Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டில் நடக்கப் போகும் சம்பவங்கள்.. அமித்ஷா அசைன்மெண்ட் ரெடி! திகில் கிளப்பும் அய்யநாதன்!

தமிழ்நாட்டில் நடக்கப் போகும் சம்பவங்கள்.. அமித்ஷா அசைன்மெண்ட் ரெடி! திகில் கிளப்பும் அய்யநாதன்!

-

- Advertisement -

1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எப்படி ஒரு  மனநிலை உருவாகியதோ அதுபோன்ற ஒரு சூழலை திமுகவுக்கு எதிராக உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதன் சாதக பாதகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளதே மிகவும் சவாலானது தான். 2021 தேர்தலுக்கு பின்னால் நேற்று வரை அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே பாஜக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று ஜெயக்குமார் சொன்னார். எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பங்கிற்கு, 2029 வரை பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார். இன்றைக்கு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டுள்ளது? தமிழ்நாட்டில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக வளர்ந்திருக்கிறது என்பதற்காகவோ, அல்லது பாஜகவுடன் கூட்டணியை வைத்தால் ஆட்சியை பிடித்து விடுமா? என்றால் இல்லை. அழுத்தத்தின் காரணமாக அமித்ஷா இந்த கூட்டணியை அமைத்துள்ளார். அதிமுகவினருக்கு எதிரான வழக்குகள், குற்றச்சாட்டுகள், அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் இதை எல்லாம் வைத்து ஒரு அழுத்தத்தின் அடிப்படையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய சவாலாகும்.

கட்சியின் செயற்குழுவை கூட்டி எடப்பாடி சொன்னது என்ன என்றால்? பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுகவில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்ற சிலர்தான் பாஜக உடன் கூட்டணி வேண்டும் என்று சொன்னார்கள். எடப்பாடிக்கு அதில் எந்த விதத்திலும் பங்கு இல்லை. அவர் விரும்பவும் இல்லை. மற்றொருபுறம் ஜெயக்குமார் வரைக்கும் பாஜகவுக்கு எதிராக உள்ளவர்கள். அதனால் இது ஒரு வெற்றிக்கூட்டணி என்று சொல்வது அமித்ஷாவின் வாய்மொழி தானே தவிர கள எதார்த்தத்திற்கு எந்த விதத்திலும் சாதகமானது இல்லை.

ஒரு கூட்டணி அமைப்பதால் என்ன சாதகம்? வெற்றி பெற முடியும் என்பது தான். அது பாஜகவால் வெற்றி கிடைக்காது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. உங்களோடு நாங்கள் இருந்தால் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 50 ஆயிரம் சிறுபான்மை வாக்குகளை இழக்கிறோம், எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம். இப்படி செங்கோட்டையனும் சொல்லி இருக்கிறார். ஜெயக்குமாரும் சொல்லி இருக்கிறார். எடப்பாடியும் ஒத்துக்கொண்டிருக்கிறார். அதில் என்ன மாற்றம் வந்தது? திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி  முதல் ஆப்ஷன் பார்த்தது தமிழக வெற்றிக்கழகம் தான். ஆனால் பாஜக பார்த்தது வேறு வழியில்லாமல் ஒரே ஆப்ஷனாக அதிமுக. அதனால்தான் அழுத்ததை கொடுத்து இதை சாதித்தார்கள். இல்லாவிட்டால் காலையிலேயே அமித்ஷா அறிவித்துவிட்டு போயிருப்பார். ஆனால் ஏன் மாலை வரை ஆனது. அந்த நிகழ்ச்சிக்கு ஏன் மற்ற கூட்டணி கட்சிகள் வரவில்லை. யாரும் இதை அங்கிகரிக்கவில்லை. எதோ ஒரு அழுத்தம் கொடுத்து எடப்பாடியை வர வழைத்துள்ளார்கள். வந்துவிட்டார். சொல்லிவிட்டார்கள். முடித்துவிட்டார்கள். இனி எடப்பாடிக்கு தான் கஷ்டம்.

ramadoss

பாமகவில் முகுந்தன் விவகாரத்தில் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் டிசம்பர் மாதத்தில் பிரச்சினை வந்தபோது கூட்டணி தொடர்பாக அன்புமணி எடுத்த முடிவு தவறானது. இனிமேல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அப்போதே ராமதாஸ் சொல்லிவிட்டார். தற்போது ராமதாஸ் அந்த முடிவை எடுத்து அன்புமணியை பாமக செயல் தலைவராக பதவி இறக்காமல் இருந்திருந்தால் அன்புமணி நேடியாக சென்று அமித்ஷாவின் கைகளை பிடித்துக்கொண்டு பாஜக கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம் என அறிவித்திருப்பார். இதைதான் ராமதாஸ் தவிர்க்க பார்த்தார். அதேபோல் தவிர்த்துவிட்டார். பாஜகவின் கூட்டணியின் அங்கமாக இருந்து, அங்கே நிற்க விரும்பவில்லை. இங்கே பெரிய கட்சிகள் திமுக, அதிமுக. அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, எனக்கான இடங்களை பெற்று நான் நின்று கொள்கிறேன். பாஜக எங்களுக்கு தேவையில்லை என்பதுதான் ராமதாசின் முடிவாகும். விக்கிரவாண்டி தேர்தலில் தனித்து நின்று பாமகவின் வலிமையை நிரூபித்துள்ளார்.  பாஜக இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று அவர் சொல்லவில்லை. என்டிஏ என்கிற கூட்டணிக்குள் சென்று அவர்கள் பேசி இடம் வாங்கித் தருவதை ராமதாஸ் விரும்பவில்லை.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரிய பிரச்சினையாகும். கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் உறுதியாக அதிமுக இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை வைத்துக்கொண்டு அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி என்பதை அவர் தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் அமித்ஷாவே பேசிவிட்டு சென்றுவிட்டார்.  பாஜகவின் கூட்டணி என்பது என்ன?அந்த கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்டது. அண்ணாமலை பாஜகவுக்கு 11 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொல்கிறார். சண்முகம், பாரிவேந்தர், டிடிவி தினகரன் ஆகியோரது வாக்குகளை எடுத்துவிட்டால் பாஜகவின் வாக்கு சதவீதம் என்ன?

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நலத்திட்டங்களை மக்கள் முக்கியமாக கருதும் வரை எந்த கட்சியாலும் திமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது. ஊழல் என்கிற குற்றச்சாட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு முழக்கம் அல்ல. இதற்கு பிறகு தமிழ்நாட்டில் இன்னும் சட்டம் ஒழுங்கு சீர்கெட போகிறது. ஏனென்றால் அமித்ஷா வந்துவிட்டு போயிருக்கிறார். அவரது திட்டம் என்ன என்று யாருக்கும் தெரியாது. போதைப் பொருள் அதிகரிக்கும் என்கிறார்கள். எல்லாம் டிசைன் தானே. தமிழ்நாட்டில் 5 முனை போட்டி என்று இருந்தது 4 முனை போட்டியாக மாறிவிட்டது. இது 3 முனை போட்டியாக மாற வாய்ப்பு உள்ளது. பாமக, விஜயின் வலிமையை பொறுத்து அவர்களுடன் சேர்ந்து, நாம் தமிழர் மற்றும் இன்னும் பிற கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது. மக்கள் நல கூட்டணி போல இதுபோன்ற கூட்டணியும் உருவாக வாய்ப்பு உள்ளது. சீமானை பெரியாரை திட்டும்போது தவெகவினர் மவுனமாக தான் இருந்தனர்.

ராமதாசை பொறுத்தவரை குறைந்தது 15 எம்.எல்.ஏ-க்களாவது பெற வேண்டும் என நினைக்கிறார். பாஜக கூட்டணி என்பதில் அவர் எதிர்ப்பில் உள்ளார். பாமக ஒரு மதவாத கட்சியாக மாறுவதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. என்எல்சி போராட்டம் உள்ளிட்ட பாமகவின் எந்த போராட்டத்திற்கும் பாஜக ஆதரவு அளித்தது கிடையாது. அவர்களுடன் கூட்டணி வைத்தது தான் பாமகவின் தோல்விக்கு காரணம் என்று ராமதாஸ் நினைக்கிறார். தமிழ்நாட்டில் 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக எப்படி ஒரு மூடை உருவாகியதோ அதுபோன்ற ஒரு மூடை உருவாக்க பார்க்கிறார்கள். அதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் ஸ்டிராட்டஜி ஆகும். அதனால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ