Homeசெய்திகள்கட்டுரைபொட்டில் அடிச்ச பட்னாவிஸ்!  நாயுடு பல்டி! அலறிய தமிழிசை!

பொட்டில் அடிச்ச பட்னாவிஸ்!  நாயுடு பல்டி! அலறிய தமிழிசை!

-

- Advertisement -

பாஜக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை அக்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக்கோரி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நடத்திய கையெழுத்து இயக்கம் குறித்து  பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறும் இயக்கம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தி படிப்பதில் தமிழக மாணவர்கள் தவிப்பதாக தமிழிசை குற்றம்சாட்டுகிறார். ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் இந்தளவிற்கு படித்ததற்கு காரணமே இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் பெண்கள் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்ததற்கு திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்தான் காரணம். தமிழிசை சொல்கிற சங்பரிவார் ஆளுகிற மாநிலங்களில் பெண்கள், குழந்தைகள், தலித்துகள், சிறுபான்மையினர் என்ன பாடு படுகிறார்கள்? என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த லட்சனத்தில் இவர்கள் இந்தி படிக்காததால் தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், தமிழக மக்களை இந்தி கற்றுக்கொள்ள வைக்காமல் ஓயமாட்டேன் என்றும் ஒரு பொய்யான விஷயத்திற்காக போராடுவது போன்று ஒரு பிம்பத்தை  தமிழிசை கட்டமைக்க பார்க்கிறார்.

பாஜகவினர் கட்டமைத்த பிம்பத்தை அவர்களது கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவே உடைத்துள்ளார். சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையை மேலோட்டமாக பார்த்தோம் என்றால் அதில் 10 மொழியை படித்துக் கொள்ளுங்கள்,  20 மொழியை படிக்க வைக்கப் போகிறேன் என்று சொல்வது போல இருக்கும். ஆனால் உண்மையில் சந்திரபாபு நாயுடு மோடியை களாய்த்து விட்டிருக்கிறார். தமிழன், தெலுங்கர், கன்னடர் ஆகியோர் இன்று நன்றாக இருப்பதற்கு காரணம் ஆங்கிலம் படித்தது தான். இந்தி கொண்டு வந்தபோது அதை படிக்காமல், ஆங்கிலம் படித்ததால் தான் தமிழர்கள் உலகம் எங்கும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். இருமொழி கொள்கையால் தான் தமிழர்கள் ஆங்கில அறிவில் இந்த அளவிற்கு வந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழிசை உண்மையில் தமிழர்களின் வளர்ச்சிக்காகவா போராடுகிறார்?. தமிழன் அடைந்திருக்கும் வளர்ச்சியை காலை பிடித்து இழுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

கடந்த 2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் உள்ள ஐ.டி. பூங்காக்களின் விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களான காஷ்மீரில் 10, சத்தீஸ்கரில் 1, உத்தரகாண்டில் 7, பாஞ்சாப் 32, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா 36, குஜராத்தில் 52, மத்திய பிரதேசத்தில் 45,  பீகாரில் 55, ஜார்க்கண்டில் 13, ஒடிசாவில் 19 ஐ.டி பூங்காக்கள் உள்ளன. வடமாநிலங்களில் சராசரியாக 50-க்கும் கீழான எண்ணிக்கையில்தான் ஐ.டி. பூங்காக்கள் உள்ளன. அதேவேளையில் இந்தி பேசாத மாநிலங்களான கேரளாவில் 96, தமிழ்நாடு 208, புதுச்சேரியில் 2, கர்நாடகா 106, ஆந்திரா 57, தெலுங்கானா 65, மகாராஷ்ரா 136 ஐ.டி. பூங்காக்கள் உள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலமான கேரளாவின் அருகில் கூட வரமுடியவில்லை. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 208 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலம் கல்வி பயின்றதால்தான் தென் மாநிலங்கள் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

மகாராஷ்டிரா முதலமைச்சராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ், மராத்தி தான் நம் மொழி, இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கற்க வேண்டும். மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி கலாச்சாரம் அடையாளத்தில் மராத்திக்குக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை ஏன் 2025ல் அவர் சொல்கிறார் என்றால், அந்த அளவிற்கு அங்கே இந்தி ஆதிக்கம் உள்ளது. தமிழ்நாடு போன்று அங்கு இந்தி எதிர்ப்பு நடைபெறவில்லை. அதனால் பாஜகவை சேர்ந்த முதலமைச்சரே எங்கள் மராத்தியை காப்பாற்றுங்கள் என்கிறார். எல்லோருக்கும் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக பட்னாவிஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் மராத்தி மட்டுமின்றி எல்லா தாய் மொழிகளையும் அழித்துவிட்டு சமஸ்கிருதத்தை கொண்டுவர வேண்டும். அதற்கு முதலில் இந்தியை கொண்டுவர வேண்டும். இந்த சதி பாஜகவை சேர்ந்த பட்னாவிசே  அம்பலப்படுத்துகிறார். அவர் பொட்டில் அடித்தது போன்று சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ் எல்லா தாய்மொழிகளையும் அழிக்க பார்க்கின்றீர்கள். ஏற்கனவே மராத்தி, குஜராத்தி சினிமாவை அழித்துவிட்டனர். வங்க இலக்கியம், வங்க சினிமாத்துறை அழிவை சந்தித்துள்ளது.

தமிழ்நாடு, கேராளவில் இலக்கியம், சினிமா இந்தளவிற்கு காப்பாற்றப்பட்டுள்ளது என்றால், அதற்கு காரணம் இந்தியை நுழையவிடாமல் தடுத்ததுதான். நமது தாய் மொழியை பாதுகாத்து, ஆங்கில மொழியையும் கற்றதால் தான். தமிழர்கள பிற மொழிகளை படிப்பதிலும் சரி,  தேவையான அறிவியல் கருத்துக்களை பெறுவதிலும் நாம் முதன்மையானவர்களாகவும், வல்லவர்களாகவும் திகழ்கிறோம். இன்றையக்கு மராத்தியில் உள்ள ஆய்வாளர்கள் தமிழ்நாடு போன்று நாம் இல்லையே என்று பதறுகிறார்கள். தமிழ்நாட்டை போன்று ஆங்கில அறிவு இல்லையே என்று சந்திரபாபு நாயுடு பொறாமைப்படுகிறார். இப்படி பாஜக தலைவர்களும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் இருமொழி கொள்கையால் தமிழ்நாடு வளம்பெற்றுள்ளது என சொல்லாமல் சொல்கிறார்கள்.

மும்மொழி கொள்கை என்று சொல்கிறீர்கள். அப்படி தனது தாய் மொழியை அழித்து விட்டு இந்தியை வளர்த்தவர்களின் நிலைமை இன்று கண்ணீர் விட்டு கதறும் விதமாக உள்ளது. ஆனால் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறோம். மருத்துவம், கல்வி, பெண்கள் கல்வியில், தலித் முன்னேற்றம், சிறுபான்மையினர் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறோம். உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் முன்னிலை வகிக்கிறோம். இந்தி மொழி வராததால் தமிழ்நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தி படித்ததால் வடமாநிலங்களில் எந்தவித வளர்ச்சியும் இன்றி இருக்கிறார்கள். இப்படி உங்கள் கட்சி முதலமைச்சர் பட்னாவிஸ் சொல்கிறார். உங்கள் கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சொல்கிறார்.

இந்தி உங்களது தாய் மொழியாக இருக்கலாம். ஆனால் எங்களை ஆதிக்கம் செலுத்துகிற போது எங்களுக்கு கோபம் வருமா? இல்லையா?. இந்தி படித்துவிட்டு நான் என்ன செய்கிற போகிறேன்?. எனக்கு தேவைப்பட்டால் சௌராஷ்டிராவோ, உருது மொழியோ, குஜராத்தியோ பத்துவிட்டு போகிறேன். இந்தி படித்தால் ஏதாவது ஒரு நாட்டில் வேலை கிடைக்கும் என்று சொல்லுங்கள்?. ஐ.டி நிறுவனத்தில் உயர் பதவிக்கு செல்வதற்கு இந்தி கட்டாயம் என்று சொல்லுங்கள்?. பானிப்பூரிக்காரனிடம் பேசுவதற்கு தேவைப்படுகிற இந்தி மொழியை நான் சிறு வயதில் இருந்தே படிக்க வேண்டுமா?. இதுபோன்ற கேள்வியை திராவிடர் கழகமோ, திமுகவோ கேட்கவில்லை. பாஜக முதலமைச்சரும், கூட்டணி கட்சி தலைவரும் தான் கேள்வி எழுப்புகிறார்கள். அப்போது, புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நமக்கு வர வேண்டிய நிதியை நிறுத்துவாதற்கு பாஜக போடுகின்ற நாடகம்தான் இது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற அரசியல்தான் என்பதை கட்சிகள், சாதி மதம் கடந்து தமிழர்கள் உணர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ