Homeசெய்திகள்கட்டுரைகெட்ட கனவிலிருந்து விடுபட்டு-சிறந்த உறக்கத்திற்கு!

கெட்ட கனவிலிருந்து விடுபட்டு-சிறந்த உறக்கத்திற்கு!

-

கெட்ட கனவிலிருந்து விடுபட்டு-சிறந்த உறக்கத்திற்கு!

தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு ஒவ்வொரு வருக்கும், விதவிதமான கனவுகள் வராலம், அதிலும் சிலருக்கு கெட்ட கனவுகள் தான் அதிகம் வருகின்றது.

கனவுகள் காணமல் தூங்குவது சாத்தியமில்லை, அப்படி காணும் கெட்ட கனவில் இருந்து விடுபட முடியுமா? அந்த கனவுகள் உணர்த்துவது என்ன?

நம் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்கிறார், சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

தூக்கத்தில் கனவு காண்பதை நம்மால் தடுக்க முடியாது, நாம் உறங்க தொடங்கும் நொடியிலே கனவுகள் வருவதில்லை, உறங்கியதிலிருந்து 90 நிமிடம் கழித்து தான் கனவு வரும்.

அதை Rapid Eye Movement Sleep  என்கிறோம். அப்படி தான் நம் மூளையின் அமைப்பும் இருக்கும், சில கனவுகளில் நாம் ஓடுவது, தண்ணீரில் மிதப்பது, கீழே விழுவது போன்ற கனவுகள் எல்லாம் வரும்.

இதை நம் முன்னோர்கள், நாம் எதை நினைத்து கொண்டு உறங்குகிறோமோ, அது தான் கனவாக வரும் என்பார்கள், ஆனால் சில ஆய்வாளர்கள் கூறுவது கண்கள் சுழன்றாலும் உடல் அசைவற்ற நிலையிலே இருக்கும்.

அந்த நேரத்தில் வரும் கனவுகள் உண்மையென நினைத்து விடுவோம். நம்மை அறியாமல், அந்த நொடியில் எதுவும் செய்து விடக்கூடாது, என்பதற்காக தசைகள் முடங்கியிருக்கும்.

அதிலும் சில கனவுகள், தீய சக்தி துரத்துவது, மாடு முட்டுவது போல, எல்லாம் வரும் அதில் நம்மை அறியாமல் துடித்து எழுவோம்.

கனவுகள் என்பது நமக்கு மட்டுமல்ல. சிறு சிறு குழந்தைகளுக்கு கூட வரும், குழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பதை, அழுவதை, சினுங்குவதை எல்லாம் பார்த்திருப்போம், குழந்தைகள் விழித்து இருக்கும் பொழுது நாம் சிரிக்க வைத்ததையும், அழுக வைப்பதையும், நினைத்து தான் அவர்கள் தூக்கத்தில் அப்படி நடந்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் தினம் தினம் நடக்கும் செயலை நினைத்து கொண்டே உறங்குவது, தேவையில்லா சிந்தனையில் மூழ்குவது, மறக்க நினைக்கும் செயலை நினைத்து மீண்டும் கவலை கொண்டாலோ, இந்த மாதிரியான கனவுகள் வர அதிக வாய்ப்புகள் இருக்கும்.

தீய கனவை நினைத்து கவலை கொண்டவர்களை விட, அவை பலித்து விடுமோ என்று அஞ்சுபவர்கள் தான் அதிகம். கனவுகள் வருவது இயல்பு தான், அது நடந்து விடுமோ என்று குழப்பங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.

தீய கனவுகளோ, அல்லது தேவையற்ற கனவுகளோ, வர வேண்டாம் என்று நினைத்தால்.

இரவில் உறங்கும் முன் நல்ல புத்தகங்கள் படித்துக்கொண்டே உறங்கலாம், படித்துக்கொண்டே உறங்கசெல்லும் பொழுது மூளைக்கு சற்று ஓய்வு கிடைக்கும், தேவையற்ற சிந்தனைகளையும் நினைக்காமல் இருக்கும்.

மனதிற்கு பிடித்தமான இன்னிசை பாடல்களை கேட்டுக்கொண்டு உறங்கலாம், அப்படி கேட்பதால் மன அமைதி ஏற்படும். இன்னிசை பாடலை நாம் கேட்டுக் கொண்டு உறங்கும் பொழுது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

மனஅழுத்தம் அதிகமானால். மனம் மட்டுமல்ல, மூளையும் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் சிலர் மனநல நோயாளிகளாக மாறுகின்றனர். எப்பொழுதும் மனம் தேவையற்ற எண்ணங்களை நினைத்தால், கண்களை மூடி பத்திலிருந்து ஒன்று வரை, மெதுவாக பின் வரிசையில் எண்ணுங்கள். எண்ணி முடித்ததும் உங்கள் முகம் புன்னகைக்கும்.

அப்படியும் இல்லை என்றால். உங்களுக்கு பிடித்த ஒன்றையோ அல்லது, ஒருவரையோ நினைத்து இரண்டு நிமிடம், கண்களை மூடினால் போதும்.

தேவையற்ற கனவையோ, சிந்தனையோ உங்கள் மனம் நினத்தால். அதிகம் பாதிக்கப்படுவது மூளையும் இதயமும் தான். எனவே இரவில் தூங்குவதற்க்கு 10 நிமிடத்திற்கு முன், கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து விட்டு தூங்குங்கள்.

MUST READ