை சுட்டிக்காட்டத்தான் 6 பேரும் சென்றார்கள். செங்கோட்டையனின் முதல் நோக்கம் சரி. 2வது பாஜக வேண்டும் என்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ