Homeசெய்திகள்கட்டுரைஇசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

-

இசை ஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் !!

இசைத்துறையில் எப்பொழுதும் முடிசூடா மன்னனாகத் திகழும் இளையராஜா, பொது வாழ்க்கையில் கேலிச்சித்திரமாக மாறிப்போனது வறுத்தம் அளிக்கிறது.

 இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

1976ல் நடிகர் சிவக்குமார்- சுஜாத்தா நடிப்பில் வெளிவந்த “அன்னக்கிளி” படத்திலிருந்து தனது இசைப் பயணத்தை தொடங்கிய இசை ஞானி இளையராஜா தற்போதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்து உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்ற தகுதியை பெற்றுள்ளார்.

அன்னக்கிளி

இளையராஜா 1943 ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்தார். சாதாரண ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த அவர் தெருக்களில் கம்யூனிஸ்ட் பாடல்களை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கியவர்.

இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை

படிப்படியாக வளர்ந்து இன்று 1000 படங்களுக்கும் 5000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்தும் சாதனை படைத்துள்ளார். இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்று ஆலம் விழுதைப்போல் பரந்து விரிந்து செழித்திருக்கிறார்.

இந்திய அரசால் வழங்கப்பட்ட “பத்மபூஷன் விருது” நான்கு முறை தேசிய விருது என்று திரைத்துறையில் அவர் வாங்காத விருதே இல்லை. அந்த அளவிற்கு இசை உலகில் ஆளுமை செலுத்தியவர்.

பத்மபூஷன் விருது

அவர் 1976ல் தொடங்கிய இசைப் பயணம் 80…90ம் ஆண்டு காலக் கட்டத்தில் தன் இசையால் இளைஞர்களை ஈர்த்து வைத்திருந்தார். தற்போது வரை இசைப் பிரியர்களுக்கு அவர் தான் ராஜா.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

“கோட்டையுமில்லை கொடியுமில்லை… எப்பவும் நான் தான் ராஜா…” என்ற ஆளுமையோடு வளம் வந்தார்.

உலகமே புகழும் ஒரு கலைஞர், இடையில் நிதானம் இல்லாமல் பேசியதும், அரசியல் சர்ச்சையில் சிக்கியதும் பெரும் விவாதப் பொருளாக மாறிப்போனது.

SPB & Ilayaraja

இளையராஜா இசை அமைத்த பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் வெளிநாட்டு இசை கச்சேரியில் பாடினார். அப்போது என் இசையில் உருவான பாடல்கள் கச்சேரியில் பாடப்பட்டால் அதில் வரும் வருமானத்தில் எனக்கு“ராயல் டி” கொடுக்க வேண்டும் என்று இளையராஜா அடம்பிடித்தார். அதனால் இசை ஆர்வாலர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி இசை அமைப்பாளர்கள் என்று எல்லோரும் விமர்சனம் செய்தார்கள்.

நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை

அவர் பாடல் இயற்றி, அவர் குரலில் பாடி, அவர் இசை அமைத்த பாடலுக்கு ராயல் டி கேட்பது நியாயம்.ஆனால் பாடல் ஆசிரியர் வேறு ஒருவர், பின்னணி குரல் மற்றொருவர், அந்தப் படம் தயாரிப்பாளர் இன்னொருவர். இவர் பங்களிப்பு இசை அமைத்தது மட்டுமே.

இந்த நிலையில் இளையராஜா ஒருவர் மட்டும் “ராயல் டி” கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். அதன் பின்னர் பின்னணி பாடகர் எஸ்.பி.பி.இயற்கை எய்தினார். அந்த செய்தி முடிவிற்கு வந்தது.

கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு இளையராஜா, அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு கட்டுரை எழுதினார். அதன் வாயிலாக நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அம்பேத்கரின் அறிவு, ஆற்றலுடன் மோடியை ஒப்பீடு செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இளையராஜா அம்பெத்காரைப் பற்றி எதுவும் தெரிந்துக் கொள்ளாமல் மோடியுடன் ஒப்பீட்டு எழுதுயுள்ளார். இது தவறானது என்று அரசியல் களத்தில் விமர்சனம் எழுந்தது.

Ramana Malai

ஆன்மீகம், தியானம், இசை, பாடல் என்று தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்து எல்லோரையும் மகிழ்வித்து வந்த இளையராஜாவை உலகம் வாழ்த்தியது.. பாராட்டியது. அதே மனிதர் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத கொள்கை சார்ந்த விஷியத்தில் நுழைந்து கருத்து தெரிவிப்பது பெரும் விமர்சனத்தில் முடிந்தது.

கோட்டையுமில்லை.. கொடியுமில்லை எப்பவும் நான் ராஜா என்று பாடியவர், ஒரு கட்டத்தில் கோட்டையின் மீதும், பதவியின் மீதும் ஆசை வந்தால் விமர்சனத்தை தாங்கியே தீரவேண்டும்.

MUST READ