ஹமாஸ் இயத்துடனான போரில் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் கூறியதாவது:- ஈராக் போரே அமெரிக்காவுக்கு சேதராத்தை ஏற்படுத்திய போர் என்று அந்நாட்டு தேசிய முதலாளிகள் தெரிவித்தனர். அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச ஆயுத வியாபாரிகள் தங்களது நலனுக்காக போரை விரும்புவார்கள். அண்மையில் அமெரிக்காவின் அமைச்சராக நியமிக்கப்பட்ட துளசி கேபாட் என்பவர் காசா மீதான போர் அமெரிக்காவுக்கு பிரயோஜனமான போர் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஜெப்ரி சாக்ஸ் என்பவர் தனது சமூக வலைதள பதிவில் காசா மீதான போர் நெதன்யாகு உடையது என்று தெரிவித்திருந்தார். மேலும், ஈராக் உடன் அமெரிக்காவுக்கு போரை ஏற்படுத்தியது இஸ்ரேல்தான் என்றும், இஸ்ரேல் அழுத்தம் காரணமாகதான் அமெரிக்கா வேலை செய்கிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். அதனை, டொனால்டு டிரம்பும் ரிட்விட் செய்திருந்தார். இதற்கு முன்பு டிரம்ப், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸ் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அவர் இஸ்ரேல் பக்கம் இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் அவர் செய்தியை எப்படி பார்க்க வேண்டும் என அவர்களுக்கு தெரியவில்லை.
அமெரிக்கா பழையபடி வல்லரசு என்பதை நிருபிக்க வேண்டும் என்பதற்காக டிரம்ப் வருகிறார். இவரை போலவே ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரும் வல்லரசுகள் ஆவர். இவர்கள் மூவரும் உலகை பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்பது தான் டிரம்பின் திட்டம். அதன்படி கனடா, கிரீன்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் அமெரிக்காவினுடையது என டிரம்ப் எண்ணுகிறார். யூதர்கள் அமெரிக்காவை ஆட்டி வைக்கிறார்கள் என்பது தவறு. அமெரிக்க ஆயுத வியாபாரிகள் இந்த போர் நல்லது என்றனர். ஆனால் டிரம்ப் இந்த போரால் அமெரிக்காவுக்கு நன்மை இல்லை என்று சொல்கிறார். உலகம் முழுவதும் தற்போது வலதுசாரிகள் ஆட்சியை பிடித்து வருகின்றனர். நெதன்யாகுவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதிபர் ஜோபைடனும் அமைதி பேச்சுவார்த்தையை ஒப்புக்கொண்டார். ஜோபைடனுக்கு பர்சனலாக நெதன்யாகுவை பிடிக்காது. இருந்தாலும் அழுத்தம் காரணமாக போருக்கு ஒப்புக்கொண்டார். இந்நிலையில், நெதன்யாகு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராமல் இருக்க காரணங்களை கூறி தட்டிக்கழிக்க முயற்சித்தார். ஆனால் ஜோபைடன் அவரை அழைத்து அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்தம் 3 நிலைகளில் நடைபெற உள்ளது. முதலில் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். ஹமாஸ் தரப்பில் 33 பேரை விடுவிக்கின்றனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். 2ஆம் கட்டமாக எஞ்சியுள்ளவர்களை மொத்தமாக விடுவிக்கப்படுகின்றனர். 3ஆம் கட்டத்தில் தான் தெளிவு இல்லாமல் உள்ளது. அடுத்து பாலஸ்தீன அரசிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க உள்ளனரா? அல்லது ஹமாசிடம் ஒப்படைக்க உள்ளனரா? என தெரியவில்லை. ஐ.நா அமைதிப்படை வரப்போகிறதா? என்று தெரியவில்லை. ஆனால் முதல் 2 படி நிலைகள் சரியாக உள்ளன. இஸ்ரேலும் படிப்படியாக படைகளை பின்வாங்கும்.
இந்த போரில் இஸ்ரேல் ஒரு பெரிய சூப்பர் பவர் என்பது போல காண்பித்து வந்தனர். ஆனால் அது எதுவும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துவிட்டார். ஹமாஸ் அமைப்பு உடனான போரில் இஸ்ரேல் தோற்றுவிட்டது. இஸ்ரேல் போரில் ஹமாஸ் எவ்வளவு பேரை இழந்ததோ அவர்கள் அனைவரும் ரீபிளேஸ் ஆகிவிட்டனர். ஹமாஸ் பழைய பலத்திற்கு வந்துவிட்டது. இஸ்ரேல் எவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்துக்கொண்டு, லண்டன் நகர அளவிலான காசாவுக்குள் பெரிய ராணுவத்தை அனுப்பியபோதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதும் காசாவின் 3ல் ஒரு பகுதிதான் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த போர் இப்படிதான் போய் முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் மக்களை மிரட்ட வேண்டும் என நினைத்தனர். இதேபோல் தான் லெபனானில் மக்களை மிரட்டி ராணுவ ஜெனரலை அதிபராக கொண்டுவந்தனர்.
காசா போர் நிறுத்தம் என்பது டிரம்புக்கு கிடைத்த வெற்றிதான். அவர் ஒரு இமேஜை கிரியேட் பண்ண விரும்புகிறார். தான் சொன்னால் அது நடக்க வேண்டும். கிரீன்லேண்ட் மக்கள் தங்களுக்கு சுய உரிமை வேண்டும் என கேட்கிறார்கள். அவர்கள் அமெரிக்கா உடன் சென்றுவிடுவார்கள். அமெரிக்காவை எதிர்க்கும் அளவுக்கு டென்மார்க் பலம் வாய்ந்த நாடு அல்ல. கிரின்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அமெரிக்காவுடன் இணைத்துவிடுவார்கள்.
நெதன்யாகு, நீதித்துறை கட்டுபாட்டில் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். காசாவுடன் போர் நிறுத்தம் வந்தால், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் சிறைக்கு செல்வார். டிரம்புக்கு அவர் முழுமையாக ஆதரவு அளித்தால் ஜெயிலுக்கு போகாமல் தடுக்க முடியும். நெதன்யாகு ஈரானுடன் போர் புரியும் திட்டத்தை வைத்திருந்தார். ஜோ பைடன் இருக்கும்போது அவருடன் பேசி ஈரான் போரை தொடங்க முயற்சி செய்தனர். ஆனால் டிரம்ப் பைடனுடன் பேசி போர் நடைபெறாமல் தடுத்துவிட்டார். ஆண்டனி பிளிங்கன் நடுநிலமைக்கு வந்துவிட்டார். காசா போரின் முடிவு இஸ்ரேல் மீது கட்டமைக்கப்பட்ட பெரிய கபிம்பத்தை உடைத்தது. மேலும், இஸ்ரேல் ஜனநாயக உரிமைகளுக்காக போருக்கு செல்வதாக கூறப்பட்டது பொய்யானது. அமெரிக்க பொருளாதாரத்தையும், போர்களையும் இஸ்ரேல் தீர்மானிக்கவில்லை
காசாவில் போர் முடிவுக்கு பின்னர் யார் ஆளுவது என்பது குறித்து ஹமாஸ், பாலஸதீன அத்தாரிட்டி இடையே போட்டி வராது. ஐ.நா. சபையில் காசாவுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அமெரிக்கா மட்டும்தான் ஆதரவளித்தது. கியுபாவை தனிமைப்பத்தும் போதும் அப்படித்தான் செய்தார்கள். இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் போட்டுவிட்டு பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதல் நிறுத்த 6 மாதங்கள் வரை ஆகலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்வுகள் இஸ்ரேலுலுக்கு எதிராக செல்கிறது என புரிந்துகொள்ள வேண்டும். டிரம்ப் இதனை புரிந்து கொண்டு பிராந்திய ஆளுமைக்காக சென்றுவிட்டார். இற்காக இடங்களை எல்லாம் வரைறுக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.